27000ரூபா மதிப்புள்ளத இலவசமா தர மனசு ஹீரோவுக்குதான் வரும்.. கொஞ்சம் நாளைக்கு மட்டுமே கிடைக்கும்! முழு விபரம்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்து இருக்கின்றது. அது அறிவித்து இருக்கும் அந்த சிறப்பு சலுகையின் மதிப்பு என்ன? எவ்வளவு நாட்களுக்கு அந்த சலுகை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது? இதுபற்றிய கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஹீரோ விடா வி1 ப்ரோ தேர்வு மட்டுமே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருந்த நிலையில், மீண்டும் விடா வி1 பிளஸ் தேர்வை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ. 97,800 ஆகும். அதேவேளையில், அதிக சிறப்பு வசதிகள் கொண்ட தேர்வான விடா வி1 ப்ரோ ரூ. 1.26 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். புதிதாக விடா வி1 பிளஸ் தேர்வை விற்பனையில் இணைத்த நிலையில் தற்போது ஹீரோ நிறுவனம் வாடிக்கையாளர்களை அதன் தயாரிப்பின் பக்கம் ஈர்க்கும் பணிகளையும் தற்போது கையில் எடுத்திருக்கின்றது. அந்த நிறுவனம் ரூ. 27 ஆயிரம் மதிப்புள்ள அட்வான்டேஜ் பேக்கை இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றது.
இது விற்பனைக்கு பின்னர் நிறுவனத்தால் வழங்கப்படும் சிறப்பு சேவைக்கான திட்டம் ஆகும். இந்த திட்டத்தையே கட்டணம் ஏதும் இல்லாமல் வழங்க ஹீரோ திட்டமிட்டு இருக்கின்றது. ஏப்ரல் 31 ஆம் தேதி வரை மட்டுமே இந்த சலுகையை ஹீரோ நிறுவனம் வழங்க இருக்கின்றது.
விடா அட்வான்டேஜ் திட்டமானது பேட்டரிக்கு கூட்டப்பட்ட வாரண்டி (5 ஆண்டுகள் அல்லது 60ஆயிரம் கிமீ வாரண்டி) காலத்தையும், இலவச சர்வீஸ்களையும், இலவசமாக சார்ஜ் செய்துக் கொள்ளும் வசதி ஆகியவற்றை வழங்கும். இத்துடன், 24X7 ரோட்-சைடு அசிஸ்டன்ஸ் மற்றும் செல்போன் இணைப்பு வசதி ஆகியவற்றையும் இந்த திட்டத்தின் வாயிலாகவே வழங்கிக் கொண்டிருக்கின்றது. இது ஓர் ஐந்தாண்டுகளுக்கான திட்டம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதையே பெருந்தன்மையுடன் இலவசமாக வழங்க ஹீரோ மோட்டோகார்ப் முன் வந்திருக்கின்றது.
விடா வி1 பிளஸ்: இந்த தேர்வில் ஓர் முழு சார்ஜில் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 3.44 kWh பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரங்கள் 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.
இது இரண்டு பேட்டரிபேக் கொண்ட தேர்வின் சார்ஜ் நேரம் ஆகும். அதேவேளையில், டிசி ஃபாஸ்ட் சார்ஜரில் வைத்து சார்ஜ் செய்தால் வெறும் 1 நிமிஷ சார்ஜிலேயே 1.2 கிமீ தூரம் வரை பயணித்துக் கொள்ள முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ ஆகும்.
மேலும், வெறும் 3.4 செகண்டுகளிலேயே இது பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தை அசால்டாக எட்டிவிடும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஈகோ, ரைடு மற்றும் ஸ்போர்ட் ஆகிய ரைடிங் மோட்களும் இதில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
விடா வி1 ப்ரோ: இதில் ஓர் முழு சார்ஜில் 110 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதற்காக 3.94 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே பயன்படுத்தப்ட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடும் மணிக்கு 80 கிமீட்டரே ஆகும். இரண்டு தேர்வுகளிலும் ஒரே மாதிரியான பேட்டரி பேக்குகளே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. ரைடிங் மோட்டாக ஈகோ, ரைடு, ஸ்போர்ட் மற்றும் கஸ்டம் மோட் ஆகியவை இதில் வழங்கப்படுகின்றது.
இதுதவிர சிறப்பு வசதிகளாக இரண்டு தேர்வுகளிலும் 7 அங்குல டிஎஃப்டி திரை, எல்இடி லைட்டுகள், முன் பக்கத்தில் டிஸ்க்கும், பின் பக்கத்தில் டிரம் பிரேக்கும் விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்படுகின்றது. இத்தகைய பல்வேறு சிறப்பு வசதிகளைத் தாங்கிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டே ரூ. 27 மதிப்புள்ள அட்வான்டேஜ் திட்டத்தை இலவசமாக வழங்க இருக்கின்றது, ஹீரோ நிறுவனம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனத்திற்கு போட்டி அளிக்கும் நோக்கிலும், விற்பனையை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே இந்த சிறப்பு சலுகையை ஹீரோ அறிவித்து இருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








