மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
இந்தியர்களின் பிரியமான ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றே ஹோண்டா ஆக்டிவா (Honda Activa). இந்த ஸ்கூட்டர் மாடல் தற்போது ஐசிஇ (Internal Combustion Engine) மோட்டார் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தியர்களின் பலரின் எதிர்பார்ப்பாக இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் (Activa EV) இருக்கின்றது.
இந்த நிலையிலேயே ஹோண்டா ஆக்டிவா மின்சார வெர்ஷனின் உற்பத்தி பணிகள் எப்போது தொடங்கும் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி 2025 ஆம் ஆண்டிற்கு உள்ளாகவே ஆக்டிவா மின்சார வெர்ஷனின் உற்பத்தி பணிகள் தொடங்கிவிடும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. ஏன், வரும் டிசம்பர் மாதத்திற்குள்ளாககூட இந்த ஸ்கூட்டரை சாலையில் பார்த்துவிடலாம், என்பதைப் போன்ற சூழலே தற்போது நிலவிக் கொண்டிருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மிகப் பெரிய அளவில் டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு மிக அமோகமானதாக உள்ளது.
இதற்கு மிக சிறந்த சான்றாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகளைக் கூறலாம். இந்த ஒற்றை நிறுவனம் மட்டும் தனி ஆளாக சென்ற மார்ச் மாதத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மின்சார ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்திருக்கின்றது. இந்த அளவிற்கே நாட்டில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்துக் காணப்படுகின்றது.
இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டே ஹோண்டா இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம், மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை உற்பத்தி செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள தொடங்கி இருக்கின்றது. அந்நிறுவனம், அதன் முக்கிய உற்பத்தி ஆலைகளான குஜராத் மற்றும் கர்நாடகா ஆலைகளில் மின்சார வாகனங்களின் உருவாக்கத்திற்கு என தனி உற்பத்தி பிரிவுகளை ஒதுக்கி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
எனவே சீக்கிரமே இந்திய சந்தையில் ஹோண்டா ஆக்டிவா இவி விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சார இரண்டுசக்கர வாகனங்கள் (Ola Electric Scooters), டிவிஎஸ் ஐக்யூவ் (TVS iQube), பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) மற்றும் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Ather Electric Scooter)-களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும்.
மேலும், இதன் வருகையால் கட்டாயம் மிகப் பெரிய விற்பனை வீழ்ச்சியை ஏத்தர் எலெக்ட்ரிக் சந்திக்கும் என்றும் கருதப்படுகின்றது. அந்த அளவிற்கே இந்தியர்கள் மத்தியில் ஆக்டிவா மின்சார வெர்ஷன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. எனவே சந்தையின் தேவையில் மிகப் பெரிய பங்களிப்பையும் ஹோண்டா நிறுவனம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹோண்டா நிறுவனமும் இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவில் மிகப் பெரிய சந்தைப் பங்கை கையகப்படுத்த வேண்டும் என்கிற நோக்கிலேயே தற்போது உள்ளது. இதன் வெளிப்பாடாகவே தற்போது அது மின்சார வாகன உற்பத்திக்கு என தயாரிப்பு லைன்களை உருவாக்கி இருக்கின்றது.
இந்த புதிய உற்பத்தி பிரிவால் நிறுவனத்தின் உற்பத்தி திறனும் பலமடங்கு அதிகரிக்கும் சூழல் உருவாகி இருக்கின்றது. அது ஆண்டுக்கு 9 லட்சம் யூனிட்டுகளாக அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, புதிய வேலை வாய்ப்பும் இந்தியாவில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா இவி-யை என்ன மாதிரியான திறன் கொண்டதாக உருவாக்கும் என்கிற விபரங்கள் வெளியிடப்படவில்லை. விரைவில் அதுபற்றிய விபரங்கள் வெளியாகும் என நம்பப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கான தேவை பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆனால், இந்த பிரிவை ஓலா எலெக்ட்ரிக்கே ஆட்சிப் புரிந்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு ஆப்பு வைக்கும் விதமாக பல நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்றாகவே விரைவில் இந்த ஜப்பானிய டூ-வீலர் உற்பத்தி நிறுவனமான ஹோண்டாவும் இணைய உள்ளது.


Click it and Unblock the Notifications








