பல்சர் பைக்கை வாங்குற பணத்தில் வேறென்ன பைக்குகளை வாங்கலாம்? எல்லாமே லேட்டஸ்ட் பைக்ஸ்.. மார்க்கெட்டுக்கு புதுசு

புதியது, புதியதாக எத்தனை பைக்குகள் வந்தாலும், அவை பெரும்பான்மையான மக்களால் வாங்கக்கூடிய அளவிற்கு குறைவான விலையில் இருந்தால் மட்டுமே இந்தியாவை பொறுத்தவரையில் அதிக கஸ்டமர்களின் கவனத்தை பெற முடியும். 100சிசி பைக்குகள் கிட்டத்தட்ட செத்துவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும். ஹீரோ ஸ்பிளெண்டரை தவிர்த்து மற்ற பைக்குகள் எதுவும் 100சிசி என்ஜின் உடன் அதிகம் விற்பனையாகுவது இல்லை.

இந்த காலத்தில், புதியதாக விற்பனைக்குவரும் ஸ்கூட்டர்கள் கூட குறைந்தது 125சிசி என்ஜினை கொண்டுள்ளன. சமீப காலமாக, 125சிசி-இல் நிறைய பைக்குகள் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளன. டிவிஎஸ் மோட்டாரின் ரைடர் இதற்கு புள்ளையார் சுழி போட்டு வைத்தது. ரைடரை தொடர்ந்து, பஜாஜ் நிறுவனம் அதன் பிரபலமான பல்சர் வரிசையில் புதிய மாடலாக பல்சர் என்.எஸ்125 பைக்கை அறிமுகப்படுத்தியது.

hero vs bajaj vs tvs

இந்த வரிசையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மிக சமீபத்தில் அதன் எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கை அறிமுகப்படுத்தியது. இந்திய மார்க்கெட்டில் இன்னும் நிறைய 125சிசி பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், மாடர்ன் தோற்றத்தில் லேட்டஸ்ட்டாக விற்பனைக்கு வந்தவை மேலே கூறப்பட்டுள்ள மூன்று 125சிசி பைக்குகள் ஆகும். இவை மூன்றில் எதை வாங்குவது? இவை மூன்றிற்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தோற்றம்: தோற்றத்தை பொறுத்தவரையில், லேட்டஸ்ட் மாடல் என்பதால் ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125ஆர் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாக உள்ளது. என்.எஸ்125 ஆனது பல்சர் என்.எஸ் பைக்குகளுக்கே உண்டான நாக்டு தோற்றத்தில் கிடைக்கிறது. டிவிஎஸ் ரைடர் அதன் குறைவான விலைக்கேற்ப கொஞ்சம் சிம்பிளான தோற்றத்தை கொண்டுள்ளது. ரைடர் பைக்கின் தோற்றம் ஆரம்பத்தில் நிறைய கஸ்டமர்களை கவரவில்லை. ஆனால், சமீப காலமாக நிறைய பேர் ரைடர் பைக்கை வாங்க ஆரம்பித்துள்ளனர்.

hero vs bajaj vs tvs

என்ஜின்: பஜாஜ் பல்சர் என்.எஸ்125 பைக்கில் 125சிசி டிடிஎஸ்-ஐ என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 11.83 பிஎச்பி மற்றும் 11 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில் 124.8சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்/ ஆயில்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 11.22 பிஎச்பி மற்றும் 11.2 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடனும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. புதிய மாடர்ன் 125சிசி பைக்கான ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கில் 125சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 11.4 பிஎச்பி மற்றும் 10.5 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.

hero vs bajaj vs tvs

விலை: பஜாஜ் பல்சர் என்.எஸ்125 பைக்கின் அப்டேட்டட் வெர்சனின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.05 லட்சமாக உள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இதனை காட்டிலும் குறைந்த விலையில் ரூ.95,000 - ரூ.99,500இல் புதிய எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. மறுப்பக்கம், டிவிஎஸ் ரைடர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.95,219இல் இருந்து ரூ.1.03 லட்சம் வரையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட லேட்டஸ்ட் பைக்காக இருப்பதால், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் ஷார்ப் லைன்களை கொண்ட ஸ்டைலான பைக்காக உள்ளது. என்ஜின் பவரை பொறுத்தவரையில், பஜாஜ் பல்சர் என்.எஸ்125 பைக் சற்று ஆற்றல்மிக்கதாக உள்ளது. இந்த 3 பைக்குகளிலும் ஒரே மாதிரியாக 5 கியர்கள் கிடைக்கின்றன.

விலையை பொறுத்தவரையில், கொஞ்சம் ஸ்டைலான தோற்றத்தை கொண்டிருப்பதால் என்.எஸ்125 பைக்கின் விலை அதிகமாக உள்ளது. டிவிஎஸ் ரைடர் விலை குறைவான & ஸ்டைலிஷான 125சிசி பைக்காக பார்க்கப்படும் நிலையில், அதற்கு இணையாக குறைந்த விலையில், மாடர்ன் தோற்றத்தில் எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் களமிறக்கி உள்ளது. எங்களை கேட்டால், மார்க்கெட்டிற்கு புதியதான ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கை வாங்கி ட்ரை செய்து பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, March 8, 2024, 8:00 [IST]
English summary
Hero xtreme 125r vs tvs raider 125 vs bajaj pulsar ns125 check full comparison here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X