ஓலா எல்லாம் ஓரமா போக வேண்டியது தான்! ஹோண்டாவின் இவி பிளான் இதுதான்!
ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் தனது எலெக்ட்ரிக் டூவீலரில் அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதன்படி இந்நிறுவனம் எலெக்ட்ரிக் டூவீலர் மார்க்கெட்டில் தனது காலடித்தடத்தை வைக்கப்போவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகமாக போகிறது என பேசப்பட்டு வரும் நிலையில், இந்த ஸ்கூட்டர் குறித்த சில முக்கிய அப்டேட்களும் தகவல்களும் வெளியாகி உள்ளன. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
ஹோண்டா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் டூவீலர் செக்மென்ட்டை அறிமுகப்படுத்தப் போவதாக தற்போது அறிவித்துள்ளது. இது இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச மார்க்கெட்டிற்கும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாக போகிறது. ஹோண்டா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறைந்த விலையில் தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்கனவே அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் கம்பஷன் இன்ஜின் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக உருவாக்க முடிவு செய்துள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தின் 110சிசி கம்பஷன் இன்ஜின் கொண்ட டூவீலரின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிக மக்கள் வாங்கும் வகையிலான ஸ்கூட்டராக இது உருவாக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. கிட்டத்தட்ட ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இது இருக்கும் என எதிர்பார்க்கலாம் இதை ஒரு முறை சார்ஜ் போட்டால் 100 கிலோமீட்டர் வரை பயணிக்கும் வகையில் இது உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இரண்டு விதமான பேட்டரி பேக்குகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. முக்கியமாக இது ஸ்வாப்பிங் தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்படும் பேட்டரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பல்வேறு விதமான பேட்டரி தொழில்நுட்பங்களை கொண்ட நிறுவனம் தற்போது ஆய்வு செய்து வருகிறது. முக்கியமாக நிக்கல் கோபால் மேக்னீஸ் செல் கெமிஸ்ட்ரி தொழில்நுட்பத்தை ஆய்வு செய்கிறது.

இதுபோக லித்தியம் அயான் பாஸ்பேட் தொழிற்நுட்பத்திலும் பேட்டரியை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பத்தில் தான் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2030-ம் ஆண்டிற்குள் ஹோண்டா நிறுவனம் ஏகப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் தனக்கென பெரிய இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்குள் ஹோண்டா நிறுவனம் பல்வேறு விதமான பேட்டரி ஆப்ஷன்களையும் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். என்னென்ன ஆப்ஷன்கள் எல்லாம் இருக்கப் போகிறது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் நிச்சயம் எலெக்ட்ரிக் வாகன உலகை புரட்டி போடும் அளவிற்கு மிகப்பெரிய பேட்டரி தொழிற்நுட்பங்கள் எல்லாம் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் பலர் எலெக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் தங்கள் கவனத்தை திருப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

முதலில் ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே கம்பஷன் இன்ஜின் வாகனங்களில் பயன்படுத்திய மற்ற உதிரிபாகங்களை வைத்தே எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நிறுவனத்திற்கான தயாரிப்பு செலவு குறைவாக இருக்கும். தயாரிப்பு குறித்து பெரிய அளவில் ஆய்வுகள் நடத்த தேவையில்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் இந்த வாகனங்களில் கழட்டி விட்டு தொழில்நுட்பமும் கம்பேஷன் இன் வாகனங்களில் இருப்பது போலவே இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஹோண்டா நிறுவனம் வரும் 2026 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டு தனது தொழிலை விரிவுபடுத்தும் ஆண்டாக அறிவித்துள்ளது. முக்கியமாக இதில் எலெக்ட்ரிக் டூவீலர்கள் அதிகமாக உருவாக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2030-ம் ஆண்டிற்கு பிறகு ஹோண்டா நிறுவனம் தனது எலக்ட்ரிக் டூவீலரை மிகப்பெரிய அளவில் விற்பனை செய்ய துவங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பல்வேறு அட்வான்ஸ் தொழிற்நுட்பங்களும் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஹோண்டா நிறுவனம் இந்த தயாரிப்புகளில் சில பிரீமியம் தயாரிப்புகளையும் உட்பகுத்த திட்டமிட்டுள்ளது. இதில் பல்வேறு விதமான அம்சங்களிடம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக வாகனத்திலேயே பல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை மேம்படுத்தி பல்வேறு விதமான தகவல்களை அதில் இடம்பெற வைத்து வாடிக்கையாளர்களை கவர திட்டமிட்டு வருகிறது. முதல் முறையாக இப்படியான வாகனங்கள் எல்லாம் இந்தியாவிற்கு முன்பே இந்தோனேஷியாவில் அறிமுகமாவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சமீபகாலமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகமாக வருகிறது. இதனால் இந்த ரக வாகனங்களின் விற்பனையும் அதிகரித்து வரும் நிலையில்,ஹோண்டா போன்ற மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன செக்மெண்டில் நுழைவது நிச்சயம் வரவேற்கத்தக்கது தான். மக்களுக்கு குறைவான விலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை நிறுவனம் அறிமுகப்படுத்தினால் நிச்சயம் மிகப்பெரிய இடத்தை பிடிக்கும்.


Click it and Unblock the Notifications









