ஹீரோ முதல் கொண்டு மார்க்கெட்டே ஆடி போய் நிக்குது.. ஹோண்டா வெளியிட்ட முதல் டீசருக்கே இந்த நிலைமையா!

ஹோண்டா (HMSI) வெளியிட்டு இருக்கும் முதல் டீசர் (Teaser) வீடியோவால் ஹோண்டா டூ-வீலர் பிரியர்கள் அசந்தும், போட்டி நிறுவனங்கள் ஆடிப் போயும் உள்ளனர். அப்படி என்ன டீசர் அது-னு தானே கேக்குறீங்க.. இந்தியர்களின் எதிர்பார்ப்பான, மிகு முக்கியமாக, மின்சார இரண்டு சக்கர வாகன பிரியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பான ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Honda Activa Electric Scooter)-இன் டீசர் படமே அதுவாகும். ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியீடு செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

சில தினங்களுக்கு முன்னரே இந்த வாகனத்தின் வருகையை ஹோண்டா நிறுவனம் உறுதி செய்திருந்தது. இந்த நிலையிலேயே டீசர் வீடியோ வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. சந்தையில் இ ஆக்டிவா (eActiva) அல்லது ஆக்டிவா எலெக்ட்ரிக் (Activa Electric) என்கிற பெயரிலேயே இந்த வாகனம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Honda activa electric scooter teaser

டீசர் வாயிலாக இந்த வாகனத்தின் ஹெட்லைட்டை மட்டுமே ஹோண்டா காட்சிப்படுத்தி இருக்கின்றது. மாடர்ன் லுக் கொண்ட எல்இடி ஹெட்லைட்டே இதில் இடம் பெற இருக்கின்றது. இதுபோலவே இந்த வாகனத்தில் இடம் பெற இருக்கும் மற்ற வாகனங்களும் மாடர்ன் லுக் கொண்டதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்போது இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன சந்தையில் மிகப் பெரிய போட்டி நிலவிக் கொண்டிருக்கின்றது. ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) போன்ற ஜாம்பவான் நிறுவனங்களே மூச்சு திணறிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, எலெக்ட்ரிக் டூ-வீலர் பிரிவில் கொடிக் கட்டி பறந்துக் கொண்டிருக்கும் ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) பிராண்டை விற்பனையில் முந்த பலரும் போட்டியிட்டு வருகின்றனர்.

Honda activa electric scooter teaser video out

ஆனால், யாராலும் முடியவில்லை. ஆகையால், ஓலா எலெக்ட்ரிக்கே இந்த பிரிவின் மகுடம் சூடப்படாத மன்னனாக உள்ளது. இதற்கு அடுத்த இடத்திலேயே டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube) மற்றும் பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகிக் கொண்டு இருக்கின்றன.

இந்த மாதிரியான சூழலிலேயே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு போட்டியளிக்கும் விதமாகவும், மற்ற மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தும் விதமாகவும் ஹோண்டா நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் டூ-வீலர் மாடலை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. அதுவும், அதன் முன்னணி இரண்டு சக்கர வாகன மாடலான ஆக்டிவாவின் மின்சார வெர்ஷனையே அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இதன் அறிமுகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. வருகின்ற நவம்பர் 27 அன்றே அது அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இப்போது விற்பனையில் இருக்கும் ஆக்டிவாவைக் காட்டிலும் முற்றிலும் தனித்துவமான லுக்கைக் கொண்டதாகவே ஆக்டிவா எலெக்ட்ரிக் இருக்கும் என நம்பப்படுகின்றது. இதேபோல் பிரத்யேக மற்றும் தனித்துவமான அம்சங்களையும் அது தாங்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக, டிஜிட்டல் திரை, செல்போன் இணைப்பு, அதிக ரேஞ்ச் தரும் திறன் மற்றும் 110 சிசி திறன் கொண்ட ஐசிஇ டூ-வீலர்களுக்கு டஃப் கொடுக்கும் ஆற்றல் ஆகியவற்றை இது கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இன்னும் இந்த வாகனம் பற்றிய எந்தவொரு முக்கிய தகவல்களும் வெளியிடப்படவில்லை.

விரைவிலேயே அதுபற்றிய அனைத்து தகவல்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா எலெக்ட்ரிக்கைப் போல 2030 ஆம் ஆண்டிற்குள் 30-க்கும் மேற்பட்ட மின்சாரத்தில் இயங்கும் இரண்டு சக்கர வாகனங்களை உலக அளவில் விற்பனைக்குக் களமிறக்கத் திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. பராமரிப்பு செலவு குறைவு, பயன்பாட்டிற்கு மிகப் பெரிய அளவில் செலவும் ஆகாது என்பதாலேயே பலர் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்கு மாறி வருகின்றனர். இந்த சூழலையே பயன்படுத்திக் கொள்ளும் விதமாக ஹோண்டா சந்தையில் எலெக்ட்ரிக் டூ-வீலர்களை களமிறக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 12, 2024, 19:26 [IST]
English summary
Honda first time teases activa electric scooter with led headlight ahead of november 27 launch
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X