இந்திய நிறுவனங்களுக்கு தண்ணி காட்டும் ஹோண்டா... தமிழ்நாட்டின் டிவிஎஸ் மோட்டாரால் கிட்ட கூட நெருங்க முடியல!!

உலகளவில் இந்தியா மிக பெரிய 2-வீலர் மார்க்கெட் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான இருசக்கர வாகனங்கள் நம் நாட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், ஸ்கூட்டர்களின் பங்கு பாதிக்கு பாதியாக உள்ளது. இந்தியாவில் 2-வீலர்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப் ஆகும். 2வது இடத்தில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் உள்ளது. ஆனால், ஸ்கூட்டர்களை அதிகம் விற்பனை செய்யும் நிறுவனம் என்று பார்த்தால், ஹீரோவை விட ஹோண்டா முன்னிலை வகிக்கிறது.

எந்த அளவிற்கு என்றால், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர்களில் கிட்டத்தட்ட பாதி ஸ்கூட்டர்கள் ஹோண்டா நிறுவனத்துடையது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஹோண்டா ஆக்டிவா, இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்கூட்டராக உள்ளது. ஒவ்வொரு மாதமும் 1 லட்சத்தில் இருந்து 3 லட்சம் ஆக்டிவா ஸ்கூட்டர்களை ஹோண்டா அசால்ட்டாக விற்பனை செய்கிறது. கடந்த 2024 ஜூன் மாதத்தில் மட்டும் 2 லட்சத்து 33,376 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

honda dominates indian scooter market

2023 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது சுமார் 78.38% அதிகமாகும். ஏனெனில், அந்த மாதத்தில் 1,30,830 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆக்டிவா ஸ்கூட்டருடன், டியோ, கிரேஸியா உள்ளிட்ட ஸ்கூட்டர்களையும் ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்கிறது. ஆக்டிவா, டியோ ஸ்கூட்டர்கள் 110சிசி மற்றும் 125சிசி என்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனை செய்யப்படுகின்றன.

ஒட்டுமொத்தமாக கடந்த 3 மாதங்களில் (2024 ஏப்ரல் - ஜூன்) 16 லட்சத்து 64,994 ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2023ஆம் ஆண்டின் இதே 3 மாதங்களில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கூட்டர்களின் எண்ணிக்கையை காட்டிலும் இது 3 லட்சத்து 66,639 அதிகமாகும். ஏனெனில், அந்த 3 மாதங்களில் 12 லட்சத்து 98,355 ஸ்கூட்டர்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

honda dominates indian scooter market

கடந்த 3 மாதங்களில் விற்பனை செய்யப்பட்ட 16 லட்சத்து 64,994 ஸ்கூட்டர்களில் ஹோண்டா ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை மட்டும் 7 லட்சத்து 94,835 ஆகும். அதாவது, மொத்த எண்ணிக்கையில் 47.73% ஆகும். 2023ஆம் ஆண்டின் இதே 3 மாத விற்பனையில் ஹோண்டாவின் பங்களிப்பு 45.39% ஆக இருந்தது. 2023 ஏப்ரல் - ஜூன் மாதங்களில் மொத்தம் 5 லட்சத்து 89,400 ஸ்கூட்டர்களை ஹோண்டா விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில் பார்த்தால், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த 2024ஆம் ஆண்டில் 2 லட்சத்து 5,435 ஹோண்டா ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஹோண்டாவிற்கு அடுத்து, இந்த 3 மாதங்களில் அதிக எண்ணிக்கையில் ஸ்கூட்டர்களை விற்பனை செய்த நிறுவனமாக 2வது இடத்தில் இருப்பது டிவிஎஸ் மோட்டார் ஆகும். 2024 ஏப்ரல் - ஜூனில் மொத்தம் 3 லட்சத்து 86,633 ஸ்கூட்டர்களை டிவிஎஸ் மோட்டார் விற்பனை செய்துள்ளது.

honda dominates indian scooter market

2023ஆம் ஆண்டில் இதே காலக்கட்டத்தில் 3 லட்சத்து 20,069 ஸ்கூட்டர்களை மட்டுமே டிவிஎஸ் மோட்டார் விற்பனை செய்திருந்தது. அதாவது, கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டின் ஏப்ரல் - ஜூனில் 66,564 ஸ்கூட்டர்களை டிவிஎஸ் அதிகமாக விற்பனை செய்துள்ளது. சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்த வரிசையில் 3வது இடத்தை பிடித்துள்ளது. 2024 ஏப்ரல்- ஜூனில் சுஸுகியில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ள ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 46,264 ஆகும்.

2023 ஏப்ரல் - ஜூனில் 1 லட்சத்து 89,575 ஸ்கூட்டர்களை மட்டுமே சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் யமஹா நிறுவனங்கள் 4வது மற்றும் 5வது இடங்களில் உள்ளன. இவை இரண்டும் முறையே 85,389 மற்றும் 75,607 ஸ்கூட்டர்களை இந்த 3 மாதங்களில் விற்பனை செய்துள்ளன. இவை இல்லாமல், பஜாஜ் ஆட்டோ 43,854 ஸ்கூட்டர்களையும், ஏத்தர் எனர்ஜி 23,816 ஸ்கூட்டர்களையும், பியாஜியோ வைகல்ஸ் 8,504 ஸ்கூட்டர்களையும், ஒகினவா ஆட்டோடெக் 92 ஸ்கூட்டர்களையும் 2023 ஏப்ரல் - ஜூனில் விற்பனை செய்துள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா விற்பனை செய்ததில் பாதி எண்ணிக்கையிலான ஸ்கூட்டர்களை கூட 2வது இடத்தில் உள்ள டிவிஎஸ் மோட்டார் விற்பனை செய்யவில்லை. அப்படியென்றால், இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஹோண்டாவின் ஆதிக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை அறியலாம். இந்த பெருமை எல்லாம் ஹோண்டா ஆக்டிவாவையே சேரும். இந்த செய்தியில் நாங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 27, 2024, 23:07 [IST]
English summary
Honda dominates indian scooter market with 48 percent share
மேலும்... #scooters #honda #honda activa #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X