தாராளமா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக காத்திருக்கும் போலையே.. நம்ப முடியாத கம்மி விலையில் வரபோகுது!

இந்தியாவில் சீக்கிரமே விற்பனைக்கு வர இருக்கும் இரண்டு வாகன மாடல்களில் ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Honda Electric Scooter)-ம் ஒன்றாகும். இதன் வருகையை உறுதிப்படுத்தும் விதமாகவே ஹோண்டா-வின் செயல்பாடுகளும் இருக்கின்றன. நிறுவனம், ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் (Teaser) படங்களை தொடர்ச்சியாக வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது. வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்கிற நோக்கிலேயே அது டீசர் படங்களை வெளியிட்டு வருகின்றது. இருப்பினும், அது வெளியிடும் ஒவ்வொரு டீசர் படமும் போட்டியாளர்களை கதிகலங்கச் செய்யும் வகையில் அமைந்துவிடுகின்றது.

உதாரணமாக, நிறுவனத்தின் சமீபத்திய டீசர் படம் அமைந்திருக்கின்றது. ஹோண்டாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு வர இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த டீசர் படம் அமைந்திருக்கின்றது. ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற இருக்கும் டிஜிட்டல் திரையை வெளிக்காட்டக் கூடிய படங்களையே வெளியிட்டு இருக்கின்றது.

Honda activa electric scooter

இதை வைத்து எப்படி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கம்மி விலையில் விற்பனைக்கு வரும்னு எதிர்பார்க்க முடியும் என நீங்கள் கேட்கலாம். டிஜிட்டல் திரை வாயிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறைவான ரேஞ்சை தரக் கூடிய வாகனமாக விற்பனைக்கு வர இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதன் வாயிலாகவே குறைவான விலையில் ஆக்டிவா எலெக்ட்ரிக் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகி உள்ளது.

குறைவான ரேஞ்ச் என்றால், சிறிய பேட்டரி பேக்கையே அது பெறும் என தெரிகின்றது. பெரும்பாலான மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் தயாரிப்பை குறைவான விலையில் விற்பனைக்கு வழங்குவதற்கு கையாளக் கூடிய மிக சிறந்த யுக்தியாக சிறிய பேட்டரி பேக்குகள் இருக்கின்றன.

Honda activa electric scooter range teaser

இதே யுக்தியையே ஹோண்டாவும் கையாள இருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. ஓர் முழு சார்ஜில் 104 கிமீ ரேஞ்சை தரக் கூடிய ஓர் பேட்டரி பேக்கே ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இத்துடன் ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்போர்ட் ஆகிய இரண்டு விதமான ரைடிங் மோட்களும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்பட இருப்பதும் உறுதியாகி உள்ளது.

மேலும், ஃப்ளூடூத் இணைப்பு, திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் நேவிகேஷன் (Navigation) சிஸ்டம், மியூசிக் மற்றும் செல்போனுக்கு வரும் தகவல் (Notification)களை அறியும் வசதி உள்ளிட்டவற்றையும் இந்த டிஜிட்டல் திரைக் கொண்டிருக்கும் என்பது தெரிய வந்து இருக்கின்றது.

ஆகையால், போட்டியாளர்களுக்கு விலையில் மட்டுமல்ல சிறப்பம்சங்களைத் தாங்கியிருக்கும் சவாலானதாக ஹோண்டாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கப் போவது இந்த டீசர் படம் வாயிலாக உறுதியாகி இருக்கின்றது. ரூ. 80 ஆயிரம் தொடங்கி ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையிலேயே ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு மிகப் பெரிய போட்டியாக அமையும். நிறுவனத்தின் முந்தைய டீசர் படங்கள் வாயிலாக என்ன மாதிரியான ஹெட்லைட் இடம் பெற இருக்கின்றது என்பது தெரிய வந்தது. இதேபோல், ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற இருக்கும் மின்சார மோட்டாரின் டீசர் படத்தையும் ஹோண்டா வெளியிட்டு இருந்தது. இதைத்தொடர்ந்தே தற்போது டிஜிட்டல் திரையை ஹோண்டா வெளியிட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவில் மிகப் பெரிய போட்டி நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த பிரிவின் முன்னணி பிராண்டாக ஓலா எலெக்ட்ரிக், பஜாஜ், டிவிஎஸ் உள்ளிட்டவை இருக்கின்றன. இவர்களுடன் சேர்ந்து விடா பிராண்டின் வாயிலாக ஹீரோவும் களத்தை அதகளப்படுத்தி வருகின்றது. இந்த நிலையிலேயே ஹோண்டாவும் மின்சார டூ-வீலர் பிரிவை அலங்கரிப்பதற்கான பணியில் களமிறங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, November 18, 2024, 14:20 [IST]
English summary
Honda activa electric will offer 104 km range with advanced features here new teaser
மேலும்... #honda motorcycle #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+