2கண் கொண்ட ராட்சசனை போலிருக்கும் பைக்கிற்கு பேடண்ட் செய்த ஹோண்டா! இந்தியர்கள் வெறி கொண்டு காத்திருக்க போறாங்க!
பிரபல இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda) ஓர் புதுமுக பைக்கிற்கான பேடண்ட் (Patent) பதிவை இந்தியாவில் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிபி 1000 ஹார்னெட் (CB 1000 Hornet) எனும் பைக்கிற்கே அது பேடண்ட் பதிவைச் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இத்துடன், பைக்கின் டிசைன் பற்றிய விபரங்களும் வெளியாகி உள்ளன. சிபி 1000 ஹார்னெட் ஓர் 1000 சிசி பிரிவிற்கான மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த பைக்கில் 999 சிசி திறனை வெளியேற்றும் வசதிக் கொண்ட இன்லைன் 4 சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட இருக்கின்றது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 147 பிஎச்பி பவரையும், 100 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸிலேயே இந்த எஞ்சின் இயங்கும். இந்த அதிக பவர்ஃபுல்லான திறனுக்கு ஏற்பவே அந்த பைக்கிற்கு மிகவும் முரட்டுத் தனமான தோற்றம் வழங்கப்பட்டு இருக்கின்றது.
அதேவேளையில், அந்த தோற்றம் முற்றிலும் தனித்துவமானதாகக் காட்சியளிக்கின்றது. மிகவும் ஷார்ப்பான மற்றும் கட்டுமஸ்தான பாடி பேனல்களாலேயே இந்த பைக் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இரண்டு கண்களைக் கொண்ட ராட்சசனைப் போல இந்த பைக்கின் முன் பக்கம் உள்ளது. இத்துடன், டூயல் இருக்கை செட்-அப், கொழுத்த தோற்றம் டயர்கள் ஆகியவற்றாலேயே இந்த பைக் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
இந்த பைக்கை டிரெல்லிஸ் ஃப்ரேமைக் கொண்ட கட்டமைத்து இருக்கின்றது. இத்துடன், ஷோவா ஃபோர்க் முன் பக்கத்திலும், ப்ரோ லிங்க் ஷாக் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இவை இந்தியாவின் கரடு-முரடான சாலைகளுக்கு ஏற்றவை ஆகும். மேலும், இந்த இரண்டிலும் ப்ரீ-லோடு மற்றும் ரீ-பவுண்ட் அட்ஜெஸ்ட்மென்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதேபோல், இந்த பைக்கின் பிரேக்கிங் சிஸ்டமும் மிக சிறப்பானதாக இருக்கப் போகின்றது. இப்போது கிடைத்திருக்கும் தகவலின்படி ஹோணஅடா சிபி1000 ஹார்னெட் பைக்கின் முன் பக்கத்தில் டூயல் டிஸ்க்கும், பின் பக்க வீலில் சிங்கிள் டிஸ்க்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இவை இரண்டும் பைக்கின் உச்சபட்ச வேகத்தை நொடிப்பொழுதில் கட்டுக்குள் கொண்டு வரும் திறன் கொண்டவை ஆகும்.
17 அங்குல வீல், ரைடர் கன்ட்ரோல், த்ரோட்டில் - பை - ஒயர் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களும் இந்த பைக்கில் வழங்கப்பட இருக்கின்றன. இதுதவிர, 5 அங்குல டிஎஃப்டி திரை, மூன்று விதமான ரைடிங் மோட்களும் ஹோண்டா சிபி 1000 ஹார்னெட் பைக்கில் வழங்கப்பட இருக்கின்றன.
இத்தகைய மிக சிறந்த பைக்கிற்கே ஹோண்டா தற்போது இந்தியாவில் பேடண்ட் உரிமத்தைப் பெற்றிருக்கின்றது. இதுதவிர, ஹோண்டா நிறுவனம் சிபி 500 ஹார்னெட், சிபிஆர் 500 ஆர் மற்றும் சிபிஆர் 650 ஆர் ஆகிய பைக் மாடல்களுக்கும் இந்தியாவில் பேடண்ட் பதிவைச் செய்திருக்கின்றது.
இதில், சிபி500 ஹார்னெட் நேக்கட் ரோட்ஸ்டர் வகை மோட்டார்சைக்கிள் ஆகும். அதேவேளையில் சிபிஆர் 500 ஆர் முழுமையான அழகூட்டப்பட்ட வெர்ஷனாகவும், விற்பனைக்கு வர இருக்கின்றது. ஆனால், இந்த பைக்குகள் எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. விரைவில் இதுபற்றிய விபரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரத்தில் இப்போதே இந்த பைக்குகள் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கிவிட்டது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே சூப்பர் பைக் பிரியர்களைக் கவரும் பொருட்டு அந்நிறுவனம் 1000 சிசி பைக் பிரிவை மையப்படுத்தி ஓர் தயாரிப்பை விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








