எலெக்ட்ரிக் அவதாரம் எடுக்கிறது ஹோண்டா ஆக்டிவா... எழுதி வெச்சுக்கோங்க... ஷோரூம்ல கூட்டம் அலை மோத போகுது...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஸ்கூட்டர்களில் ஒன்று ஹோண்டா ஆக்டிவா (Honda Activa). இதன் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி ஹோண்டா நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 2,33,376 ஆக்டிவா ஸ்கூட்டர்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 1,30,830 ஆக மட்டுமே இருந்தது.

இதன் மூலம் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரானது விற்பனையில் 78.38 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது மிகவும் பிரம்மாண்டமான வளர்ச்சி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இந்த சிறப்பான வளர்ச்சியின் மூலம், இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதம் மிகவும் அதிகமாக விற்பனையான டூவீலர்களின் பட்டியலில் ஹோண்டா ஆக்டிவா 2வது இடத்தை பிடித்துள்ளது.

Honda Activa

முதல் இடத்தில் ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) உள்ளது. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் தற்போதைய நிலையில் 110 சிசி மற்றும் 125 சிசி இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில், 110 சிசி இன்ஜினின் பவர் அவுட்புட் 5.77 kW/8.90 Nm ஆக இருக்கிறது.

மறுபக்கம் 125 சிசி இன்ஜினின் பவர் அவுட்புட் 6.11 kW/10.40 Nm ஆக உள்ளது. ஹோண்டா ஆக்டிவா 110 சிசி மாடலின் ஆரம்ப விலை 76,684 ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 82,684 ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

Honda Activa 125

மறுபக்கம் ஹோண்டா ஆக்டிவா 125 சிசி மாடலின் ஆரம்ப விலை 80,256 ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 89,429 ரூபாய் ஆகவும் உள்ளது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான். ஹோண்டா 110 சிசி மாடலானது, மொத்தம் 6 வகையான கலர் ஆப்ஷன்களில் (Colour Options) கிடைக்கிறது.

அவை டீசென்ட் ப்ளூ மெட்டாலிக், பேர்ல் சைரன் ப்ளூ, பிளாக், பேர்ல் ப்ரீசியஸ் ஒயிட், ரெபெல் ரெட் மெட்டாலிக், மேட் ஆக்ஸிஸ் க்ரே மெட்டாலிக் ஆகியவை ஆகும். மறுபக்கம் ஹோண்டா ஆக்டிவா 125 சிசி மாடலானது, மொத்தம் 5 வகையான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

அவை ரெபெல் ரெட் மெட்டாலிக், ஹெவி க்ரே மெட்டாலிக், பேர்ல் நைட் ஸ்டார் பிளாக், மிட் நைட் ப்ளூ மெட்டாலிக், சாலன் சில்வர் மெட்டாலிக் உடன் பேர்ல் ப்ரீசியஸ் ஒயிட் ஆகியவை ஆகும். நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு தயாரிப்பு என்பதால்தான், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹோண்டா நிறுவனம் கூடிய விரைவில் ஆக்டிவா ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது நடக்கும்பட்சத்தில், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Saturday, July 27, 2024, 14:18 [IST]
English summary
Honda activa scooter sales report june 2024 78 per cent growth
மேலும்... #honda motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+