ஓலாக்கு கட்டம் கட்டிய ஹோண்டா! 2025ல மொத்த கதையும் முடியப்போகுது!
மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கிடையில் ஹோண்டா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்சிப்படுத்தியுள்ளது. வரும் ஜனவரி மாதம் முதல் இந்த ஸ்கூட்டரின் புக்கிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு பிறகு இந்த ஸ்கூட்டரின் விற்பனை துவங்கும் என கூறப்பட்டுள்ள நிலையில், முதல் ஆண்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்ய நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ஸ்கூட்டர் செக்மெண்டில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகமாகி வருகிறது. பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் தற்போது விற்பனையாகி வரும் நிலையில், ஹோண்டா நிறுவனம் தற்போது இந்த களத்தில் குதித்துள்ளது.

தற்போது இந்தியாவில் ஓலா, ஏத்தர், பஜாஜ், டிவிஎஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் எலெக்ட்ரிக் டூவீலரை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றன. இந்த டூவீலர்கள் எல்லாம் பெரும்பாலும் ஃபிக்ஸடான பேட்டரி கொண்டு தயாரிக்கப்பட்ட ஸ்கூட்டர்களாக இருக்கின்றன. இதனால் ரேஞ்ச் குறித்த கவலை மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த பிரச்சனையை போக்குவதற்காக ஹோண்டா நிறுவனம் புதிய யுக்தியுடன் களமிறங்கியுள்ளது.
ஹோண்டா நிறுவனம் நேற்று தனது ஆக்டிவா இ மற்றும் க்யூசி1 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய மார்க்கெட்டில் காட்சிப்படுத்தியது. இதில் ஆக்டிவா இ பேட்டரி ஸ்வாப்பிங் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்கூட்டராகவும் கியூ சி1 பிக்ஸட் பேட்டரி கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா நிறுவனத்திற்கு இந்தியாவில் நான்கு இடங்களில் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. அதன்படி ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்நிறுவனம் தயாரிப்பாலையை வைத்து செயல்பட்டு வரும் நிலையில், கர்நாடக மாநிலத்தில் நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையில் தான் இந்த ஸ்கூட்டரை தயாரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆலையில் தான் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிப்பதற்கான அனைத்து கட்டமைப்புகளையும் அந்த நிறுவனம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்கூட்டரின் தயாரிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜனவரி மாதம் இந்த ஸ்கூட்டருகான புக்கிங் துவங்குகிறது. 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஸ்கூட்டரின் டெலிவரி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிக குறைவான விலையில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புக்கிங் குறித்த தகவல் வெளியாகும் போது இந்த ஸ்கூட்டரின் விலை குறித்த விபரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா நிறுவனம் இதை ஒவ்வொரு கட்டமாக விற்பனைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களை டார்கெட் செய்து அந்த நகரங்களுக்கு மட்டும் இந்த ஸ்கூட்டரை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. படிப்படியாக இதை மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கி 2025ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 50 சதவீதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஹோண்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா இ மற்றும் கியூசி1 ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தனது ரெட் விங் என்ற டீலர்ஷிக்கள் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டு வருகிறது. இதற்கான டீலர் ஷிப்களிலும் பல்வேறு விதமான முன்னேற்பாடுகளை செய்ய உத்தரவிட்டுள்ளது. விரைவில் இந்த டீலர்ஷிப்களின் எண்ணிக்கையையும் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் அதிகப்படுத்தவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஹோண்டாவின் ஆக்டிவா இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பொருத்தவரை 1.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் உடன் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 50 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யும். ஒருமுறை சார்ஜ் போட்டால் 80 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹோண்டா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பேட்டரி அஸ் சர்வீஸ் முறையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய மார்க்கெட்டில் ஏற்கனவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்டில் ஓலா நிறுவனம் தான் அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில், ஹோண்டா நிறுவனம் இதில் களமிறங்கியுள்ளது ஓலா நிறுவனத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையே மிகப்பெரிய போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









