ஸ்பிளெண்டர் அல்ல.. குறிப்பிட்ட அந்த பைக் மாடலை நாள் ஒன்றிற்கே 1000 யூனிட் தயாரிக்க உத்தரவிட்ட ஹீரோ!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பைக் மாடலாக ஸ்பிளெண்டர் (Splender) இருக்கின்றது. இந்த நிலையிலேயே, ஸ்பிளெண்டர் அல்லாத ஓர் பைக் மாடலின் உற்பத்தியை ஹீரோ நிறுவனம் அதிகரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது என்ன பைக் மாடல் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஹீரோ நிறுவனத்தின் புகழ்பெற்ற பைக் மாடல்களில் ஒன்றாக எக்ஸ்ட்ரீம் 125ஆர் (Xtreme 125R) இருக்கின்றது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 125 சிசி பைக் மாடல்களில் ஒன்றாகவும் இது இருக்கின்றது. இதன் உற்பத்தி பணிகளையே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதிகரிக்கச் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Hero xtreme 125r

இப்போதைய நிலவரப்படி நிறுவனம் மாதம் ஒன்றிற்கு 10 ஆயிரம் யூனிட்டுகள் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125 ஆர் பைக்கை தயாரித்துக் கொண்டிருக்கின்றது. இதையே நாள் ஒன்றிற்கே 1000 யூனிட்டுகளாக உயர்த்த திட்டமிட்டு இருக்கின்றது. அதாவது, மாதம் ஒன்றிற்கு 25 ஆயிரம் யூனிட்டுகள் வரை உற்பத்தியை அதிகரிக்க ஹீரோ திட்டமிட்டுள்ளது.

இந்த பைக்கிற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே அதன் உற்பத்தியை அதிகரிக்க ஹீரோ திட்டமிட்டுள்ளது. எனவே தற்போது இந்த பைக்கிற்கு நிலவும் காத்திருப்பு காலம் மிகப் பெரிய அளவில் குறைய நேரிடும். 125 சிசி பிரிவில் ஹீரோ நுழைந்தது இந்த பைக்கின் வாயிலாகவே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இளம் தலைமுறையினர்களைக் கவரும் நோக்கிலேயே இதனை ஹீரோ விற்பனைக்குக் கொண்டு வந்தது. அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஓர் 125 சிசி பைக்காக இது காட்சியளிக்கின்றது. 124.77 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 11.4 பிஎச்பி பவரை 8,250 ஆர்பிஎம்மிலும், 10.5 என்எம் டார்க்கை 6,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும்.

இந்த பைக் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கே 56 கிமீ வரையில் மைலேஜ் தரும். கொஞ்சம் பார்த்து பார்த்து ஓட்டினால் 56 கிமீட்டருக்கும் அதிகமான மைலேஜை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக் தற்போது இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஐபிஎஸ் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆகியவையே அவை ஆகும். ரூ. 95 ஆயிரம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் அதிகபட்ச விலையே ரூ. 99,500 மட்டுமே ஆகும். இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் மதிப்பு மட்டுமே ஆகும்.

இந்த பைக்கை மூன்று விதமான நிற தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும். கோபால்ட் ப்ளூ (Cobalt Blue), ஃபையர் ஸ்டார்ம் ரெட் (FireStorm Red) மற்றும் ஸ்டாலியன் பிளாக் (Stallion Black) ஆகியவையே அவை ஆகும். இதில் பொருத்தப்பட்டு இருக்கும் 125 சிசி மோட்டார் அதிக திறனை வெளியேற்றக் கூடியது ஆகும்.

வெறும் 5.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 60 கிமீ வேகத்தை இந்த பைக் எட்டிவிடும். மேலும், இதில் பொருத்தப்பட்டிருக்கும் ஹெட்லைட் இரவு நேரத்தை சமாளிக்க ஏதுவானது என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. பாதுகாப்பிற்காக இந்த பைக்கில் டிஸ்க் (Disc) மற்றும் ஏபிஎஸ் (ABS) ஆகியவை வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நல்ல விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த பைக்கின் உற்பத்தியை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இரட்டிப்பாக்கி இருக்கின்றது. உற்பத்தி பணிகள் இரட்டிப்பாவதனால் இந்த பைக்கை புக் செய்துவிட்டுக் காத்துக் கொண்டிருப்பவர்கள் விரைவில் அந்த பைக்குகளை தங்களின் கைகளில் பெறுவார்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, May 20, 2024, 19:05 [IST]
English summary
Hero xtreme 125r production increase
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+