ஆக்டிவா ஸ்கூட்டரை ரூ10,000 கம்மி விலையில் வாங்க முடியுமா? பலருக்கு இப்படி ஓரு விஷயம் இருக்குறதே தெரியாது!
இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி வரும் ஸ்கூட்டராக ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் தான் இருக்கிறது. அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்த ஸ்கூட்டரை ஒவ்வொரு மாதமும் வாங்கி வருகிறார்கள். இதனால் ஒவ்வொரு மாதமும் டாப் டென் ஸ்கூட்டர் பட்டியலில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் தான் முதலிடத்தில் இருக்கும் இந்நிலையில் இந்த ஸ்கூட்டரை கம்மியான விலைக்கு வாங்க ஒரு வாய்ப்பு இருக்கிறது. இதைப் பற்றிய விரிவான விவரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
ஆக்டிவா ஸ்கூட்டர் மிகப்பெரிய புரட்சி செய்து உள்ளது என்று சொல்லலாம். ஒரு காலத்தில் ஸ்கூட்டர்கள் என்றால் அது பெண்கள் ஓட்டம் வாகனம் என்று இருந்த நிலையை மாற்றி ஆண்களும் இந்த வாகனத்தை ஓட்டலாம் என்ற நிலைக்கு கொண்டு வந்தது. இந்த ஆக்டிவா ஸ்கூட்டருக்கு மிக பொருத்தமான விஷயமாகும்.

ஆக்டிவா ஸ்கூட்டரை ரூ 10,000 குறைவான விலையில் வாங்கலாம் என சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? இந்த ஸ்கூட்டருக்கான ஜிஎஸ்டி வரி குறைவாக செலுத்தி இந்த கூட்டத்தை வாங்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு இந்தியாவில் கிடைத்துள்ளது. இந்த முறையில் அவர்கள் வாகனத்தை வாங்கினால் ரூபாய் 10 ஆயிரம் வரை சேமிக்க முடியும். யார் யார் இதை வாங்கலாம் என பார்ப்போம்.
இந்தியாவில் ராணுவத்தில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு கேண்டீன்கள் மூலம் குறைவான விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ராணுவ கேண்டீனில் இந்த ஸ்கூட்டரும் விற்பனையாகி வருகிறது. வெளிமார்க்கெட்டில் உள்ள பொருட்களுக்கும் ராணுவ கேண்டீனில் உள்ள பொருட்களுக்கும் வரி வித்தியாசம் என்பது இருக்கும் வெளி மார்க்கெட்டில் அதிக வரி வசூலிக்கப்படும். ராணுவ கேண்டீனில் வரி இல்லாமலோ அல்லது குறைவான வரியில்லையோ பொருட்கள் விற்பனையாகும்.
இப்படியாக ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டரும் ராணுவ கேண்டீனில் விற்பனையாகி வருகிறது. வெளியில் இருந்து ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்றால் 28% வரி செலுத்த வேண்டியது இருக்கிறது. ராணுவ கேண்டில் இந்த வாகனத்தை வாங்க 14% வரி செலுத்தினால் போதும். வெளிமார்க்கெட்டில் இருந்து வாகனம் வாங்குவதை விட ராணுவ கேண்டீன் மூலம் இந்த வாகனத்தை வாங்கினால் பணம் மிச்சமாகும்.
ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் பேஸ் வேரியண்ட் ஸ்கூட்டர் வெளி மார்க்கெட்டில் ரூபாய் 76,684 என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது. இதே ஸ்கூட்டர் ராணுவ கேண்டீனில் ரூபாய் 66,286 என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது. கிட்டத்தட்ட இந்த ஸ்கூட்டர் ரூபாய் 10,398 குறைவான விலையில் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது.
ராணுவ கேண்டீனில் இந்த வாகனத்தின் எக்ஸ்ஷோரூம் விலை தான் ரூபாய் 66,286 ஆக இருக்கிறது. இதை பதிவு செய்து ஆன் ரோடு எடுக்க வேண்டும் என்றால் ரூபாய் 81,233 செலவாகும். இதேபோல வெளிமார்க்கெட்டில் வாங்கும்போது ஆன்-ரோடு விலை வேறுபடும். இது ஊருக்கு ஊர் வேறுபடும். எப்படி கணக்கு செய்தாலும் ரூ10,000 வரை இந்த ஸ்கூட்டரை வாங்குவதன் மூலம் சேமிக்க முடியும்.
ராணுவத்தில் வேலை பார்க்கும் பலருக்கு ராணுவ கேண்டீன் மூலம் வாகனங்களை வாங்க முடியும் என்ற தகவல் தெரியாமல் இருக்கிறது. ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள் தங்கள் ராணுவ கார்டத பயன்படுத்தி இந்த வாகனத்தை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் இதற்கு பல்வேறு விதமான விதிவிலக்குகள் இருக்கின்றன. குறிப்பிட்ட வீரர்கள் மட்டுமே இந்த வாகனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும்.
அதே போல ராணுவ வீரர்கள் அவர்கள் பணியாற்றும் ரேங்கை பொறுத்து அவர்கள் எவ்வளவு பணத்திற்கு வாகனத்தை வாங்கலாம் என்பது மாறுபடும். அதேபோல ஒரு ஆண்டுக்கு எத்தனை வாகனங்கள் வாங்க முடியும் என்ற விஷயமும் மாறுபடும். இப்படியாக வாங்கப்பட்ட வாகனங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு வேறு யார் பெயருக்கு மாற்ற முடியாத சூழ்நிலையும் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ராணுவ கேண்டில் மூலம் வாகனம் விற்பனை செய்யப்படுவது பலருக்கும் தெரியாத விஷயமாக இருக்கிறது. ராணுவ வீரர்களை இதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். ராணுவ வீரர்கள் வாகனம் வாங்கும் எண்ணத்தில் இருந்தால் இந்த திட்டத்தை பயன்படுத்தி குறைவான விலையில் அவர்கள் வாகனம் வாங்க இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








