ஆக்டிவா இ: vs க்யூசி1.. ஹோண்டா அறிமுகம் செய்த இரண்டு இ-ஸ்கூட்டரில் எது பெஸ்ட்? இவ்ளோ வித்தியாசங்கள் இருக்கா!!

ஹோண்டா (Honda) நிறுவனம் சமீபத்தில் இந்தியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பிற்கு விருந்தளிக்கும் விதமாக இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகப்படுத்தியது. ஒன்று ஆக்டிவா இ: (Activa e:) எனும் பெயரிலும், மற்றொன்று க்யூசி1 (QC1) என்கிற பெயரிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின்சார இரண்டு சக்கர வாகன தேவையை பூர்த்தி செய்யும் விதமாகவே ஹோண்டா நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த இரண்டும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியான லுக்கிலேயே இருக்கின்றன.

ஆகையால், இதில் எது ஆக்டிவா இ: மற்றும் க்யூசி1 என்பதைக் கண்டுபிடிப்பதே சற்றே சிரமமாக உள்ளது. அந்த அளவிற்கே இரண்டும் ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டிருக்கின்றன. ஆனால், இரண்டிற்கும் இடையில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. அவை என்ன என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Honda activa e vs qc1 comparison

ஆக்டிவா இ: மற்றும் க்யூசி1 இடையே உருவத்தில் உள்ள வித்தியாசம்: ஆக்டிவா இ: பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். அதாவது, க்யூசி 1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலைக் காட்டிலும் அதிக அலங்கார அம்சங்களையும், சிறப்பு தொழில்நுட்ப வசதிகளையும் அது தாங்கி இருக்கும்.

குறிப்பாக, உருவத்தில் வித்தியாசமாக தென்பட வேண்டும் என்பதற்காக தனித்துவமான நிறம் கொண்ட அணிகலன் ஸ்கூட்டரின் பக்கவாட்டில் வழங்கப்பட்டு இருக்கின்றது. அந்த அணிகலன் இருக்கும் அதே நிறத்திலேயே பின் பக்க பயணிக்கான கால் வைக்கும் இடமும் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். இதுதவிர, ஆக்டிவா இ: என்கிற பேட்ஜும் இந்த ஸ்கூட்டரின் பக்கவாட்டு பின் முனையில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Honda activa e vs qc1

இவையே சியூ1 இடமிருந்து ஆக்டிவா இ: மாடலை வேறுபடுத்திக் காட்சிப்படுத்துகின்றது. இதுதவிர, முன் பக்கத்தில் மேல்பகுதியில் லைட் அமைப்பும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதனை சியூ1 மாடலில் பார்க்க முடியாது. இதேபோல், இரண்டிலும் மாறுபட்ட லுக் கொண்ட அலாய் வீல்களே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இவையே ஹோண்டாவின் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கும் இடையில் இருக்கும் மிகப் பெரிய வித்தியாசம் ஆகும்.

பேட்டரி பேக்கில் உள்ள வித்தியாசம்: ஆக்டிவா இ: எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஒரே நேரத்தில் இரண்டு 1.5 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கை பொருத்திக் கொள்ள முடியும். ஆகையால், இருக்கைக்கு அடியில் இருக்கும் இடவசதி மிகப் பெரிய அளவில் குறைவாக இருக்கும். ஆனால், க்யூசி 1 மாடலில் நிலையாக பொருத்தப்பட்ட பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது.

ஆகையால், இதை வாகனத்தில் வைத்து மட்டுமே சார்ஜ் செய்ய முடியும். அதேவேளையில், ஆக்டிவா இ: பேட்டரி பேக்கை வீடு அல்லது அலுவலகம் என எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். இரண்டு பேட்டரிகள் உள்ளநிலையில், குறிப்பாக, முழுமையான சார்ஜை கொண்டிருக்கும் எனில் 102 கிமீட்டருக்கும் அதிகமான தூரம் ஆக்டிவா இ: எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணித்துக் கொள்ள முடியும்.

மேலும், பேட்டரி ஸ்வாப்பிங் மையங்கள் வாயிலாகவும் இதன் பேட்டரிகளை மாற்றிக் கொள்ள முடியும். இதன் வாயிலாக பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு தேவைப்படும் மிக அதிக நேரத்தை தவிர்க்க முடியும். க்யூசி 1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓர் முழு சார்ஜில் 80 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

சிறப்பம்சங்களில் காணப்படும் வித்தியாசம்: ஆக்டிவா இ: எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் முன் பக்கத்திலும், மோனோஷாக் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், டிஸ்க் பிரேக்குகள் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, கார்களுக்கு வழங்கப்படுவதைப் போல ஸ்மார்ட் சாவி, அலாய் வீல்கள், டிஎஃப்டி திரை, இணைப்பு வசதி, மூன்று விதமான ரைடிங் மோட்கள் என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதேபோல், க்யூசி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் பலதரப்பட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றது. முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனும், பின் பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆனால் பிரேக்கிங் செட்-அப்பை பொருத்த வரை இரு வீல்களிலும் டிரம் பிரேக்குகளே வழங்கப்பட்டு இருக்கின்றன. டிஸ்க் பிரேக் ஒரு வீலிலும் வழங்கப்படாதது வருத்தமளிக்கும் வகையில் உள்ளது.

இத்துடன், அலாய் வீல்கள், எல்சிடி திரை, இரண்டு விதமான ரைடிங் மோட்கள், 26 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி உள்ளிட்டவற்றையும் ஹோண்டா இதில் வழங்கி இருக்கின்றது. ஆனால், இதில் ரிவர்ஸ் மோட் வழங்கப்படவில்லை. அதேவேளையில், ஆக்டிவா இ: மாடலில் இடம் பெற்று இருக்கும்.

புக்கிங் மற்றும் டெலிவரி விபரம்: ஆக்டிவா இ: புக்கிங் பணிகள் ஜனவரியில் தொடங்கப்பட இருக்கின்றது. இதேபோல், இதன் டெலிவரி பணிகள் வருகின்ற பிப்ரவரியிலேயே தொடங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், முதல்கட்டமாக இந்த வாகனம் பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லியிலேயே விற்பனைக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

க்யூசி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புக்கிங் பணிகளும் ஜனவரியிலேயே தொடங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், டெலிவரி பணிகளும் பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட இருக்கின்றது. அதேவேளையில், இது இந்தியா முழுக்க விற்பனைக்குக் கிடைக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், இந்த மின்சார வாகனங்களை பிரத்யேக ஷோரூம்கள் வாயிலாக விற்பனைக்கு வழங்க ஹோண்டா திட்டமிட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் இந்த இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஆக்டிவா இ: மாடலே சிறப்பம்சங்களை அதிகம் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது. அதேவேளையில், விலையை அது சற்று அதிகம் கொண்டதாக இருக்கும். எனவே அதிக தொகையை செலவு செய்ய தயாராக இருப்பவர்கள் தாராளமாக ஆக்டிவா இ: மாடலை வாங்கலாம். ஆனால், இப்போது அது குறைவான நகரங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆகையால், சென்னை வாசிகளால் ஹோண்டாவின் க்யூசி1 மாடலை மட்டுமே இப்போதைக்கு வாங்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Friday, November 29, 2024, 12:40 [IST]
English summary
Honda activa e vs qc1 understanding their key differences in features and performance
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+