கார்களையே தூக்கி சாப்பிடும் ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா! மார்க்கெட் அதிர போகுது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ஹோண்டா ஆக்டிவா இ (Honda Activa e) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இன்று (நவம்பர் 27) பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பெங்களூர் (Bangalore) நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆக்டிவா இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் பொது பார்வைக்கு கொண்டு வந்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைனை (Design) பொறுத்தவரை, முழு எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில்லைட், ட்யூயல் டோன் இருக்கை ஆகியவை எல்லாம் மிக முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.
அத்துடன் 12 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், தட்டையான ஃபுட்போர்டு மற்றும் வலிமையான க்ராப்ரெயில் ஆகியவையும் ஹோண்டா ஆக்டிவா இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஆகும். ஹோண்டா ஆக்டிவா இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) கிடைக்கும்.

அவை பியர்ல் ஷாலோ ப்ளூ, பியர்ல் செரினிட்டி ப்ளூ, பியர்ல் மிஸ்ட்டி ஒயிட், மேட் ஃபாகி சில்வர் மெட்டாலிக் மற்றும் பியர்ல் இக்னேவுஸ் ப்ளாக் ஆகியவை ஆகும். அதே நேரத்தில் ஹோண்டா ஆக்டிவா இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிநவீன வசதிகளுக்கும் (Features) பஞ்சம் இல்லை.
7.0 இன்ச் டிஎஃப்டி ஸ்க்ரீன் மற்றும் ஹோண்டா நிறுவனத்தின் ஹெச்-ஸ்மார்ட் கீ (Honda's H-Smart Key) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். இதில், ஹோண்டா நிறுவனத்தின் ஹெச்-ஸ்மார்ட் கீ வசதி, கார்களில் இருக்கும் வசதியை போன்றது என்பது இங்கே கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

இதன் மூலமாக 'பிஸிக்கல் கீ' இல்லாமலேயே ஹோண்டா ஆக்டிவா இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 'லாக்' மற்றும் 'அன்லாக்' செய்ய முடியும். அத்துடன் நிறைய வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் பார்க்கிங் பகுதியில், உங்கள் ஹோண்டா ஆக்டிவா இ எங்கே நிற்கிறது? என்பதையும் எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
இதற்கு ஸ்மார்ட் கீ-யில் உள்ள பட்டனை மட்டும் நீங்கள் அழுத்தினால் போதும். உடனே உங்கள் ஹோண்டா ஆக்டிவா இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இன்டிகேட்டர்கள் 'பிளிங்க்' ஆகும். இதன் மூலமாக ஸ்கூட்டர் எங்கே நின்று கொண்டுள்ளது? என்பதை நீங்கள் மிகவும் எளிதாக கண்டுபிடித்து விட முடியும்.
செயல்திறனை பொறுத்தவரையில், ஹோண்டா ஆக்டிவா இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 1.5 kWh திறன் உடன் 2 பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ஸ்வாப்பபிள் பேட்டரி தொழில்நுட்பமும் (Swappable Battery Technology) வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் இருப்பதால், நீங்கள் சார்ஜ் ஏற்றுவதற்கு என தனியாக நேரம் செலவழிக்க தேவையில்லை.
அதாவது இந்த பேட்டரிகளை கழற்றி மாட்டி கொள்ள முடியும். எனவே ஏற்கனவே சார்ஜ் ஆகியுள்ள பேட்டரியை உடனடியாக மாற்றி கொண்டு, உங்கள் பயணத்தை தொடரலாம். ஹோண்டா ஆக்டிவா இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிலோ மீட்டர்கள் ஆகும்.
அதே நேரத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 7.3 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறனை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றுள்ளது. ஹோண்டா ஆக்டிவா இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஈக்கான், ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்போர்ட் என மொத்தம் 3 ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் ஹோண்டா ஆக்டிவா இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் (Range) 102 கிலோ மீட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோண்டா ஆக்டிவா இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து தொடங்கப்படவுள்ளன. அதே நேரத்தில் டெலிவரி (Delivery) பணிகள் வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து தொடங்கப்படும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹோண்டா ஆக்டிவா இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை (Price) எவ்வளவு? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் ஹோண்டா ஆக்டிவா இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தோராயமாக 1-1.10 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








