ஹல்க் கூட புரூஸ்-லீ மோதுற மாதிரி இருக்கு.. அட்டகாசமான ஸ்டைலில் ஹீரோ ஜூம் காம்பேட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டருக்கு போட்டியளிக்கும் விதமாக விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டர் மாடல்களில் ஹீரோ ஜூம் (Hero Xoom) ஸ்கூட்டர் மாடலும் ஒன்றாகும். இந்த ஸ்கூட்டர் மாடலுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக ஹீரோ ஜூம் ஸ்கூட்டர் மாடலில் ஜூம் காம்பேட் எடிசன் (Hero Xoom Compat Edition)-ஐ விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். இதன் வருகைக்கு பின்னால் ஓர் மிகப் பெரிய காரணம் இருப்பதாகக் கூறப்படுகின்றது. அது வேறு ஒன்றுமே இல்லைங்க ஹோண்டா ஆக்டிவா-விற்கு வழங்கிக் கொண்டிருக்கும் போட்டியை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்பதே அதுவாகும்.

இந்த நோக்கிலேயே ஜூம் காம்பேட் எடிசன்-க்கு மிகவும் குறைவான விலையை ஹீரோ மோட்டோகார்ப் நிர்ணயம் செய்திருக்கின்றது. அறிமுகமாக ரூ. 80,967 விலையே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த ஸ்கூட்டர் பற்றிய கூடுதல் முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க் இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Hero xoom combat edition launched

ஜூம் ஸ்கூட்டர் மாடலின் உயர் நிலை தேர்வான இசட்எக்ஸ் வேரியண்டைத் தழுவியே ஜூம் காம்பேட் எடிசன் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. என்னதான் இசட்எக்ஸ் வேரியண்டை தழுவி இந்த ஸ்கூட்டர் மாடல் தயார் செய்யப்பட்டு இருந்தாலும், அலங்கரிப்பில் மற்ற அனைத்து வேரியண்டுகளையும் துவம்சம் செய்யும் வகையில் உள்ளது.

'மேட் ஷேடோ கிரே' எனும் பிரத்யேக நிறத்தாலேயே ஜூம் காம்பேட் எடிசன் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தாலான அக்செண்டுகளையும் இந்த ஸ்கூட்டரில் ஹீரோ பயன்படுத்தி இருக்கின்றது. போர் விமானங்களின் ஸ்டைலை தழுவியே இந்த நிறம் ஜூம் காம்பேட் எடிசனுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

Xoom combat edition

எனவே இந்த தேர்வு போர் விமானத்தை அதிகம் நேசிப்பவர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுபோன்று அலங்கரிப்பு விஷயத்தில் மட்டுமே இந்த சிறப்பு பதிப்பு மாறுபட்டுக் காட்சியளிக்கும். மற்றபடி, அதாவது, ஸ்டைல் மற்றும் எஞ்சின் ஆகியவற்றில் வழக்கமான ஜூமை போலவே ஜூம் காம்பேட் எடிசனும் இருக்கும்.

அந்தவகையில், 110.9 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்சினே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிபட்சமாக 7,250 ஆர்பிஎம்மில் 8.2 பிஎச்பி பவரையும், 5,750 ஆர்பிஎம்மில் 8.7 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதே எஞ்சினே ஜூம் ஸ்கூட்டரின் அனைத்து தேர்வுகளும் கொண்டிருக்கின்றன.

இதுதவிர, ஜூம் இசட்எக்ஸ் வேரியண்டில் வழங்கப்பட்டு இருக்கும் கார்னரிங் லைட், ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட திரை உள்ளிட்டவையும் இதில் இடம் பெற்றிருக்கும். இந்த திரை வாயிலாக செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி போன்றவற்றையும் காண முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மேலும், இதில் 'எச்' வடிவ லைட், புரஜெக்டர் வரை ஹெட்லைட், 'எச்' வடிவ எல்இடி டெயில் லைட், அதிக வேகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் அகலமான டயர், முன் பக்க வீலில் டிஸ்க், டைமண்ட் கட் அலாய் வீல்கள், யுஎஸ்பி செல்போன் சார்ஜிங் போர்ட், பெரிய ஸ்டோரேஜ் எல்இடி லைட்டுடன் என ஏகப்பட்ட அம்சங்கள் ஜூம் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆக்டிவாவிற்கு போட்டியாக விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்கூட்டர் மாடல்களில் ஜூம்-ம் ஒன்றாகும். அதிக கவர்ச்சியான சிறப்பம்சங்களைத் தாங்கியிருக்கும் மலிவு விலை ஸ்கூட்டர் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது. இதன் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டே விலை குறைவான ஜூம் காம்பேட் எடிசன் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 5, 2024, 14:04 [IST]
English summary
Hero xoom combat edition hits indian market at rs 80967 to compete with honda activa
மேலும்... #hero motocorp #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+