30 வருஷம் ஆகியும் அப்படியே இருக்கும் ஸ்பிளெண்டர்! பிளாஸ்டிக் டப்பாக்களுக்கு மத்தியில் ஆயுசுக்கும் உழைக்கற பைக்

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் டூவீலர்களில் ஒன்று ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor). கடந்த 1994ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ ஸ்பிளெண்டர் பைக், சுமார் 30 ஆண்டுகளை கடந்து, இன்றளவும் விற்பனையில் வெற்றி கொடி நாட்டி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கின் நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட்டே (Sales Report) இதற்கு சாட்சி. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3,91,612 ஸ்பிளெண்டர் பைக்குகளை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

ஆனால் அதற்கு முந்தைய செப்டம்பர் மாதம் 3,75,886 ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இது 4.18 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 டூவீலர்களின் பட்டியலில், ஹீரோ ஸ்பிளெண்டர் முதல் இடத்தை பிடித்துள்ளது.

Hero Splendor Plus

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் பல்வேறு வெர்ஷன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன்படி ஸ்பிளெண்டர் ப்ளஸ், ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக், ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் 2.0, சூப்பர் ஸ்பிளெண்டர் மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் ஆகிய வெர்ஷன்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இதில், ஸ்பிளெண்டர் ப்ளஸ், ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் மற்றும் ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் 2.0 ஆகிய 3 வெர்ஷன்களும், 100 சிசி இன்ஜின் பொருத்தப்பட்ட மாடல்கள் ஆகும். மறுபக்கம் சூப்பர் ஸ்பிளெண்டர் மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் ஆகிய 2 வெர்ஷன்களிலும், 125 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

Hero Splendor

அதே நேரத்தில் ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்கின் விலை 75,441 ரூபாயில் இருந்தும், ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் பைக்கின் விலை 79,911 ரூபாயில் இருந்தும், ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் 2.0 பைக்கின் விலை 82,911 ரூபாயில் இருந்தும் தொடங்குகின்றன. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

மறுபக்கம் சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கின் விலை 80,848 ரூபாயில் இருந்தும், சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் பைக்கின் விலை 85,178 ரூபாயில் இருந்தும் தொடங்குகின்றன. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த விலைக்கு ஹீரோ ஸ்பிளெண்டர் மிகச்சிறந்த ஆப்ஷனாக கருதப்படுகிறது.

எனவேதான் அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 30 ஆண்டுகளை கடந்த பின்னரும் கூட, இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்படும் டூவீலர் என்ற பெருமையை ஹீரோ ஸ்பிளெண்டர் தன்வசம் வைத்துள்ளது. இது நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் நீடித்து உழைக்க கூடிய தயாரிப்பு என்பதும், விற்பனை தொடர்ந்து சிறப்பாக இருப்பதற்கு முக்கியமான காரணங்கள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தினசரி பயன்பாட்டிற்கு ஒரு புதிய டூவீலரை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு ஹீரோ ஸ்பிளெண்டர் மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. பராமரிப்பு செலவு குறைவு போன்றவை எல்லாம், ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கின் ப்ளஸ் பாயிண்ட்களாக உள்ளன.

More from DriveSpark

Article Published On: Sunday, November 24, 2024, 19:55 [IST]
English summary
Hero splendor sales report october 2024 4 per cent growth
மேலும்... #hero motocorp #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+