இந்த இரண்டில் எதை வாங்குவது? இளைஞர்கள் பலரை குழப்பிவிடும் கேள்வி - கொஞ்சம் கஷ்டம்தான்!!

இந்தியாவில் 125சிசி பைக்குகளுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. இதன் காரணமாகவே புதியது, புதியதாக 125சிசி பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் ரைடர் 125 மற்றும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125சிசி பைக்குகளின் விற்பனை மிக சிறப்பாக உள்ளது. மாதத்திற்கு மாதம் இவற்றின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இவற்றின் ஸ்டைலிஷான தோற்றம் ஆகும். குறிப்பாக, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கின் டிசைன் வாடிக்கையாளர்கள் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது.

தோற்றத்தில் கொஞ்சம் சிம்பிளானதாக இருப்பினும், எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கிற்கு நிறைய விஷயங்களில் ரைடர் 125 ஆனது சவாலான போட்டியாக உள்ளது. இந்த இரு 125சிசி பைக்குகளுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்கவுள்ளோம். விலையில், ரைடர் 125 ஆனது மலிவான பைக்காக விளங்குகிறது.

hero xtreme vs tvs raider

சமீபத்தில்தான், ரைடர் 125 பைக்கில் டிரம் பிரேக்குகள் உடன் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.84,869இல் இருந்து ஆரம்பிக்கின்றன. மொத்தம் 5 விதமான வேரியண்ட்களில் ரைடர் 125 பைக் கிடைக்கிறது. இந்த டிவிஎஸ் பைக்கின் டாப் எஸ்.எக்ஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.04 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ரைடர் 125 பைக்கில் இரண்டாக பிரிக்கப்பட்ட இருக்கை, அலாய் சக்கரங்கள், டிஸ்க் பிரேக், எல்இடி விளக்குகள் மற்றும் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. மறுப்பக்கம், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கை பொறுத்தவரையில், இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.95,181இல் இருந்து ஆரம்பிக்கின்றன.

ஆனால், இந்த 125சிசி ஹீரோ பைக் இரண்டு வேரியண்ட்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஒரு வேரியண்ட்டில் ஒருங்கிணைக்கப்பட்ட பிரேக்கிங் சிஸ்டமும், இன்னோரு வேரியண்ட்டில் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ்-உம் வழங்கப்படுகிறது. ஏபிஎஸ் உடன் இந்த ஹீரோ பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டுகிறது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கின் அடையாளமே அதன் ஸ்டைலான ரக்டான தோற்றம் ஆகும்.

இரு வேரியண்ட்களிலும் இந்த ஹீரோ பைக்கின் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல், இரு வேரியண்ட்களிலும் அலாய் சக்கரங்களை பெறலாம். சவுகரியமான பயணத்திற்காக, எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கில் ஷோவா சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது. என்ஜினை பொறுத்தவரையில், இந்த இரு பைக்குகளும் சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜினை பெறுகின்றன.

ஆனால், என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய இயக்க ஆற்றலில் இரண்டிற்கும் இடையே சிறிய வித்தியாசம் உள்ளது. டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில் பொருத்தப்படும் 124.8சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 11.2 பிஎச்பி மற்றும் 11.2 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கில் பொருத்தப்படும் 124.7சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 11.4 பிஎச்பி மற்றும் 10.5 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளன.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக்கில் என்ஜின் டார்க் திறன் ஆனது ரைடரை காட்டிலும் 0.7 என்.எம் குறைவு ஆகும். இந்த இரு பைக்குகளிலும் என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ரைடர் 125 பைக்கை காட்டிலும் எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக் எடைமிக்கதாக உள்ளது. ரைடர் 125 பைக்கின் எடை 123 கிலோ, எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கின் எடை 136 கிலோ ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பல்வேறு 125சிசி பைக்குகள் விற்பனையாகி உள்ளன மற்றும் விற்பனையாகி கொண்டிருக்கின்றன. ஆனால், டிவிஎஸ் ரைடர் 125 பைக்கிற்கு மட்டும் கொஞ்சம் அதிகமாக வரவேற்பு நீண்ட நாட்களுக்கு கிடைத்து வருகிறது. ரைடர் 125 பைக்கின் விற்பனையை குறைக்க ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்த எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கிற்கு அதனை காட்டிலும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, September 30, 2024, 8:00 [IST]
English summary
Hero xtreme 125r vs tvs raider 125cc bikes comparison check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+