இந்தியாவின் தேசிய பைக்... 30 வருஷம் ஆகியும் மலை போல் நிக்கும் ஸ்பிளெண்டர்... மாடு மாதிரி உழைக்குது...
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக நீண்ட காலமாக பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor). இந்தியாவின் தேசிய பைக் என அறிவிக்கும் அளவிற்கு பிரபலமாக உள்ள ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கின், நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 3,05,586 ஸ்பிளெண்டர் பைக்குகளை விற்பனை செய்து அசத்தியுள்ளது.
ஆனால் இந்த எண்ணிக்கையானது, 2,38,340 ஆக மட்டுமே இருந்தது. இது 28.21 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த சிறப்பான வளர்ச்சியின் மூலமாக இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டூவீலர் என்ற பெருமையை ஹீரோ ஸ்பிளெண்டர் பெற்றுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஸ்பிளெண்டர் பைக்கில் ஏராளமான மாடல்களை விற்பனை செய்து வருகிறது. ஸ்பிளெண்டர் ப்ளஸ், ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக், ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் 2.0, சூப்பர் ஸ்பிளெண்டர், சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் என ஸ்பிளெண்டர் வரிசையில் 5 மாடல்களை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்து கொண்டுள்ளது.
இதில், ஸ்பிளெண்டர் ப்ளஸ், ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் மற்றும் ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் 2.0 ஆகிய 3 மாடல்களில் 100 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மறுபக்கம் சூப்பர் ஸ்பிளெண்டர் மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் ஆகிய 2 மாடல்களிலும் 125 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இதில், ஸ்பிளெண்டர் ப்ளஸ் மாடலின் விலை 75,441 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் மாடலின் விலை 79,911 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. மறுபக்கம் ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் 2.0 பைக்கின் விலை 82,911 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
மறுபக்கம் சூப்பர் ஸ்பிளெண்டர் மாடலின் விலை 80,848 ரூபாயில் இருந்தும், சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் மாடலின் விலை 85,178 ரூபாயில் இருந்தும் தொடங்குகிறது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக ஹீரோ ஸ்பிளெண்டர் கருதப்படுகிறது.
இதன் காரணமாகவே இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் பைக் என்ற பெருமையை ஹீரோ ஸ்பிளெண்டர் தன்வசம் வைத்துள்ளது. ஹீரோ ஸ்பிளெண்டர் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருப்பதும், சிறப்பான மைலேஜ் வழங்குவதும் கூட, அதன் பிரம்மாண்டமான வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கடந்த 1994ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ ஸ்பிளெண்டர் இந்தியாவில் மட்டுமல்லாது, உலகிலேயே அதிகமாக விற்பனையாகி வரும் பைக்குகளில் ஒன்றாக உள்ளது. தினசரி பயன்பாட்டிற்கு நீண்ட காலம் உழைக்க கூடிய ஒரு பைக்கை எதிர்பார்த்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இது ஏற்றது என்பது எங்களுடைய கருத்து.


Click it and Unblock the Notifications








