அதிர்ச்சி... ஹீரோ நிறுவனம் இப்படி செய்யும்னு கனவுல கூட யாரும் நெனக்கல... நொந்து போன வாடிக்கையாளர்கள்...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் டூவீலர் நிறுவனங்களில் ஒன்று ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp). இந்தியாவை கடந்து, உலகிலேயே மிகவும் அதிகமான டூவீலர்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்று என்ற பெருமையை ஹீரோ மோட்டோகார்ப் தன்வசம் வைத்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டூவீலர்கள் மிகவும் தரமாக இருப்பதுதான் இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சூழலில், வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையிலான அதிரடி அறிவிப்பு ஒன்றை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

இது விலை உயர்வு (Price Hike) தொடர்பான அறிவிப்பு ஆகும். ஆம், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டூவீலர்கள் விலை அதிரடியாக உயரவுள்ளது. வரும் ஜூலை 1ம் தேதியில் இருந்து இந்த விலை உயர்வு அமலுக்கு வரவுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் என 2 வகையான தயாரிப்புகளுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும்.

Hero Splendor Plus XTEC 2 0

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன டூவீலர்களின் விலை வரும் ஜூலை 1ம் தேதியில் இருந்து 1,500 ரூபாய் வரை உயரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாடல்களை பொறுத்து இந்த விலை உயர்வு மாறுபடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அதிகபட்சமாக உயர்த்தப்படவுள்ள தொகைதான் 1,500 ரூபாய்.

எனவே துல்லியமான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், உங்களுக்கு அருகில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பை அணுகலாம். உற்பத்தி செலவுகள் அதிகரித்து வரும் காரணத்தால்தான், விலை உயர்த்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Hero Splendor Plus XTEC 2 0 Side Design

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போதைய நிலையில், டெஸ்ட்டினி ப்ரைம், டெஸ்ட்டினி 125 எக்ஸ்டெக், ஷூம் மற்றும் ப்ளஷர் ப்ளஸ் எக்ஸ்டெக் ஆகிய ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. அதே நேரத்தில் இந்த நிறுவனம் விற்பனை செய்யும் பைக்குகளின் பட்டியல், அனுமார் வால் போல் நீண்டு கொண்டே செல்கிறது.

ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் 2.0, ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக், ஸ்பிளெண்டர் ப்ளஸ், சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக், சூப்பர் ஸ்பிளெண்டர், க்ளாமர் எக்ஸ்டெக், க்ளாமர், பேஷன் எக்ஸ்டெக், பேஷன் ப்ளஸ், ஹெச்எஃப் டீலக்ஸ், ஹெச்எஃப் 100 உள்ளிட்ட பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இவை எல்லாம் தவிர எக்ஸ்ட்ரீம் 125 ஆர், எக்ஸ்ட்ரீம் 200எஸ் 4வி, எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி, எக்ஸ்ட்ரீம் 160 ஆர், எக்ஸ்பல்ஸ் 200 4வி மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி 4வி உள்ளிட்ட பைக்குகளையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. இவை அனைத்திற்குமே வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டூவீலர்களை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு, இந்த விலை உயர்வு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை தொடர்ந்து, மற்ற நிறுவனங்களும் தங்கள் டூவீலர்களின் விலையை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, June 24, 2024, 13:52 [IST]
English summary
Hero scooters motorcycles price hike from july 1
மேலும்... #hero motocorp #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+