இப்பவே புக் செய்ய பணத்தை சேர்த்து வைங்க! ஹோண்டா ஆக்டிவாவை இந்த தோற்றத்தில் யாரும் எதிர்பார்க்க மாட்டாங்க!!
ஹோண்டா ஆக்டிவா (Honda Activa), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் நம்பர் ஒன் ஸ்கூட்டர். இத்தகைய ஸ்கூட்டரை எலக்ட்ரிக் ஸ்கூட்டராக கொண்டுவர ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுதான் தற்போதைக்கு ஹாட் டாபிக்காக உள்ளது. ஏனெனில், இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மார்க்கெட்டை விரிவுப்படுத்துவதில் ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக தேதி குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மெல்ல, மெல்ல மார்க்கெட் விரிவடைந்து வருகிறது. இதன் காரணமாகவே, சமீப காலங்களில் பல்வேறு புது, புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அதேபோல், ஏற்கனவே 2-வீலர்கள் விற்பனையில் முன்னிலையில் உள்ள நிறுவனங்களும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ளன.

இந்த வகையில், ஹீரோ மோட்டோகார்ப், டிவிஎஸ் மோட்டார், பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனங்கள் கடந்த சில வருடங்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ளன. ஆனால், உண்மையான போட்டி இனி தான் ஆரம்பமாக போகிறது. ஏனெனில், இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்கூட்டராக கடந்த பல வருடங்களாக முதலிடம் வகித்துவரும் ஹோண்டா ஆக்டிவா, எலக்ட்ரிக் ஸ்கூட்டராக களமிறக்கப்பட உள்ளது.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வருகிற நவம்பர் 27ஆம் தேதி ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்ய உள்ளது. அதாவது, விலையை தவிர்த்து ஸ்கூட்டரை பற்றிய விபரங்கள் அனைத்தும் நவம்பர் 27ஆம் தேதி வெளியிடப்படும். இந்த அறிமுக நிகழ்ச்சிக்கான அழைப்பை "வாட்ஸ் அகேட்" (அடுத்து என்ன) என்கிற பெயரில் ஹோண்டா வெளியிட்டுள்ளது.

ஆக்டிவா ஸ்கூட்டர்கள் நம் நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகுவதால், ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முதலாவதாக இந்தியாவில்தான் வெளியீடு செய்யப்பட உள்ளது. அதன்பின்னர் இந்தோனிஷியாவிலும், அதற்கடுத்தே ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியீடு செய்ய ஹோண்டா திட்டமிட்டு உள்ளது.
ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் முக்கிய அம்சமாக, பேட்டரி சுழற்சி முறை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, சார்ஜ் காலியான பேட்டரியை கொடுத்துவிட்டு, கட்டணத்தை செலுத்தி சார்ஜ் நிரம்பிய பேட்டரியை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறான முறையில் ஏற்கனவே சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், ஸ்கூட்டரின் விலையை கட்டுப்பாட்டில் வைக்க, தற்போது ஹோண்டா ஆக்டிவா பெட்ரோல் ஸ்கூட்டரை உருவாக்க பயன்படுத்தப்படும் அதே யுக்தியில் ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்க ஹோண்டா முடிவெடுத்துள்ளது. அதாவது, தற்போது ஆக்டிவா பெட்ரோல் ஸ்கூட்டரை உருவாக்க பயன்படுத்தப்படும் அதே பிளாட்ஃபாரத்தில் ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட உள்ளது.
இதனால், மெக்கானிக்கல் பாகங்களில் பெரியதாக எந்த மாற்றமும் இருக்காது. ஆக்டிவா இ என அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெர்ஃபார்மன்ஸ் ஆனது தற்போதைய ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டருக்கு இணையானதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் ஏறக்குறைய 100கிமீ ஆக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பல்வேறு விதமான உடலமைப்புகளில் & விலைகளில் பல எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், ஸ்கூட்டர்களின் ராஜா வரும்போது அவருக்குதான் அரியணை ஆகும். ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கென பெரியதாக யோசிக்காமல், இப்போது இருக்கும் ஆக்டிவா பெட்ரோல் ஸ்கூட்டரின் அடிப்படையிலேயே அதனை ஹோண்டா நிறுவனம் கொண்டுவருவது சிறந்த முடிவாகவே தோன்றுகிறது.


Click it and Unblock the Notifications









