ஏதோ டம்மி பீஸூன்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம்! சைலெண்டாக சம்பவம் செய்த ஹீரோ!
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் கடந்த 2023-24-ம் நிதியாண்டில் மொத்தம் 56,21,455 வாகனங்களை தயாரித்து விற்பனை செய்துள்ளன. கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை பெற்றுள்ளது. இதுவே கடந்த மார்ச் மாதம் விற்பனையில் சிறிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இப்படியாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ள விற்பனை அறிக்கையை விவரமாக காணலாம் வாருங்கள்.
ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்புகள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பெயர் பெற்றுள்ளது. ஆனால் இந்நிறுவனத்தின் ஒரு சில தயாரிப்புகளை மட்டுமே மக்கள் விரும்புகிறார்கள், பெரும்பாலான தயாரிப்புகள் விற்பனை குறைவாக விற்பனையாகிறது. இந்நிலையில் ஹீரோ நிறுவனம் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துடன் இணைந்து ஹார்லி டேவிட்சன் பிராண்டிலும் வாகனங்களை தயாரித்து விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றன.

இந்நிலையில் ஏப்ரல் மாதம் துவங்கி விட்டதால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் கடந்த மார்ச் மாத விற்பனை விபரம் மற்றும் கடந்த நிதியாண்டிற்கான ஒட்டுமொத்த விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளனர். இதில் ஹீரோ நிறுவனமும் தற்போது வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் கடந்த நிதியாண்டில் சிறப்பான விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. யாருக்கும் தெரியாமல் சைலன்டாக 56 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
ஹீரோ நிறுவனத்தின் கடந்த மார்ச் மாத விற்பனையை பொறுத்தவரை இந்நிறுவனம் மொத்தம் 4,56,724 பைக்குகளை விற்பனை செய்து உள்ளன. இதுவே ஸ்கூட்டர் செக்மெண்டில் மொத்தம் 33,696 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக 4,90,415 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இது சிறப்பான விற்பனையாக கருதப்படுகிறது.

இதுவே கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 4,85,896 பைக்குகளை விற்பனை செய்திருந்தது. ஸ்கூட்டர்களை பொறுத்த வரை 33,446 ஸ்கூட்டர்களை விற்பனை செய்து ஒட்டுமொத்தமாக 5,19,342 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. அதை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 8.64% விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதுவே உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றை கணக்கு செய்யும்போது, கடந்த மார்ச் மாதம் மொத்தம் 4,59,257 வாகனங்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. 31,158 வாகனங்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 5,02,730 வாகனங்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. 16,612 வாகனங்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.

இதுவே கடந்த நிதியாண்டு குறித்த விபரங்களை பார்க்கும்போது 2023-24 ஆம் நிதி ஆண்டில் ஹீரோ நிறுவனம் மொத்தம் 51,90,672 பைக்குகளை விற்பனை செய்துள்ளன. இதுவே ஸ்கூட்டர் செக்மெண்டில் 4,30,783 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 56,21,455 வாகனங்கள் ஹீரோ நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதுவே 2022-23 ம் நிதியாண்டு விற்பனை விபரங்களுடன் ஒப்பிடும்போது அந்த ஆண்டு 49,59,156 பைக்குகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. ஸ்கூட்டர் செக்மெண்டை பொறுத்தவரை 3,69,390 ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக 53,28,446 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இந்த இரு விற்பனையின் ஒப்பீட்டையும் காணலாம் வாருங்கள்.

கடந்த நிதியாண்டையும் அதற்கு முந்தைய நிதியாண்டையும் ஒப்பிடும்போது 16 சதவீத விற்பனை வளர்ச்சி என்பது ஏற்பட்டுள்ளது. நிதியாண்டு விபரங்களில் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி என பிரித்துப் பார்க்கும்போது இந்நிறுவனம் இரண்டு செக்மென்ட்களிலுமே ஓரளவு திருப்திகரமான வளர்ச்சியை பெற்றுள்ளன. இது அந்நிறுவனத்தை வளர்ச்சியடைய செய்துள்ளது.
கடந்த 2023-24-ம் தேதி ஆண்டில் உள்நாட்டில் 54,20,532 வாகனங்களை விற்பனை செய்துள்ளன. இதுவே இரண்டில் ஏற்றுமதியை பொறுத்தவரை 2,00,923 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளன. 2022-23ம் நிதியாண்டு பொருத்தவரை 51,55,793 வாகனங்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளன. இதுவே ஏற்றுமதியை பொருத்தவரை 1,72,753 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளன.
கடந்த நிதியாண்டில் ஹீரோ நிறுவனம் எக்ஸ்ட்ரீம் 125 ஆர், எக்ஸ்ட்ரீம் 200 எஸ், எக்ஸ்ட்ரீம் 160 ஆர் 4வி, ஹார்லி டேவிட்சன் x440ல கரிஷ்மா எக்ஸ் எம் ஆர், மேவேரிக் 440 ஆகிய பைக்குகளை அறிமுகப்படுத்தியது. கடந்த மார்ச் மாத விற்பனை விபரங்களில் முக்கியமான தகவல் என்னவென்றால் ஸ்கூட்டர் மொத்தம் 4000 ஸ்கூட்டர்கள் ஒரே மாதத்தில் விற்பனையாகியுள்ளன. இதுவரை விற்பனையானதிலேயே கடந்த மார்ச் மாதம் தான் அதிகபட்ச விற்பனை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது டூவீலர் செக்மெண்ட் சிறப்பான வளர்ச்சியை பெற்று வருகிறது. பல மிடில் கிளாஸ் மக்கள் சொந்தமாக டூவீலர்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஹீரோ நிறுவனம் சிறப்பான விற்பனையை பெற்று அதிக எண்ணிக்கையிலான டூவீலர்களை விற்பனை செய்து சாதனை படைத்து வருகிறது. தொடர்ந்து இந்த நிதியானிலும் இதே விற்பனை தொடரும்.


Click it and Unblock the Notifications









