எல்லாரும் போட்டி போட்டு வாங்கும் ஹீரோ பைக்!! பஜாஜ் பல்சரில் புதிய மாடலுக்கு கஸ்டமர்கள் கிடைப்பார்களா?

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), இந்தியாவின் முன்னணி 2-வீலர் உற்பத்தி நிறுவனம். ஸ்பிளெண்டர் பைக்குகளை மட்டும் மாதத்திற்கு இலட்சக்கணக்கில் விற்பனை செய்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக, கடந்த சில வருடங்களாக ஹீரோ மோட்டோகார்ப் தொடுவது எல்லாம் வெற்றியாகவே உள்ளது. ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 இந்திய அட்வென்ச்சர் பைக்குகள் மார்க்கெட்டில் புதிய அத்தியாயத்தை துவங்கியுள்ளது. அதேபோன்று, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கிற்கும் நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. டிவிஎஸ் ரைடர் 125 பைக் மட்டும் அனுபவித்து வந்த விற்பனையை எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கும் பெற துவங்கியுள்ளது.

மக்களுக்கு பைக்கின் விலையும் அதிகமாக இருக்கக்கூடாது, அதேநேரம் போதுமான அளவு பவர்ஃபுல்லானதாக இருக்க வேண்டும், பார்க்க மிகவும் ஸ்டைலாக இருக்க வேண்டும். இவற்றை எல்லாம் நிவர்த்தி செய்யக்கூடியவைகளாக இந்த 125சிசி பைக்குகள் விளங்குகின்றன. இந்த பைக் பிரிவில் புதியதாக பல்சர் என்125 பைக்கும் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பஜாஜ் பல்சர் என்125 பைக்கிற்கும், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கிற்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை இனி பார்க்கலாம்.

hero xtreme vs bajaj pulsar

தோற்றம்: இரண்டும் மாடர்ன் 125சிசி பைக்குகளாக உள்ளதால் இரண்டுமே ஸ்டைலிலில் வேற லெவலில் உள்ளன. குறிப்பாக, புதிய பல்சர் என்125 பைக் சூப்பர்மோட்டார்ட் என்கிற விசித்திரமான ரக பைக்குகளை போன்று உள்ளது. மார்க்கெட்டில் இருக்கும் போட்டியை மனதில் வைத்து என்125 பைக்கை பஜாஜ் வடிவமைத்திருப்பது பைக்கின் தோற்றத்தில் தெரிகிறது.

ஆனால் அதேநேரம் பல்சர் என்125 பைக்கிற்கு எந்த விதத்திலும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் சளைத்தது இல்லை. ஏனெனில், இந்த 125சிசி ஹீரோ பைக்கும் கடந்த 2023ஆம் ஆண்டில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. 1 வருடத்திற்கு முன்பே அறிமுகம் செய்யப்பட்ட போதிலும் எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கின் டிசைனை புதிய பல்சர் என்125 நெருங்க கூட இல்லை. ஒட்டுமொத்தமாக வேண்டுமாயின் புதிய பல்சர் என்125 பைக் இருக்கை அமைப்பை படகு போன்று கொண்டுள்ளதை ஹைலைட்டாக சொல்லலாம்.

என்ஜின்: புதிய பஜாஜ் பல்சர் என்125 மற்றும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் என 2 பைக்குகளிலும் 125சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகளில் இரு பைக்குகளுக்கும் இடையே சிறிய வித்தியாசம் உள்ளது. புதிய பல்சர் என்125 பைக்கில் 0.4 பிஎச்பி மற்றும் 0.5 என்.எம் டார்க் திறனை அதிகமாக பெறலாம்.

அதாவது, என்125 பைக்கின் 124.5சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 11.8 பிஎச்பி மற்றும் 11 என்.எம் டார்க் திறன் வரையிலும், எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கின் 124.7சிசி என்ஜின் 11.4 பிஎச்பி மற்றும் 10.5 என்.எம் டார்க் திறன் வரையிலும் இயக்க ஆற்றலை பைக்கிற்கு வழங்கக்கூடியவைகளாக உள்ளன. அதேபோல், எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கை காட்டிலும் பல்சர் என்125 பைக் ஏறக்குறைய 9 கிலோ குறைவான எடையுடன் உள்ளதால், இந்த புதிய பல்சர் பைக்கில் மைலேஜையும் அதிகமாக பெற முடியும்.

மற்ற இயந்திர பாகங்கள்: இந்த இரு 125சிசி பைக்குகளிலும் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன. அதேபோல், 17-இன்ச் அலாய் சக்கரங்கள், ட்யூப்லெஸ் டயர்கள், எல்இடி விளக்குகள் மற்றும் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக் உள்ளிட்டவற்றையும் இவை இரண்டிலும் காணலாம்.

அதேபோல், இந்த பைக்குகளில் பின் சக்கரத்தில் டிரம் பிரேக்கும், எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் வழங்கப்படுகின்றன. தரையில் இருந்து ரைடர் இருக்கை உயரம் இரு பைக்குகளிலும் பெரியதாக வித்தியாசம் இல்லை. ஆனால், பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு ஆனது பல்சர் என்125 பைக்கில் 9.5 லிட்டர்களிலும், எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கில் 10 லிட்டர்களிலும் கொடுக்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், 125சிசி பைக்குகளை ஸ்டைலான தோற்றத்தில் வாங்குவதற்கு நிறைய பேர் விருப்பம் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். இதன் மூலமாகவே ஹீரோ மோட்டோகார்ப் அதன் எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கிற்கு அதிக கஸ்டமர்களை பெற்று வருகிறது. இதனை கருத்தில் கொண்டே பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் புதிய பல்சர் என்125 பைக்கை அறிமுகம் செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 26, 2024, 23:59 [IST]
English summary
Hero xtreme 125r vs bajaj pulsar n125 check design features price full comparison here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+