ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் விலை இவ்ளோதானா! 26ம் தேதி நைட்டே ஷோரூம் வாசல்ல எல்லாரும் பாய போட்டு படுக்க போறாங்க!
இந்தியாவில் ஓலா (Ola), ஏத்தர் (Ather), டிவிஎஸ் (TVS) மற்றும் பஜாஜ் (Bajaj) உள்பட பல்வேறு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) விற்பனை செய்து வருகின்றன. ஆனால் முன்னணி டூவீலர் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஹோண்டா இன்னும் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கூட விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை. ஆனால் இந்த குறை இன்னும் சில நாட்களில் நிவர்த்தி செய்யப்படவுள்ளது. ஆம், இந்திய சந்தைக்கான ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் நவம்பர் 27ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்து கொண்டே வருகிறது. ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் முதல் முறையாக களமிறக்கவுள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், ஹோண்டா ஆக்டிவா இவி (Honda Activa EV) ஆகும்.

தற்போது விற்பனையில் இருந்து வரும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் இது. அறிமுகத்திற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா இவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வீடியோக்களை (Teaser Videos) தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.
இவற்றின் மூலம் ஹோண்டா ஆக்டிவா இவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய பல்வேறு தகவல்கள் நமக்கு தெரிய வந்து கொண்டுள்ளன. இந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள புதிய டீசர் வீடியோ ஒன்றின் மூலமாக ஹோண்டா ஆக்டிவா இவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய மற்றொரு முக்கியமான தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது.

ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கழற்றி மாட்ட கூடிய வகையிலான பேட்டரிகளை கொண்டிருக்கும் என்பதுதான் அந்த தகவல். ஹோண்டா நிறுவனம் தற்போது புதிதாக வெளியிட்டுள்ள டீசர் வீடியோவில், ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில், 2 பேட்டரிகளை நம்மால் பார்க்க முடிகிறது.
இது பேட்டரி சார்ஜிங் பற்றிய பயத்தை வாடிக்கையாளர்களுக்கு போக்கும். அதாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க வாடிக்கையாளர்கள் பலரும் தயங்குவதற்கு காரணமே பேட்டரி சார்ஜ் ஆக அதிக நேரம் ஆகும் என்பதுதான். ஆனால் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குபவர்களுக்கு அந்த பயமே தேவையில்லை.
ஏனெனில் ஒரு பேட்டரி சார்ஜ் ஆகி கொண்டிருக்கும் நேரத்தில், இன்னொரு பேட்டரியின் மூலமாக பயணம் செய்ய முடியும். எனவே பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு என தனியாக நேரம் செலவு செய்ய வேண்டியதில்லை. ஹோண்டா நிறுவனம் சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில், இந்த வசதி ஏற்கனவே உள்ளது.
இந்த வரிசையில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள ஆக்டிவா இவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் ஹோண்டா நிறுவனம் இந்த வசதியை வழங்கவுள்ளது. ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்போர்ட் என 2 ரைடிங் மோட்கள் வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், ஸ்டாண்டர்டு மோட் மூலமாக இயக்கும்போது, 104 கிலோ மீட்டர் ரேஞ்ச் (Range) கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஸ்போர்ட் மோட் மூலமாக இயக்கும்போது 80-85 கிலோ மீட்டர் ரேஞ்ச் கிடைக்கலாம். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய விரிவான தகவல்கள் அனைத்தும் வரும் நவம்பர் 27ம் தேதி அறிமுகம் செய்யப்படும்போது, நமக்கு தெரிய வரும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹோண்டா ஆக்டிவா இவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 1 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த விலையில் வந்தால், போட்டி மாடல்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்படும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








