நல்லா அடிச்சி, அடிச்சி ஓட்டலாம்... ஏழைகளின் நண்பனாக இருக்கும் 100சிசி பைக்குகள்!! இரண்டில் எதை வாங்குவது?

இந்தியாவில் எத்தனை புது, புது பைக்குகள் விற்பனைக்கு வந்தாலும் அவற்றின் விலை குறைவாக இருந்தால்தான் நம் நாட்டில் அதிகம் விற்பனையாக வாய்ப்புண்டு. ஏனெனில், நம் நாட்டில் பைக்குகளை குறைந்த விலையில் வாங்குவோரே அதிகமாக உள்ளனர். ஏனென்றால், இந்தியா பொருளாதாரத்தில் இன்னமும் வளர்ந்துவரும் நாடாகவே உள்ளது. இதனால், குறைந்த விலையில் எந்த நிறுவனம் பைக்கை அறிமுகம் செய்கிறதோ அந்த நிறுவனத்தின் வணிகம்தான் சிறப்பாக இருக்கும். இதனை நன்கு புரிந்து வைத்துள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் பல்வேறு 'பட்ஜெட் விலை' பைக்குகளை விற்பனை செய்கிறது.

அவற்றுள் முக்கியமானதாக ஹீரோ ஸ்பிளெண்டரை சொல்லலாம். இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் இருசக்கர வாகனமாக ஹீரோ ஸ்பிளெண்டர் உள்ளது. இதன் காரணமாக, ஸ்பிளெண்டரில் புது, புது வெர்சன்களை அறிமுகம் செய்வதில் ஹீரோ நிறுவனம் தீவிரமாக உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்ததே, ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் 2.0 (Splendor Plus Xtec 2.0) ஆகும். விற்பனையில் இந்த ஹீரோ பைக்கிற்கு ஹோண்டா ஷைன் 100 போட்டியாக உள்ளது.

hero splendor vs honda shine

தோற்றம்: இவ்வாறான விலை குறைவான பைக்குகளில் வாடிக்கையாளர்கள் பெரியதாக டிசைனை பார்க்க மாட்டார்கள். ஏனெனில், குறைந்த விலையில் வழங்குவதற்காக இந்த பைக்குகளில் நிறைய பேனல்கள் வழங்கப்படுவதில்லை. இருப்பினும், மார்க்கெட்டில் போட்டி அதிகமாக உள்ளதால், முடிந்தவரையில் ஸ்டைலான பைக்கை விற்பனை செய்யவே எந்தவொரு 2-வீலர் நிறுவனமும் முயற்சிக்கின்றன. லேட்டஸ்ட் அறிமுகம் என்பதால், ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் 2.0 பைக்கின் தோற்றம் சூப்பராக உள்ளது.

தொழிற்நுட்ப வசதிகள்: தோற்றத்தில் மட்டுமின்றி, டெக்னாலஜிகளிலும் இந்த ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கின் கை ஓங்கியுள்ளது. எல்இடி ஹெட்லைட் மற்றும் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி உடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவை இந்த ஹீரோ பைக்கின் முக்கிய தொழிற்நுட்ப சிறப்பம்சங்கள் ஆகும். ஆனால், ஹோண்டா ஷைன் 100 பைக்கில் அனலாக் செட்-அப் மட்டுமே கொடுக்கப்படுகிறது.

hero splendor vs honda shine

என்ஜின்: ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் 2.0 பைக்கில் 100சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 7.09 பிஎச்பி மற்றும் 8.05 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. அதுவே, ஷைன் 100 பைக்கில் பொருத்தப்படுகின்ற 98.9சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 7.28 பிஎச்பி மற்றும் 8.05 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பைக்கிற்கு வழங்கக்கூடியதாக உள்ளது.

சஸ்பென்ஷன் & பிரேக்ஸ்: இந்த இரு பைக்குகளிலும் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் ட்யூயல் ஷாக்குகளும் வழங்கப்படுகின்றன. பிரேக் பணியை கவனிக்க, இந்த பைக்குகளில் இரு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள் கொடுக்கப்படுகின்றன. டிஸ்க் பிரேக் கொடுக்கப்படுவதில்லை. இந்த பைக்குகளில் அலாய் சக்கரங்கள் இடம்பெறுகின்றன.

hero splendor vs honda shine

விலை: ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் 2.0 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.82,911ஆக தற்சமயம் உள்ளது. அதுவே, ஹோண்டா ஷைன் 100 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.64,900இல் இருந்தே துவங்குகின்றன. அதாவது, இந்த ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கை காட்டிலும் ஷைன் 100 பைக்கை கிட்டத்தட்ட ரூ.18,000 குறைந்த விலையில் வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 100சிசி பைக்குகளை பொறுத்தவரையில், ரூ.18,000 என்பது பெரிய வித்தியாசம் ஆகும். ஆனால், இதற்கேற்ப ஸ்டைலிஷான தோற்றம் மற்றும் தொழிற்நுட்ப வசதிகளை ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் 2.0 பைக்கில் பெறலாம். ஆதலால், இந்த இரு 100சிசி பைக்குகளுக்கு இடையேயான ஒப்பீடே முதலில் தவறு என்றுதான் சொல்ல வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Sunday, June 9, 2024, 9:00 [IST]
English summary
Hero splendor plus xtec 2 0 vs honda shine 100 check full comparison here
மேலும்... #bike comparison #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X