ஒரு கி.மீ பயணிக்க வெறும் 10 பைசா தான் செலவாகும்! ஹோண்டா ஆக்டிவா இவி பற்றிய முக்கிய அப்டேட்!

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இது குறித்த பல்வேறு அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இந்த அறிவிப்பு வெளியானது முதல் இந்த ஸ்கூட்டர் குறித்து பலர் தேடி வருகிறார்கள். இந்நிலையில் இந்த கூட்டத்தில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. விரிவான விவரங்களுக்கான எல்லாம் வாருங்கள்.

ஹோண்டா நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களம் இறக்க தயாராகி வருகிறது. வரும் நவம்பர் மாதம் 27ம் தேதி தனது ஆக்டிவா இவி என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய மார்க்கெட்டில் களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. பெங்களூருவில் வைத்து இந்த நிகழ்வு நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த ஸ்கூட்டர் குறித்து தற்போது பல்வேறு அப்டேட்கள் வெளியாகி வருகிறது.

Honda Activa EV

இந்த ஸ்கூட்டர் குறித்த அறிவிப்பு வெளியாகும் போது சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானதில் இந்த ஸ்கூட்டரில் இடம் பெற போகும் சில முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இந்நிறுவனம் சர்வதேச மார்க்கெட்டில் விற்பனை செய்து வரும் சியூவி இ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ள பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் இடம்பெறும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

ஹோண்டா நிறுவனம் இந்தோனேசியா மார்க்கெட்டில் சியுவி இ மற்றும் ஐகான் இ ஆகிய இரண்டு விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இதில் ஸ்கூட்டரில் பேட்டரியை மாற்றும் தொழிற்நுட்பம் உட்புகுத்தப்பட்டுள்ளது இதனால் ஒரு பேட்டரியை சார்ஜ் போட்டுவிட்டு மற்றொரு பேட்டரியை பயன்படுத்தலாம் அந்த பேட்டரி சார்ஜ் தீர்ந்தஉடன் உடன் இந்த பேட்டரியை மாற்றி பயன்படுத்தி கொள்ள முடியும்.

ஐகான் இ ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை பிக்ஸட் பேட்டரி சிஸ்டம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டராக இருக்கிறது. இது வழக்கமாக உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செட்டப்பிலேயே வழங்கப்பட்டுள்ளது. சியூவி இ ஸ்கூட்டரை பொறுத்தவரை தற்போது பயன்பாட்டில் இருக்கும் 110சிசி எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இணையான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக பார்க்கப்படுகிறது. இதில் உள்ள ஸ்வாப்பபில் பேட்டரி ஆப்ஷன் சிறப்பான ஆப்ஷனாக பார்க்கப்படுகிறது.

இதில் உள்ள ஒவ்வொரு பேட்டரியும் 0 முதல் 75% சார்ஜ் ஏற 3 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் ஒருமுறை முழுமையாக சார்ஜ் ஏறினால் 70 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் இது வெளிநாடுகளில் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிற்கு எப்படியான பேட்டரிகள் வழங்கப்படும் என்ற தகவல் இது வரை தெரியவில்லை. இதில் உள்ள மோட்டாரை பொருத்தவரை 6 கிலோ வாட் ஹவர் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 80 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.

மேலும் இந்த ஸ்கூட்டரில் 7 இன்ச் கொண்ட டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கண்ட்ரோல் இருக்கிறது. இதுவும் மாடலில் உள்ள அதே டிஸ்ப்ளே தான் இந்தியாவிற்கு வரும் ஸ்கூட்டரிலும் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பேட்டரி பேக் மட்டும் சற்று பெரிதாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

சர்வதேச அளவில் விற்பனையாகி வரும் சியூவி இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பொறுத்தவரை ஸ்டாண்டர்ட், ஸ்போர்ட், மற்றும் எக்கோ ஆகிய மூன்று விதமான ரைடு மோடுகள் உள்ளன. இந்தியாவிற்கு இந்த ஸ்கூட்டர் வரும்போது ஸ்டான்டர்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய மோடுகள் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் இந்த ஸ்கூட்டர்கள் வடிவமைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை ஏற்கனவே இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகி வரும் ஓலா எஸ் ஒன் சீரிஸ், டிவிஎஸ் ஐ கியூப், பஜாஜ் சேத்தக் மற்றும் ஏத்தர் ரிஸ்டா ஆகிய வாகனங்களுக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டருக்கு நல்ல பெயர் இருப்பதால் இதுவும் அதிக அளவிலான வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் வாகனங்கள் இன்று மக்கள் மத்தியில் அதிக பிரபலமாகி உள்ள நிலையில், வாகனம் தயாரிக்கும் நிறுவனங்கள் எல்லாம் வரிசையாக தங்கள் வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். ஆக்டிவா எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வரும் பட்சத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் இது இதன் விற்பனையும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 20, 2024, 13:31 [IST]
English summary
Honda activa ev details sharing e scooter
மேலும்... #honda motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+