ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா! நடுக்கத்தில் போட்டி நிறுவனங்கள்!

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) விற்பனை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக எலெக்ட்ரிக் டூவீலர்கள் (Electric Two Wheelers) அதிகளவில் விற்பனையாகி கொண்டுள்ளன. இந்தியாவின் டூவீலர் சந்தையில், எலெக்ட்ரிக் டூவீலர்களின் சந்தை பங்கு (Market Share) கடந்த 2023ம் ஆண்டு 5 சதவீதமாக இருந்தது. ஆனால் இது தற்போது 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு எலெக்ட்ரிக் டூவீலர் சந்தையில் நுழைவதுதான் இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது.

தற்போதைய நிலையில் ஓலா (Ola), ஏத்தர் (Ather), டிவிஎஸ் (TVS), பஜாஜ் (Bajaj) மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் இந்தியாவில் எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனை செய்து வருகின்றன. ஆனால் ஹோண்டா (Honda) நிறுவனம் இன்னும் இந்தியாவின் எலெக்ட்ரிக் டூவீலர் சந்தையில் நுழையவில்லை.

Honda Activa

இந்தியாவின் எலெக்ட்ரிக் டூவீலர் சந்தையில் ஹோண்டா நிறுவனம் காலடி எடுத்து வைப்பது தொடர்ந்து தாமதமாகி கொண்டே உள்ளது. ஆனால் தற்போது எலெக்ட்ரிக் டூவீலர்களின் விற்பனை உயர்ந்து கொண்டே வருவதால், இந்த செக்மெண்ட்டில் நுழைவதற்கு இதுவே சரியான நேரம் என ஹோண்டா நிறுவனம் கருதுகிறது.

எனவே இந்திய சந்தைக்காக ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் டூவீலர் கூடிய விரைவில் களமிறக்கப்படவுள்ளது. இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக (Electric Scooter) இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் என 2 விதமான டூவீலர்களையும் விற்பனை செய்து வருகிறது.

OLA S1

இதில், ஸ்கூட்டர்களின் விற்பனைதான் மிகவும் அதிகம். அதாவது ஹோண்டா நிறுவனத்தின் மொத்த டூவீலர் விற்பனையில் 60 சதவீதம் ஸ்கூட்டர்கள் ஆகும். எஞ்சிய 40 சதவீதம் மட்டுமே பைக்குகள். எனவே இந்தியாவிற்கான முதல் எலெக்ட்ரிக் டூவீலரை, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவத்தில் களமிறக்க ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், ஹோண்டா ஆக்டிவா அடிப்படையில் உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோண்டா ஆக்டிவா இவி (Honda Activa EV) என்ற பெயரில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) வாகன திருவிழா வரும் ஜனவரி (January) மாதம் நடைபெறவுள்ளது. இதில், ஹோண்டா ஆக்டிவா இவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் காட்சிக்கு வைக்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு அடுத்த ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் ஹோண்டா ஆக்டிவா இவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். அனேகமாக ஹோண்டா ஆக்டிவா இவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை சுமார் 1 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹோண்டா ஆக்டிவா இவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகை, இந்திய சந்தையில் நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு எல்லாம், விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்பு நிலவி கொண்டிருப்பதே இதற்கு காரணம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 10, 2024, 16:06 [IST]
English summary
Honda activa ev to debut at the bharat mobility global expo in january 2025 reports
மேலும்... #honda motorcycle #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+