ராயல் என்பீல்டு சோலியை முடிக்க போகும் ஹீரோவின் புது பைக்... விலை இவ்ளோதானா... ஹோண்டாவுக்கும் ஆப்பு...

இந்தியாவை சேர்ந்த மிக பிரபலமான டூவீலர் நிறுவனங்களில் ஒன்று ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp). உலகிலேயே மிகப்பெரிய டூவீலர் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஹீரோ மோட்டோகார்ப், நடப்பு 2024ம் ஆண்டை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனையில் 22 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியிருந்தது. கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 3,56,690 டூவீலர்களை மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 4,33,598 ஆக உயர்ந்துள்ளது.

Hero Mavrick 440

இது 22 சதவீத வளர்ச்சி ஆகும். அதே நேரத்தில் ஜனவரியை தொடர்ந்து வந்த பிப்ரவரி மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனையில் 19 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நடப்பு 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4,68,410 டூவீலர்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 3,94,460 ஆக மட்டுமே இருந்தது. இது 19 சதவீத வளர்ச்சி ஆகும்.

Hero Mavrick 440 Front View

இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, அதன் பின் வந்த பிப்ரவரி மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இன்னும் அதிக டூவீலர்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. சரியாக சொல்வதென்றால், 34,812 டூவீலர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டை வெற்றிகரமாக தொடங்கியிருப்பது, இந்த புள்ளி விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. வரும் மாதங்களில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சரியான விலை நிர்ணயம், சிறப்பான மைலேஜ் மற்றும் மிக பிரம்மாண்டமான சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் ஆகிய காரணங்களால்தான், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தால் இவ்வளவு அதிகமான டூவீலர்களை விற்பனை செய்ய முடிகிறது. இந்த நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையும் இதற்கு ஒரு காரணமாகதான் பார்க்கப்படுகிறது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர், ஹெச்எஃப் டீலக்ஸ், க்ளாமர், பேஷன் ப்ளஸ், எக்ஸ்ட்ரீம், எக்ஸ்பல்ஸ், டெஸ்ட்னி, ஷூம் மற்றும் ப்ளஸர் ப்ளஸ் உள்ளிட்ட தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது. இதுதவிர 1.99 லட்ச ரூபாய் என்ற விலை களமிறக்கப்பட்டுள்ள புதுவரவான ஹீரோ மாவ்ரிக் 440 (Hero Mavrick 440) பைக்கிற்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) மற்றும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 (Honda H'ness CB350) ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக ஹீரோ மாவ்ரிக் 440 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்குகளுக்கு ஹீரோ மாவ்ரிக் 440 விற்பனையில் கடுமையான சவாலை ஏற்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, March 3, 2024, 22:29 [IST]
English summary
Hero sales report february 2024 full details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+