லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்

விடா வி1 பிளஸ் (Vida V1 Plus) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வந்து இந்திய மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவை அதகளப்படுத்தியது ஹீரே மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம். இந்த மறு அறிமுக சம்பவம் மிக சமீபத்திலேயே அரங்கேறியது.

இந்த நிகழ்வின் போது இன்னும் சில தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்து விடா-வின் தற்போது வாகன மாடல்களின் வரிசையை அதிகரிக்கச் செய்ய இருப்பதாக நிறுவனத்தின் மூத்த அதிகாரி நிரஞ்ஜன் குப்தா தெரிவித்து இருந்தார். நிதியாண்டு 2025க்குள் இதை செய்து முடிக்க நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.

Hero motocorps new ev to compete with the luna

Source: Autocar India நிறுவனம் மூன்று புதிய மின்சார இரண்டு சக்கர வாகன மாடல்களையே அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கின்றது. நிறுவனத்தின் இந்த திட்டத்தில் நடு-நிலையான விலைக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்காகன எலெக்ட்ரிக் டூ-வீலர் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையிலேயே ஹீரோ விடா வி1 பிராண்டின்கீழ் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் புதுமுக எலெக்ட்ரிக் டூ-வீலர் பற்றிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த தயாரிப்பு சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமான கைனடிக் கிரீன் நிறுவனத்தின் இ-லூனாவிற்கு போட்டியாகும். இலை பூச்சியின் உருவத்தை தழுவி இந்த வாகனம் உருவாக்கப்பட்டதைப் போல தென்படுகின்றது.

Yulu wynn

குறிப்பு: இந்த படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. இதுவே, அந்த வாகனத்திற்கு மிகவும் வித்தியாசமான தோற்றத்தை வழங்குகின்றது. நியான் மஞ்சள் (neon yellow) நிறத்தாலான டபுள் கிராடில் ஃப்ரேம் (Double Cradle Frame)-ஐக் கொண்டே இந்த வாகனத்தை ஹீரோ தயார் செய்திருக்கின்றது. விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் காணப்படும் அம்சங்கள் பலவற்றை இதில் நம்மால் காண முடிகின்றது.

அந்தவகையில், முன் வீல், டிஸ்க் பிரேக், சிறிய மிதக்கும் வகை திரை மற்றும் ஃபோர்க் ஆகியவை விடா வி1 இடம் இருந்தே பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த வாகனத்தில் ஃப்ளூர் போர்டு இருக்காது. எனவே இந்த வாகனத்தை பயன்படுத்தும்போது பைக்கை இயக்கும் அனுபவமே கிடைக்கும்.

தொடர்ந்து இதில் லக்கேஜை ஏற்றிச் செல்ல ஏதுவாக முன் மற்றும் பின் பக்கத்தில் சிறிய வகை கேரியர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. எனவே இந்த வாகனத்தை பயணிகள் வாகனம் மற்றும் டெலிவரி வாகனம் இரண்டாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். சுமார் 100 கிலோ வரையில் இந்த வாகனத்தில் பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும் என கூறப்படுகின்றது.

ஆனால், இந்த வாகனம் எப்போது விற்பனைக்கு வரும் என்கிற விபரங்கள் வெளியாகவில்லை. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் இ-லூனா போன்ற மொபட் வகை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும். இ-லூனா இந்தியாவில் ரூ. 69,990 தொடங்கி ரூ. 74,990 வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இதைவிட சற்று குறைவான விலையிலேயே ஹீரோ விடாவின் இந்த புதுமுக எலெக்ட்ரிக் வாகனம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதற்கு என்ன விலை நிர்ணயம் செய்யப்படும் என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. விரைவில் இதுபற்றிய விபரங்களும், என்ன மாதிரியான சிறப்பு வசதிகளும் இடம் பெறும் என்பது பற்றிய தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையியே தான் தயாரிக்கம் எலெக்ட்ரிக் வாகன மாடல்களை விரிவாக்கம் செய்யும் பணியில் ஹீரோ களமிறங்கி இருக்கின்றது. இதன் வாயிலாக நிறுவனம் இந்தியாவில் பெட்ரோல் டூ-வீலர் பிரிவைபோலவே மின்சார வாகன பிரிவிலும் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 26, 2024, 15:27 [IST]
English summary
Hero motocorps new ev to compete with the luna
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+