அனைத்து கண்களும் ஹோண்டா தொழிற்சாலை மீது! ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இவ்ளோ சீக்கிரமாவே வரப்போகுதா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள வாகனங்களில் ஒன்று ஹோண்டா ஆக்டிவா இவி (Honda Activa EV). இதுதான் இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனம் களமிறக்கவுள்ள முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஆகும். வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) வாகன திருவிழாவில்தான், ஹோண்டா ஆக்டிவா இவி காட்சிக்கு வைக்கப்படும் என்று ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. அதை தொடர்ந்து 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.
ஆனால் தற்போது வெளியாகி வரும் தகவல்கள் எல்லாம், வரும் டிசம்பர் மாதமே ஹோண்டா ஆக்டிவா இவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவிக்கின்றன. அத்துடன் டிசம்பர் மாதம்தான் ஹோண்டா ஆக்டிவா இவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி பணிகளும் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே வரும் 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து, வாடிக்கையாளர்களுக்கு ஆக்டிவா இவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெலிவரி செய்யும் பணிகளை ஹோண்டா நிறுவனம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா ஆக்டிவா இவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகைக்காக காத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், கர்நாடக (Karnataka) மாநிலத்தில் உள்ள ஹோண்டா தொழிற்சாலையில்தான், ஆக்டிவா இவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி பணிகள் நடைபெறவுள்ளன. அங்கு ஹோண்டா ஆக்டிவா இவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிப்பதற்கான பிரத்யேக 'ப்ரொடெக்ஸன் லைன்'(Production Line) ஏற்கனவே தயார் செய்யப்பட்டு விடப்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே இன்னும் ஒரு சில வாரங்களில், ஹோண்டா ஆக்டிவா இவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சோதனை அடிப்படையிலான உற்பத்தி பணிகள் தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை தொடர்ந்து வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து உற்பத்தி பணிகள் முழு வீச்சில் தொடங்கப்படலாம்.
ஹோண்டா ஆக்டிவா இவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விபரங்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை. இருப்பினும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 100 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யக்கூடிய வகையிலான பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனேகமாக ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை சுமார் 1 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இது தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ள ஓலா (Ola), ஏத்தர் (Ather), டிவிஎஸ் (TVS), பஜாஜ் (Bajaj) மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) போன்ற நிறுவனங்களுக்கு எல்லாம் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹோண்டா ஆக்டிவா இவி 1 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் வந்தால், விற்பனையில் பிரம்மாண்டமான எண்களை பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஹோண்டா ஆக்டிவா என்பது ஏற்கனவே இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு பெயராகதான் உள்ளது. அந்த பெயரில் வரவிருப்பது, ஹோண்டா ஆக்டிவா இவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மிகப்பெரிய பலமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications