மக்களுக்கு பைக் வாங்கும் ஆர்வம் குறையுதா? ஹீரோ ஸ்பிளெண்டரை தவிர்த்து எல்லாமே விற்பனையில் அடிவாங்குது!!

இந்தியா மட்டுமின்றி, உலகளவில் ஸ்கூட்டர்களை (Scooters) வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், ஒருபக்கம் பைக்குகளை வாங்கவும் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். அதாவது, கியர்களை மாற்றி, மாற்றிக்கொண்டு 2-வீலர்களை ஓட்ட விரும்புவோர் பைக்குகளையே வாங்க விரும்புகின்றனர். இருப்பினும், இந்தியாவில் பைக் விற்பனை கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் உடன் ஒப்பிடுகையில், கடந்த 2024 நவம்பர் மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளது. அதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

கடந்த நவம்பர் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 பைக் மாடல்களை மட்டுமே இந்த தொகுப்பில் நாம் பார்க்கவுள்ளோம். இந்த டாப்-10 பைக்குகள் மொத்தமாக கடந்த நவம்பர் மாதத்தில் 8 லட்சத்து 10 ஆயிரத்து 674 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 நவம்பரில் முதல் 10 இடங்களை பிடித்த பைக்குகள் மொத்தமாக 8 லட்சத்து 45 ஆயிரத்து 424 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

hero splendor as usual first

வழக்கம்போல், கடந்த நவம்பர் மாதத்திலும் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பைக்காக முதலிடத்தை ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 2 லட்சத்து 93 ஆயிரத்து 828 ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2023 நவம்பரில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 786 ஸ்பிளெண்டர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் பார்த்தால், ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை ஆனது 17.16% அதிகரித்துள்ளது. இந்த டாப்-10 லிஸ்ட்டில் 2023 நவம்பரை காட்டிலும் இந்த ஆண்டு நவம்பரில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட 2 பைக்குகளுள் ஸ்பிளெண்டரும் ஒன்றாகும். ஸ்பிளெண்டருக்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் 2வது இடத்தை பிடித்துள்ள ஹோண்டா ஷைன் (Honda Shine) பைக்கின் விற்பனை ஆனது 6.68% குறைந்துள்ளது.

hero splendor as usual first

2023 நவம்பரில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 943 ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த 2024 நவம்பரில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 530 ஷைன் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து 3வது இடத்தில் உள்ள பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar) பைக்குகளின் விற்பனையும் 12.22% குறைந்துள்ளது. கடந்த நவம்பரில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 467 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், 2023 நவம்பரில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 403 பல்சர் பைக்குகள் விற்கப்பட்டு இருந்தன.

இந்த வரிசையில் 4வது இடத்தில் உள்ள ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) பைக்கின் விற்பனை கிட்டத்தட்ட பாதிக்கு பாதி (47.39%) குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எச்.எஃப் டீலக்ஸ் பைக்கின் விற்பனை எண்ணிக்கை 61 ஆயிரத்து 245 ஆகும். 5வது இடத்தில் உள்ள பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina) கடந்த மாதத்தில் 44 ஆயிரத்து 578 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 2023 நவம்பரை காட்டிலும் 26.45% குறைவாகும்.

hero splendor as usual first

6வது மற்றும் 7வது இடங்களில் டிவிஎஸ் மோட்டாரின் பிரபலமான பைக்குகளான அப்பாச்சி (Apache) மற்றும் ரைடர் (Raider) பைக்குகள் முறையே 35,610 மற்றும் 31,769 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளன. 8வது இடத்தில் ஹோண்டா சிபி யூனிகார்ன் (Honda CB Unicorn) 30,678 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. இந்த லிஸ்ட்டில் கடைசி 2 இடங்களில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) (27,514) மற்றும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் (Hero Xtreme 125R) (25,455) உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் தேசிய பைக் என சொல்லும் அளவிற்கு பிரபலமாக உள்ள ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கின் விற்பனை அதிகரித்துள்ள போதிலும், மற்ற பைக்குகளின் விற்பனை கடந்த ஆண்டு நவம்பரை காட்டிலும் குறைந்திருப்பது, மக்கள் ஸ்கூட்டரை நோக்கி செல்கின்றனரா என்கிற கேள்வியை எழுப்புகிறது. இது வரும் மாதங்களிலும் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Sunday, December 22, 2024, 22:07 [IST]
English summary
Hero splendor as usual first in bike sales in india in november 2024
மேலும்... #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X