ஏற்கனவே லட்சக்கணக்கிலான மக்கள் வாங்குறாங்க! ஹோண்டாவில் இப்படியொரு ஸ்கூட்டரை தான் எதிர்பார்த்தோம்!!

ஹோண்டா ஆக்டிவா (Honda Activa), இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்கூட்டராக விளங்குகிறது. அதாவது அந்த அளவிற்கு பலத்தரப்பட்ட மக்கள் ஆக்டிவா ஸ்கூட்டரை வாங்குகின்றனர். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், ஒவ்வொரு மாதத்திலும் 2 லட்சம் ஆக்டிவா ஸ்கூட்டர்கள் அசால்ட்டாக விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாகவே, ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆம்... ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதுகுறித்த செய்தியை தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களில் தற்போதைக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எலக்ட்ரிக் வாகனங்களில் பெரிய தொகையை செலவு செய்ய மக்கள் இன்னும் தயாராக இல்லை என்பது இதற்கு ஒரு காரணம் என்றாலும், மற்றொரு காரணம், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நீண்ட வருடங்களாக விற்பனையில் இருப்பது ஆகும்.

honda activa ev india launch

ஒரு சில இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. இதனால், மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை பெட்ரோல் ஸ்கூட்டர்களை காட்டிலும் அதிகமாக உள்ளது. ஆனால், உண்மையான ராஜாவான ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் வெர்சனில் வந்தால், மற்றவை எல்லாம் அடங்கித்தானே போய் ஆக வேண்டும்.

பிரத்யேகமாக நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஹோண்டா ஆக்டிவா இவி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வருகிற நவம்பர் 27ஆம் தேதி முதல்முறையாக இந்திய மக்கள் முன் காட்சிக்கு நிறுத்தப்பட உள்ளது. ஆக்டிவா இவி ஸ்கூட்டரின் இந்த வெளியீட்டு நிகழ்ச்சி நவ.27இல் பெங்களூரில் நடைபெறவுள்ளது. அன்றைய தினத்தில்தான் ஹோண்டா ஆக்டிவா இவி எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தோற்றம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யப்படும்.

honda activa ev india launch

அதாவது, விலையை தவிர்த்து ஸ்கூட்டரை பற்றிய மற்ற விபரங்கள் அனைத்தும் வெளியீடு செய்யப்படும். இருப்பினும், ஆக்டிவா இவி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய சில விபரங்களை ஏற்கனவே டீசர்கள் மூலமாக ஹோண்டா வெளியிட்டுவிட்டது. ஆக்டிவா இவி எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் மிக முக்கியமான அம்சமாக பேட்டரி-சுழற்சி முறை பின்பற்றப்பட உள்ளது. இதனை ஆங்கிலத்தில் பேட்டரி-ஸ்வாப்பிங் மெத்தட் என அழைக்கின்றனர்.

இந்த முறையில், வாகனத்துடன் பேட்டரி கொடுக்கப்படாது. தனியாக பேட்டரியை வாங்கி, ஒவ்வொரு முறை சார்ஜ் காலியான பின்பும் சமையல் எரிவாயு சிலிண்டரை போன்று காலியானதை கொடுத்து புதிய ஒன்றை வாங்க வேண்டியதாக இருக்கும். இந்த முறையை இந்தியாவில் ஏற்கனவே எம்ஜி மோட்டார் உள்பட சில ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. அந்த வரிசையில் விரைவில் ஹோண்டாவும் இணையவுள்ளது.

honda activa ev india launch

இதற்காக, பெங்களூரில் ஹோண்டா பவர் பேக் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்கிற துணை நிறுவனத்தை ஹோண்டா நிறுவியுள்ளது. ஆக்டிவா இவி ஸ்கூட்டருக்கான பேட்டரி-ஸ்வாப்பிங் வேலையை எல்லாம் ஹோண்டா பவர் பேக் நிறுவனம் தான் கவனித்துக் கொள்ள உள்ளது. இதன் காரணமாகவே, ஆக்டிவா இவி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பெங்களூரில் வைத்து ஹோண்டா அறிமுகம் செய்கிறது போல.

இந்த 2024ஆம் ஆண்டில் இத்தாலியில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டாவின் சியூவி-இ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அடிப்படையாக கொண்டு ஆக்டிவா இவி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஹோண்டா சியூவி-இ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்படும் டி.எஃப்.டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாரை ஆக்டிவா இவி எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் எதிர்பார்க்கிறோம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா ஆக்டிவா இவி எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. ஸ்கூட்டரில் என்ன மாதிரியான பேட்டரி, எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட உள்ளது என்பதை அறிய நவம்பர் 27 வரையில் காத்திருக்க வேண்டும். ஆக்டிவா இவி எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகத்தை ஜனவரி மாதத்தில்தான் எதிர்பார்க்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Monday, November 25, 2024, 19:49 [IST]
English summary
Honda activa ev electric scooter will unveil on november 27 check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X