மாச சம்பளம் வாங்குறவங்களுக்குன்னே இந்த பைக் அறிமுகமாகிடுச்சு! விலை இவ்வளவு கம்மியா?

ஹீரோ நிறுவனம் தனது எக்ஸ்ட்ரீம் 125ஆர் என்ற 125 சிசி பைக்கை ரூபாய் 95 ஆயிரம் என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக ரூபாய் 99 ஆயிரம் என்ற விலையில் இந்த பைக் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்கில் உள்ள அம்சங்கள் என்னென்ன மார்க்கெட்டில் உள்ள இந்த பைக் எவ்வளவு தூரம் மக்களுக்கு பிடித்ததாக இருக்கும் என்ற முழுமையான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹீரோ நிறுவனம் எக்ஸ்ட்ரீம் 125ஆர் என்ற பைக்கை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. சிறந்த பெர்பார்மன்ஸ் கொண்ட பைக்காக இந்த பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று அறிமுகமாகியுள்ள இந்த பைக்கின் புக்கிங் தற்போது துவங்கி உள்ளது. இந்த பைக்கின் டெலிவரி வரும் பிப்ரவரி மாதம் 20ம் தேதி முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hero Xtreme 125R launched

இந்த பைக்கின் டிசைனை பொருத்தவரை 125சிசி பைக்கில் உள்ள டிசைன்களுக்கு போட்டியாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்போர்ட்டி அஸ்தடிக் மற்றும் கண்களை கவரும் லுக் இந்த பைக்கில் உள்ளன. இது மட்டுமல்ல இந்த பைக்கில் லேட்டஸ்ட் தொழில்நுட்ப வசதிகள் இருக்கிறது. இந்த பைக்கின் டிசைன் மொழி இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறும் மக்களை கவரும் வகையிலும் இருக்கிறது.

இந்த பைக்கில் இந்த செக்மெண்டிலேயே முதல்முறையாக வழங்கப்படும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. முக்கியமாக இதில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளன. இது இரவு நேரங்களில் சிறப்பான வெளிச்சத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை ஸ்பிரிண்ட் இபிடி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது0 இது அதிகமான பவரையும் விரைவான டார்க்கையும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Hero Xtreme 125R launched

இந்த இன்ஜின் சிறப்பான பெர்பார்மென்ஸை வழங்கும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த பைக் 0 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.9 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது. இந்த பைக் ஒரு லிட்டருக்கு 66 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக் குறைந்த எடை கொண்ட பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது டைமண்ட் ஃபிரேமில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த பைக்கை ஓட்டும் போது நல்ல சொகுசான வசதியும் அதே நேரம் ஹேண்டிற்கும் சிறப்பாக இருக்கும். பாதுகாப்பை பொறுத்தவரை இந்த செக்மெண்டிலேயே பெரிய 276 மீமி டிஸ்க் பிரேக் முன் பக்க வீலில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பைக்கின் பிரேக்கிங் பவர் சிறப்பாக இருக்கிறது. சஸ்பென்ஷன் செட்டப்பை பொறுத்தவரை சற்று பிரீமியமாக இருக்கிறது. 377 மிம கொண்ட முன்பக்க ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளன.

Hero Xtreme 125R launched

பின்பக்கம் 7 ஸ்டெப் கொண்ட மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த மௌன ஷாக் சஸ்பென்சனை SHOWA நிறுவனம் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்த செக்மென்டிலேயே சிறந்த சஸ்பென்ஷன் கொண்ட பைக்காக இதுதான் இருக்கிறது. நம்மை எந்த வகையிலும் ஏமாற்றாத படி இந்த பைக் 11.4பிஎச்பி பவரை 8250ஆர்பிஎம்-ல் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் நிச்சயம் 125சிசி இன்ஜின் கொண்ட பைக்குகளை விரும்பும் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் ஸ்டைல் பெர்ஃபார்மன்ஸ் புதிய அம்சங்கள் எல்லாம் ஒரு சேர சேர்ந்துள்ளது நிச்சயம் இந்த பைக்குக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் சாதாரண 125சிசி பைக் போல இல்லாமல் நிச்சயம் அதைவிட அதிகமான அம்சங்கள் மற்றும் அதிக கவர்ச்சி நிறைந்த பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக எண்ணிக்கையிலான விற்பனை இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Hero Xtreme 125R launched

இந்த பைக்கின் விலையைப் பொறுத்தவரை முன்பே நாம் சொன்னத படி ரூபாய் 95,000 முதல் 99,000 வரை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கிற்கான புக்கிங்கும் துவங்கியுள்ளதால் பலர் இந்த பைக்கை தற்போதைய புக் செய்ய துவங்கி விட்டனர். வரும் பிப்ரவரி மாதம் 20ம் தேதி முதல் இந்த பைக்கின் டெலிவரி துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125 ஆர் பைக் ஹீரோ நிறுவனத்தில் ஒரு மைல் கல் தயாரிப்பு என்றே சொல்ல வேண்டும். புதிய கண்டுபிடிப்புகள் டிசைன் என அனைத்திலும் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு இந்த பைக்கை உருவாக்கி உள்ளது. 125சிசி செக்மெண்ட்டில் சிறந்த பைக்காக இருக்கிறது. சாலையில் சென்றால் மற்றவர்கள் திரும்பி பார்க்கும் வகையில் இந்த பைக் இருக்கிறது. இதனால் இதன் விற்பனை சிறப்பாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 23, 2024, 18:09 [IST]
English summary
Hero xtreme 125r launched design features details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X