மொத்தமா சேல்ஸ் எகிறுது... ஒரே மாதத்தில் 3 லட்சம் ஸ்பிளெண்டர் பைக்குகள்!! ஹீரோவை இனி கையில் பிடிக்க முடியாது!

உலகின் மிக பெரிய பைக் சந்தை நம் இந்தியா என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஏனெனில், அந்த அளவுக்கு நம் நாட்டில் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான பைக்குகள் விற்பனையாகுகின்றன. இன்னும், ஸ்கூட்டர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் எண்ணிக்கை அதிகமாக செல்லும். ஆனால், நாம் இந்த தொகுப்பில் பார்க்க போவது கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 பைக்குகளை ஆகும். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடந்த பல வருடங்களாகவே இந்தியாவின் நம்பர் ஒன் பைக்காக ஹீரோ மோட்டோகார்பின் ஸ்பிளெண்டர் விளங்குகிறது. இது கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்திலும் தொடர்ந்துள்ளது. பைக்குகள் என்று மட்டுமின்றி, ஸ்கூட்டர்களையும் சேர்த்து பார்த்தாலும், கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட 2-வீலராக ஹீரோ ஸ்பிளெண்டர் விளங்குகிறது.

india s most sold motorcycle

கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஸ்பிளெண்டர் பைக்குகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 2,934 ஆகும். அதுவே, 2023 ஆகஸ்ட் மாதத்தில் 2 லட்சத்து 89,930 ஸ்பிளெண்டர் பைக்குகளை மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை ஆனது கடந்த ஆண்டு ஆகஸ்ட் உடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 4.49% அதிகரித்துள்ளது.

அதாவது, 13 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்பிளெண்டர் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேபோல், இந்த ஆண்டு ஜூலை மாதத்திலும் 2 லட்சத்து 20,820 ஸ்பிளெண்டர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், இந்த ஆண்டில் ஜூலையை காட்டிலும் ஆகஸ்ட்டில் சுமார் 82,114 ஸ்பிளெண்டர் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

india s most sold motorcycle

ஸ்பிளெண்டருக்கு அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பைக்காக 2வது இடத்தில் ஹோண்டா ஷைன் உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷைன் பைக்குகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 49,697 ஆகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இதனை காட்டிலும் 35,555 பைக்குகள் குறைவாக 1 லட்சத்து 14,142 ஷைன் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ஹோண்டா ஷைனுக்கு அடுத்து, இந்த வரிசையில் 3வது இடத்தில் பஜாஜ் பல்சர் பைக்குகள் உள்ளன. 125சிசி-இல் இருந்து 400சிசி வரையில் பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை மொத்தமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 1 லட்சத்து 16,250 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 ஆகஸ்ட்டிலும், கடந்த 2024 ஜூலையிலும் பல்சர் பைக்குகள் விற்பனை எண்ணிக்கை ஆனது 1 லட்சத்தை கூட தொடவில்லை.

india s most sold motorcycle

4வது இடத்தில் உள்ள பைக், ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் ஆகும். ஹீரோ மோட்டோகார்பின் மற்றொரு பிரபலமான மோட்டார்சைக்கிளான எச்.எஃப் டீலக்ஸ் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 84,607 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2024 ஜூலையில் வெறும் 46,627 ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து 5வது இடத்தில் பஜாஜ் பிளாட்டினா பைக் 41,915 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது.

6வது மற்றும் 7வது இடங்களில் ஹோண்டா சிபி யூனிகார்ன் மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் உள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 31,451 சிபி யூனிகார்ன் பைக்குகளும், 30,038 அப்பாச்சி பைக்குகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 8வது மற்றும் 9வது இடங்களில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125 பைக்குகள் முறையே 28,450 மற்றும் 27,668 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளன. கடைசி 10வது இடத்தில் டிவிஎஸ் ரைடர் 26,923 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் தேசிய பைக்காக அறிவிக்கும் அளவிற்கு மாதந்தோறும் எளிதாக 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சம் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனையாகுகின்றன. அதேபோல் மறுப்பக்கம், ஹீரோ மோட்டோகார்பின் மற்றொரு பைக்கான எக்ஸ்ட்ரீம் 125ஆர் -இன் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 24, 2024, 23:13 [IST]
English summary
Hero splendor again indias most sold motorcycle check all details here
மேலும்... #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X