ஓலா, ஏத்தர் எல்லாம் கடைய மூட வேண்டியது தான்! ஹோண்டா ஆக்டிவா இவி ஸ்கூட்டர்ல இப்படி ஒரு விஷயம் வருதா?
ஹோண்டா நிறுவனம் தற்போது சர்வதேச அளவில் ஆல்வீல டிரைவ் சிஸ்டத்துடன் இயங்கக்கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க திட்டமிட்டு வருகிறது. இதற்கான தொழில் நுட்ப சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருகிறது. இந்த 2024ம் ஆண்டு இறுதிக்குள் இது அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இது ஜப்பானில் இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவிற்கு வரும் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இதே தொழில்நுட்பம் புகுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அனைத்து விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹோண்டா நிறுவனம் உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பை அதிகப்படுத்துவதற்காக மிகப்பெரிய அளவில் முதலீடுகளை செய்துள்ளது. 10 ட்ரில்லியன் யென் அளவிற்கான பணத்தை முதலீடு செய்து எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் வரும் 2030-ம் ஆண்டிற்குள் 7 புதிய எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.

விற்பனையை பொருத்தவரை 2030-ம் ஆண்டிற்குள் இந்நிறுவனம் உலகம் முழுவதும் மொத்தம் விற்பனை செய்யும் வாகனங்களில் 40% வாகனங்கள் எலெக்ட்ரிக் அல்லது ஹைபிரிட் ரக வாகனங்களாக இருக்க வேண்டும் என திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில் இப்படியான எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பதில் இருக்கும். சவால்களை தீர்ப்பதற்கான புதிய தொழில்நுட்பங்களை நிறுவனம் கண்டுபிடித்து வருகிறது. அப்படியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் ஒன்றை தயாரித்துள்ளது.
இந்த தொழில்நுட்பத்திற்கு அந்நிறுவனம் இதுவரை பெயர் வைக்கவில்லை. ஆனால் ஏற்கனவே அந்நிறுவனம் தயாரித்த ஹோண்டா மொபைல் பவர் பேக் என்ற தொழில்நுட்பத்தின் கீழ் இந்த தொழில்நுட்பம் சேருகிறது. இது ஹைபிரிட் மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் எலெக்ட்ரிக் மூலம் இயங்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் இது இ-ஏடபுள்யூடி என அழைக்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் ஆல்வீல் சிஸ்டத்தை பொருத்தவரை வாகனம் ஓட்டும்போது கண்ட்ரோலாக இருப்பதற்கும், ரெஸ்பான்ஸிவாக இருப்பதற்கும் சில தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் எல்லாம் ஹோண்டா நிறுவனத்தின் மோஷன் மேனேஜ்மென்ட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டு வாகனம் குறைவான வேகத்தில் செல்லும்போதும் வாகனம் ஸ்டேபிளாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதை ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு ஹோண்டா நிறுவனம் வடிவமைத்திருந்தது. அதன்படி வாகனம் வேகமாக செல்லும்போது வாகனம் கீழே விழ முயற்சி செய்தாலும் தானியங்கியாக வாகனத்தை நேராக நிமிர்த்து வைக்கும் தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தியது. அந்த தொழில்நுட்பத்தின் மூலம் தான் இந்த ஆல்வீல் டிரைவ் சிஸ்டத்தையும் அந்நிறுவனம் இயக்குகிறது.

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் பிளாட்பார்ம் இ என்ற பிளாட்பார்மை கட்டுமானம் செய்து அதில் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதில் தான் ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரித்து விற்பனைக்கு அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பல்வேறு விதமான மோட்டார்கள் பேட்டரி பேக்கப் மற்றும் பல்வேறு விதமான பாடி ஸ்டைல்களில் வாகனங்களை உருவாக்கும் திறன் கொண்டதாக இந்த பிளாட்பார்ம் வடிவமைக்கப்படுகிறது.
இந்தியாவை பொருத்தவரை ஹோண்டா நிறுவனம் ஃபிக்ஸட்டாக பொருத்தக்கூடிய பேட்டரி செட்டப் கொண்ட வாகனங்களை தான் அறிமுகப்படுத்துகிறது. இந்நிறுவனம் முதல் முதலில் தயாரிக்க வாகனத்திற்கு ஆக்டிவா என பெயரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆக்டிவா என்ற பெயர் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று சிறப்பான விற்பனையை பெற்று வருவதால் இந்த பெயர் தான் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.
இதனால் இந்தியாவில் 2025-ம் ஆண்டில் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாக ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் என் தொழில்நுட்பம் முழுவதும் அறிமுகமாகிவிட்டால் இந்த தொழில்நுட்பங்களை எல்லாம் புகுத்தி இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கொண்ட நிறுவனம் தயாரிக்க துவங்கிவிடும். விரைவில் ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது இந்தியர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். இந்த ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் மிகப்பெரிய ஹிட்டான ஸ்கூட்டராக இருக்கிறது. இது எலெக்ட்ரிக் வெர்ஷனில் வரும்போது நிச்சயம் இதன் விற்பனை அதிகரிக்கும். ஓலா ஏத்தர்க்கு எல்லாம் போட்டியாக இந்த ஸ்கூட்டர் விற்பனை ஆகும்.


Click it and Unblock the Notifications









