எத்தனை தலைமுறை எடுத்தாலும் இந்த ஹீரோ பைக் நின்னு பேசும்! இந்திய தயாரிப்பை பார்த்து அதிர்த்துபோன இத்தாலி மக்கள்

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம், நடைபெற்றுவரும் EICMA 2024 கண்காட்சியில் அதன் புதிய மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை வெளியீடு செய்துள்ளது. அவற்றுள் ஒன்றாக, பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்டு உள்ளது. பெரிய அளவிலான 210சிசி என்ஜின் உடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய எக்ஸ்பல்ஸ் 210 பைக் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எக்ஸ்பல்ஸ் 200 பைக் உடன் ஒப்பிடுகையில் சில மெக்கானிக்கல் மற்றும் காஸ்மெட்டிக் அப்கிரேட்களை பெற்றுள்ளது. அவை என்னென்ன என்பதையும், புதிய எக்ஸ்பல்ஸ் 210 பைக்கை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

EICMA, இத்தாலி நாட்டின் மிலான் நகரத்தில் மிக நீண்ட வருடங்களாக நடைபெற்றுவரும் மோட்டார்சைக்கிள் கண்காட்சி ஆகும். தற்போது நடைபெற்றுவருவது இந்த கண்காட்சியின் 110வது எடிசன் ஆகும். வழக்கம்போல், இந்த கண்காட்சியிலும் உலகெங்கிலும் உள்ள மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள் கலந்துக் கொண்டுள்ளன. அந்த வகையில், இந்தியாவின் ஹீரோ மோட்டோகார்பும் இந்த கண்காட்சியில் கலந்துக் கொண்டுள்ளது.

hero xpulse 210 at eicma

ஹீரோ மோட்டோகார்ப், இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனம் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கிலான இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இத்தாலியில் நடைபெற்றுவரும் EICMA கண்காட்சியில் கலந்துக் கொண்டுள்ள ஹீரோ மோட்டோகார்ப் தனது புதிய பைக்குகளையும், ஸ்கூட்டர்கள் சிலவற்றையும் பார்வையாளர்கள் முன் காட்சிக்கு நிறுத்தியுள்ளது.

இதில், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ள ஹீரோ பைக், எக்ஸ்பல்ஸ் 210 ஆகும். விற்பனையில் உள்ள ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு எதிர்பார்த்ததை காட்டிலும் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால், இந்த அட்வென்ச்சர் ரக பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் நிச்சயமாக அப்டேட் செய்யும் என எதிர்பார்த்தோம். எதிர்பார்த்ததை போன்று, பெரிய அளவிலான என்ஜின் மற்றும் மேம்படுத்தப்பட்ட மெக்கானிக்கல் பாகங்கள் உடன் எக்ஸ்பல்ஸ் 210 பைக் EICMA 2024 கண்காட்சியில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய எக்ஸ்பல்ஸ் 210 பைக்கில் 210சிசி, லிக்யுடு-கூல்டு, DOHC சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஹீரோ கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கில் ஏற்கனவே வழங்கப்பட்டுவரும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 24.26 பிஎச்பி மற்றும் 20.7 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. மேலும், ஸ்லிப்பர் & அசிஸ்ட் க்ளட்ச்சும் வழங்கப்படுகிறது.

hero xpulse 210 at eicma

அட்வென்ச்சர் பைக்குகளில் முன்பக்க சஸ்பென்ஷன் நன்கு நீளமானதாக வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், புதிய எக்ஸ்பல்ஸ் 210 பைக்கிலும் முன்பக்க சஸ்பென்ஷனுக்கு 210மிமீ டிராவல் உடன் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 205மிமீ டிராவல் உடன் மோனோஷாக்கும் வழங்கப்பட்டு உள்ளது. தரையில் இருந்து பைக்கின் அடிப்பகுதி 220மிமீ உயரத்தில் வழங்கப்பட்டுள்ளது.

பிரேக் பணியை இந்த புதிய பைக்கில் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கவனித்துக் கொள்கின்றன. மேலும், ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்பல்ஸ் 210 பைக்கில் 21 இன்ச்சில் முன் சக்கரமும், 18 இன்ச்சில் பின் சக்கரமும் உள்ளது. ஸ்போக்டு சக்கரங்களான இவற்றில் பிளாக் பேட்டர்னில் ட்யூப்டு டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தோற்றத்தை பொறுத்தவரையில், ட்யூயல்-ஸ்போர்ட் டிசைனில் புதிய எக்ஸ்பல்ஸ் 210 பைக் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பைக்கிற்கு முன்பக்கத்தில் வட்ட வடிவில் ஹெட்லைட், நன்கு மேலாக பொருத்தப்பட்ட மட்கார்ட், நீளமான விண்ட்ஸ்க்ரீன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. மற்ற டிசைன் ஹைலைட்களாக, புதிய டெயில்லைட், அகலமான இருக்கை, பெரிய ஃப்யுல் டேங்க், புதிய டிசைனில் எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் 4.2 இன்ச்சில் டிஎஃப்டி ஸ்க்ரீன் போன்றவற்றை பார்க்க முடிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாகவே, எக்ஸ்பல்ஸ் 210 என்கிற புதிய பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தைரியமாக கொண்டுவருகிறது. தோற்றத்தில் இருந்து மெக்கானிக்கல் பாகங்கள் வரையில் என அனைத்தும் மேம்படுத்தப்பட்டு உள்ளதால், புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 இந்திய மக்களை கவருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 5, 2024, 23:45 [IST]
English summary
Hero motocorp unveiled xpulse 210 bike at eicma 2024 design features engine all details here
மேலும்... #hero motocorp #eicma
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+