இந்த ஒரு ஸ்கூட்டர் மட்டும் இந்தியா வந்துச்சுனா மொத்த கூட்டமும் காலி! அனைத்து கண்களும் ஹோண்டாவின் மீது!
இந்தியாவின் டூவீலர் சந்தையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்று ஹோண்டா (Honda). குறிப்பாக இந்தியாவின் ஸ்கூட்டர் சந்தையில் அசைக்க முடியாத இடத்தில் ஹோண்டா உள்ளது. தற்போதைய நிலையில் ஹோண்டா ஆக்டிவாதான் (Honda Activa), இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் ஸ்கூட்டர் ஆகும். இதுதவிர ஹோண்டா டியோ (Honda Dio) ஸ்கூட்டருக்கும், இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான வாடிக்கையாளர் பட்டாளம் இருக்கிறது. இந்தியாவின் ஸ்கூட்டர் சந்தையில் தனக்கு உள்ள ஆதிக்கத்தை மேலும் வலிமையாக்கி கொள்ள ஹோண்டா நிறுவனம் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே இந்தியாவில் பல்வேறு புதிய ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஹோண்டா பீட் (Honda Beat) என்ற பெயரில், புத்தம் புதிய ஸ்கூட்டர் ஒன்றை அந்நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிகிறது.

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் தற்போது பீட் ஸ்கூட்டரின் டிசைன் காப்புரிமைக்கு பதிவு செய்துள்ளது. இதன் காரணமாகவே ஹோண்டா பீட் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என யூகங்கள் கிளம்பியுள்ளன. ஆனால் இங்கே ஒரு முக்கியமான விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும்.
வாகன நிறுவனங்கள் காப்புரிமைக்கு பதிவு செய்யும் தயாரிப்புகள் அனைத்தும் விற்பனைக்கு வரும் என்பதில் எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. காப்புரிமை பதிவு என்பது வழக்கமான ஒரு நடைமுறை மட்டுமே. எனவே காப்புரிமைக்கு பதிவு செய்யப்படும் தயாரிப்புகள் விற்பனைக்கு வரலாம். அல்லது வராமலும் போகலாம்.

எனவே ஹோண்டா பீட் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது தென் கிழக்கு ஆசிய சந்தைகளில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஒரு ஸ்கூட்டர் ஆகும். எனவே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், இங்கும் நல்ல வரவேற்பு கிடைக்கலாம்.
ஹோண்டா பீட் ஸ்கூட்டரில், 109.5 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச பவர் அவுட்புட் 9 பிஹெச்பி மற்றும் 9.2 என்எம் ஆகும். இதன் முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பகுதியில் சிங்கிள் ஷாக் அப்சார்பரும் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் இந்த ஸ்கூட்டரின் முன் பகுதியில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. வசதிகளை பொறுத்தவரையில், வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் ஓரளவிற்கு உள்ளன. இதில், திருட முயற்சி செய்தால் அலாரம் அடிக்கும் வசதி, செல்போன் சார்ஜிங் போர்ட்கள் மற்றும் கீலெஸ் இக்னீஷன் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹோண்டா பீட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமா? என்பதை தற்போது உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், டிவிஎஸ் ஜெஸ்ட் 110 (TVS Zest 110) மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) போன்ற ஸ்கூட்டர்களுக்கெல்லாம் கடுமையான சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








