ஜப்பானில் இருந்து வந்து இந்தியாவில் லட்சக்கணக்கில் 2-வீலர்களை விற்குது!! ஹோண்டாவின் வெற்றிக்கு காரணம் என்ன?
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle & Scooter India - HMSI) இருசக்கர வாகனங்கள் விற்பனையில் 2வது பெரிய நிறுவனமாக விளங்குகிறது. ஹீரோ மோட்டோகார்ப்புக்கு அடுத்ததாக அதிக எண்ணிக்கையில் 2-வீலர்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஹோண்டா ஆகும். ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான 2-வீலர்களை எளிதாக இந்தியாவில் விற்பனை செய்யும் ஹோண்டா ஜப்பானை சேர்ந்த நிறுவனம் என்பது நமக்கு தெரியும். இத்தகைய 2-வீலர் நிறுவனம் கடந்த 2024 மே மாதத்தில் எத்தனை இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது என்பது குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி பார்க்கலாம்.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தில் இருந்து கடந்த 2024 மே மாதத்தில் மொத்தம் 4 லட்சத்து 92,047 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டில் இதே மே மாதத்தில் வெறும் 3 லட்சத்து 29,393 இருசக்கர வாகனங்களை மட்டுமே ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில், 2023 மே மாதத்தை காட்டிலும் 2024 மே மாதத்தில் சுமார் 1.6 லட்சம் இருசக்கர வாகனங்களை இந்தியாவில் ஹோண்டா அதிகமாக விற்பனை செய்துள்ளது. கடந்த மே மாதத்தில் ஹோண்டா 2-வீலர் நிறுவனம் விற்பனை செய்துள்ள 4,92,447 இருசக்கர வாகனங்களில் கிட்டத்தட்ட 4 லட்சத்து 50,589 இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும்.
அதாவது, HMSI-இன் மொத்த விற்பனையில் உள்நாட்டு விற்பனை மட்டும் 91.50% ஆகும். மீதி 41,858 மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும். 2023 மே மாதத்துடன் ஒப்பிடுகையில், ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 44.82 சதவீதமும், வெளிநாட்டு ஏற்றுமதி சுமார் 127 சதவீதமும் கடந்த மாதத்தில் அதிகரித்துள்ளது.

ஏனெனில், 2023 மே மாதத்தில் 3 லட்சத்து 11,144 இருசக்கர வாகனங்களை இந்தியாவிலும், வெறும் 18,249 இருசக்கர வாகனங்களை மட்டுமே வெளிநாட்டிலும் HMSI விற்பனை செய்திருந்தது. ஆனால், 2024 ஏப்ரல் மாதத்தில் சுமார் 5 லட்சத்து 41,946 இருசக்கர வாகனங்கள் HMSI-ஆல் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதாவது, கடந்த மே மாதத்தை காட்டிலும் ஏப்ரல் மாதத்தில் அதிக எண்ணிக்கை 2-வீலர்களை ஹோண்டா விற்பனை செய்திருந்தது.
2024 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் இருந்து ஹோண்டா நிறுவனம் சுமார் 60,900 இருசக்கர வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. HMSI நிறுவனம் மட்டுமின்றி, இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் பிராண்டாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்பின் இருசக்கர வாகனங்கள் விற்பனையும் இந்த ஆண்டு ஏப்ரல் உடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளது.

எந்த அளவிற்கு என்றால், 2024 ஏப்ரலில் 5 லட்சத்து 33,385 இருசக்கர வாகனங்களை ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் 4 லட்சத்து 98,123 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை காட்டிலும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அதிக 2-வீலர்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
HMSI நிறுவனத்தில் இருந்து அதிக வரவேற்பை பெற்றுவரும் இருசக்கர வாகனங்களாக ஆக்டிவா ஸ்கூட்டர் மற்றும் ஷைன் 100 பைக் விளங்குகின்றன. குறிப்பாக, ஷைன் 100 பைக்கை வெறும் 1 வருடத்தில் 3 லட்ச யூனிட்கள் ஹோண்டா விற்பனை செய்துள்ளது. இவை மட்டுமின்றி, ஷைன் 125 மற்றும் எஸ்பி125 பைக்குகள் மூலமாக 125சிசி பைக்குகள் பிரிவிலும் ஹோண்டா ஆதிக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் 2-வீலர்கள் விற்பனையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் வளர்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 2-வீலர் விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப்பை முந்திய ஹோண்டா நிறுவனம் கடந்த மே மாதத்திலும் முந்தியுள்ளதா என்பது ஹீரோ மோட்டோகார்பின் மே மாத சேல்ஸ் ரிப்போர்ட் வெளிவந்தால் தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications









