100சிசி பைக்கில் இப்படி ஒரு வசதியானு வாய பிளக்க வச்சுட்டாங்க! புதிய ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் அறிமுகம்!
இந்தியர்களின் ஃபேவரிட் பைக் மாடல்களில் ஒன்றாக ஸ்பிளெண்டர் (Splender) இருக்கின்றது. ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் இந்த பைக் மாடலின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனையே தற்போது நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் (Splendor Plus Xtec) எனும் மாடலையே அது தற்போது விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. புதிய அம்சங்கள் பலவற்றுடன் அது விற்பனைக்கு வந்திருக்கிறது என்பது கவனிக்கத்தகுந்தது. இருப்பினும், பட்ஜெட் விலைக் கொண்டபைக்காகவே இப்போதும் அது காட்சியளிக்கின்றது. இதுகுறித்த மேலும் முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் பைக் மாடலாக ஸ்பிளெண்டர் பிளஸ் இருக்கின்றது. இது ஓர் மிக சிறந்த 100 சிசி கம்யூட்டர் வகை (தினசரி பயன்பாட்டிற்கு உகந்த) பைக் மாடல் ஆகும். இந்த பைக்கிலேயே அப்டேட்டின்கீழ் நிறுவனம் புதிதாக டிஸ்க் பிரேக்கைச் சேர்த்திருக்கின்றது.

ஸ்பிளெண்டரின் இந்த 30 ஆண்டு கால வரலாற்றில் இதுவே இது டிஸ்க் பிரேக்கை பெறுவது முதல் முறையாகும். இந்த அம்சம் கொண்ட வேரியண்ட்-க்கு ரூ. 83 ஆயிரத்து 461 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
மேலும், வழக்கமான டிரம் பிரேக்கைக் கொண்ட வேரியண்டைக் காட்டிலும் இது வெறும் ரூ. 3 ஆயிரத்து 550 மட்டுமே அதிக விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கம்மி விலையிலேயே கூடுதல் பாதுகாப்பான பயணத்தை ஹீரோ மோட்டோகார்ப் தன்னுடைய ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் பைக்கில் வழங்கி இருக்கின்றது.
டிஸ்க் பிரேக் மட்டுமில்லைங்க ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் மாடலில் நவீன கால அம்சங்கள் சிலவற்றையும் ஹீரோ மோட்டோகார்ப் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், எல்இடி ஹெட்லேம்ப், ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஆகியவையும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு உள்ளன.
இதுமட்டுமில்லைங்க, இந்த பைக்கில் நிகழ்நேர மைலேஜ் பற்றிய விபரத்தை வழங்கும் வசதி, ஐ3எஸ் ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சத்தின் வாயிலாக அதிக எரிபொருள் சிக்கனத்தை அதன் பயனர்களால் பெற்றுக் கொள்ள முடியும். மேலும், ரைடரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக சைடு ஸ்டாண்டு போட்டிருந்தால் எஞ்சினை தானாக ஆஃப் செய்யும் வசதியும் ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக்கில் ஹீரோ வழங்கி இருக்கின்றது.
நிற தேர்வைப் பொருத்த வரை இந்த பைக்கில் மூன்று விதமான ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கின்றது. பிளாக் ஸ்பார்க்ளிங் ப்ளூ, பிளாக் டொர்னடோ கிரே மற்றும் பிளாக் ரெட் ஆகியவையே அவை ஆகும். எஞ்சினைப் பொருத்த வரை இந்த பைக்கில் 97.2 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது ஓர் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு மோட்டார் ஆகும். இதில் ஃப்யூவல் இன்ஜெக்சன் வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 7.9 பிஎச்பி பவரையும், 6 ஆயிரம் ஆர்பிஎம்மில் 8.05 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இந்த மோட்டாருடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸே இணைக்கப்பட்டு இருக்கின்றது.
புதிய அம்சங்கள் சேர்ப்பு காரணத்தினால் இந்த பைக்கின் எடை கணிசமாக உயர்ந்திருக்கின்றது. 1.6 கிலோவே இதன் எடை அதிகரித்திருக்கின்றது. இதன் ஒட்டுமொத்த எடை 113.6 கிலோவாகும். இந்த பைக்கில் சிறந்த ரைடு அனுபவத்தை வழங்கும் பொருட்டு முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் 5 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளும் வசதிக் கொண்ட டூயல் ஷாக்கையும் ஹீரோ மோட்டோகார்ப் வழங்கி இருக்கின்றது.
பிரேக்கிங்கிற்காக 240 மிமீ டிஸ்க்கே வழங்கப்பட்டு இருக்கின்றது. இது முன் வீலிலேயே வழங்கப்பட்டு இருக்கும். பின் வீலில் 130 மிமீ அளவுள்ள டிரம் பிரேக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், இன்டக்ரேட்டட் பிரேக்கிங் சிஸ்டம் (Integrated Braking System) வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்களின் பெஸ்ட் செல்லிங் பைக் மாடலில் ஹீரோ நிறுவனம் புதிதாக டிஸ்க் பிரேக்கை வழங்கி இருப்பது டூ-வீலர் காதலர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த அம்சத்தினால் அப்பைக்கின் விற்பனை மேலும் அதிகரிக்கக் கூடும் என நம்பப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








