2-வீலர் மார்க்கெட்டை புரட்டி போட்ட ஹோண்டா பைக்!! கொத்து, கொத்தா டெலிவிரி... ரோடு ஃபுல்லா இனி இந்த பைக் தான்!
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle & Scooter India - HMSI) நிறுவனத்தின் ஷைன் 100 (Shine 100) மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு 1 வருடத்தை வெற்றிக்கரமாக நிறைவு செய்துள்ளது. இதுகுறித்தும், இந்த மலிவான ஹோண்டா பைக்கை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஹீரோ மோட்டோகார்ப்புக்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் உள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கிலான 2-வீலர்களை விற்பனை செய்துவரும் ஹோண்டா, இந்திய மக்களுக்கு ஏற்ப விலை குறைவான பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் ஏராளமானவற்றையும் விற்பனை செய்து வருகிறது.

இதன்படி, கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட மலிவான ஹோண்டா பைக்கான ஷைன் 100 விற்பனைக்கு வந்து 1 வருடத்தை வெற்றிக்கரமாக கடந்துள்ளது. முதலாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக மெகா டெலிவிரி நிகழ்ச்சிகள் ஹோண்டா சார்பில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மெகா டெலிவிரி நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் பல்வேறு ஷைன் 100 பைக்குகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்படுகின்றன.
முதல் 1 வருடத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான ஷைன் 100 பைக்குகள் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக ஏறக்குறைய 25 ஆயிரம் ஷைன் 100 பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் இருந்து, இந்தியாவின் 100சிசி- 110சிசி பைக்குகள் மார்க்கெட்டில் ஹோண்டாவின் ஷைன் 100 பைக் எந்த அளவிற்கு ஆதிக்கத்தை செலுத்துகிறது என்பதை அறியலாம்.

இந்தியாவில் ஹோண்டா ஷைன் பைக்குகள் ஒன்றும் புதியவை கிடையாது. நீண்ட வருடங்களாக நம் நாட்டு சந்தையில் ஹோண்டா ஷைன் பைக்குகள் பல்வேறு விதமான தோற்றங்களில் & என்ஜின்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், கடந்த 2023ஆம் ஆண்டில் 100சிசி என்ஜின் உடன் ஷைன் பைக்கை ஹோண்டா அறிமுகம் செய்தது.
ஹோண்டா ஷைன் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் வெறும் ரூ.64,900-இல் இருந்து ஆரம்பிக்கின்றன. இவ்வளவு குறைவான விலையில் கிடைப்பதால் தான் ஷைன் பைக்குகளை நிறைய பேர் வாங்குகின்றனர். இந்த பைக்கில் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பவர் (eSP) தொழிற்நுட்பத்தை கொண்ட முற்றிலும் புதிய 100சிசி ஒபிடி-2-க்கு இணக்கமான PGM-Fi என்ஜின் பொருத்தப்படுகிறது.

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 5.43 கிலோவாட்ஸ் பவர் மற்றும் 8.05 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஷைன் 100 பைக்கிற்கு 10 வருடங்கள் வரையிலான உத்தரவாதத்தை ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் வழங்குகிறது. இதில் 3 வருட நிலையான உத்தரவாதம் மற்றும் 7 வருட ஆப்ஷனல் உத்தரவாதம் அடங்குகிறது.
ஷைன் 100 பைக் அறிமுகம் செய்யப்பட்டு 1 வருடம் நிறைவடைந்ததை கொண்டாடும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட HMSI-இன் தலைவர் சுசுமு ஒட்டணி பேசுகையில், "இது மலிவு மற்றும் நம்பகமான தயாரிப்புகளை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த மோட்டார்சைக்கிள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விதிவிலக்கான மதிப்பு மற்றும் மன அமைதிக்கான உரிமை அனுபவத்தை வழங்குவதில் ஹோண்டாவின் அர்ப்பணிப்பை உள்ளடக்கியது" என்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய 2-வீலர்கள் மார்க்கெட்டில் தவிர்க்க முடியாத பைக்காக ஹோண்டா ஷைன் மாறி வருகிறது. தற்போது 1 வருடத்தை கடந்துள்ள இந்த மலிவான ஹோண்டா பைக் இன்னும் பல வருடங்களை கடக்கும் என்பது உறுதி. முதல் வருடத்திலேயே 3 லட்சம் விற்பனையை கடந்துள்ள ஹோண்டா ஷைன் பைக் வரும் வருடங்களில் 10 லட்சம் விற்பனையை கடந்துவிடும்.


Click it and Unblock the Notifications









