கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
இந்தியாவில் ஹோண்டா (Honda) நிறுவனத்தின் டூவீலர்களுக்கு (Two-wheelers) மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் டூவீலர்கள் நீண்ட வருடங்களுக்கு நீடித்து உழைக்க கூடியவை. நம்பகத்தன்மை வாய்ந்த இன்ஜின்களே இதற்கு முதன்மையான காரணமாக கருதப்படுகின்றன. இதுதவிர பிரம்மாண்டமான சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்கும் ஹோண்டா நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் நாட முக்கியமான ஒரு காரணமாக இருக்கிறது.
இந்திய வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வாரி வழங்கி வருவதால், விற்பனையில் பல்வேறு புதிய மைல்கல்களை (Milestone) ஹோண்டா கடந்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது மிக பிரம்மாண்டமான மைல்கல் ஒன்றை ஹோண்டா நிறுவனம் கடந்துள்ளது. இந்திய சந்தையில் 6 கோடி டூவீலர்கள் விற்பனை (6 Crore Two-wheeler Sales) என்பதுதான் அந்த மைல்கல்!

இந்த மைல்கல்லை எட்டுவதற்கு ஹோண்டா நிறுவனம் சுமார் 23 வருடங்களை எடுத்து கொண்டுள்ளது. ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த 2001ம் ஆண்டுதான் காலடி எடுத்து வைத்தது. இந்திய சந்தையில் ஹோண்டா களமிறக்கிய முதல் தயாரிப்பு ஆக்டிவா (Honda Activa) ஆகும்.
இந்திய சந்தையில் முதல் 1 கோடி டூவீலர்களை விற்பனை செய்ய ஹோண்டா நிறுவனம் 11 ஆண்டுகளை எடுத்து கொண்டது. இதன்பின் அடுத்த 3 ஆண்டுகளில், 2 கோடி டூவீலர்கள் விற்பனை என்ற மைல்கல் எட்டப்பட்டது. இதற்கு அடுத்த 2 ஆண்டுகளில், 3 கோடி டூவீலர்கள் விற்பனை என்ற மைல்கல்லை ஹோண்டா நிறுவனம் கடந்தது.

எஞ்சிய 3 கோடி டூவீலர்கள், அதற்கு அடுத்த 7 ஆண்டுகளில் விற்பனையாகியுள்ள. ஒட்டுமொத்தத்தில் 2001ம் ஆண்டில் தொடங்கிய ஹோண்டா நிறுவனத்தின் பயணம் நடப்பு 2024ம் ஆண்டில், 6 கோடி வாடிக்கையாளர்கள் என்ற பிரம்மாண்டமான மைல்கல்லை கடந்துள்ளது. இதற்காக இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஹோண்டா நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.
ஆக்டிவா (Activa), ஆக்டிவா 125 (Activa 125), டியோ (Dio), டியோ 125 (Dio 125), ஷைன் 100 (Shine 100), ஷைன் 125 (Shine 125), எஸ்பி125 (SP125), எஸ்பி160 (SP160), சிடி 110 ட்ரீம் டீலக்ஸ் (CD 110 Dream Deluxe), லிவோ (Livo), யூனிகார்ன் (Unicorn), ஹார்னெட் 2.0 (Hornet 2.0) மற்றும் சிபி200எக்ஸ் (CB200X) உள்ளிட்ட டூவீலர்களை ஹோண்டா விற்பனை செய்து வருகிறது.
இவை தவிர பிரீமியம் செக்மெண்ட்டில், சிபி350 (CB350), ஹைனெஸ் சிபி350 (H'ness CB350), சிபி350ஆர்எஸ் (CB350RS), சிபி300எஃப் (CB300F), சிபி300ஆர் (CB300R), என்எக்ஸ்500 (NX500), எக்ஸ்எல்750 ட்ரான்ஸ்லேப் (XL750 Transalp), ஆஃப்ரிக்கா ட்வின் (Africa Twin) மற்றும் கோல்டு விங் டூர் (Gold Wing Tour) ஆகிய தயாரிப்புகளை ஹோண்டா விற்பனை செய்து கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 23 ஆண்டுகளில் 6 கோடி டூவீலர்கள் விற்பனை என்பது சாதாரண விஷயம் அல்ல. இது மிகப்பெரிய சாதனை ஆகும். இந்த சாதனை இன்னும் அதிக வாடிக்கையாளர்களை ஹோண்டா ஷோரூம்களை நோக்கி ஈர்க்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
இதன் மூலம் ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் இன்னும் 4 கோடி டூவீலர்களை வெகு விரைவில் விற்பனை செய்து, 10 கோடி டூவீலர்கள் விற்பனை என்ற மிக பிரம்மாண்டமான மைல்கல்லை அடுத்த சில ஆண்டுகளில் எட்டி விடும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








