வேலை வேக வேகமா நடந்துட்டு இருக்கு.. ஓலாவை தொடர்ந்து ஹோண்டாவை நம்ம ஆளுங்க பிடிச்சுட்டு அலைய போறாங்க!
இந்தியாவில் இன்றைய நிலவரப்படி நம்பர் 1 மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) விளங்கிக் கொண்டிருக்கின்றது. சில ஆயிரம் யூனிட்டுகளை விற்பனைச் செய்யவே முன்னணி பிராண்டுகள் பல திணறிக் கொண்டிருக்கின்ற சூழலில், ஒவ்வொரு மாதமும் சர்வ சாதாரணமாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பல ஆயிரம் யூனிட்டுகள் மின்சார இரண்டு சக்கர வாகனங்களை விற்பனைச் செய்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஓலா எலெக்ட்ரிக் பிராண்டுக்கு போட்டியளிக்கும் விதமாக பிரபல டூ-வீலர் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda) களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விரைவிலேயே தன்னுடைய முதல் மின்சாரத்தில் இயங்கும் இரண்டு சக்கர வாகனங்களை ஹோண்டா இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் உலக சந்தைக்கு என ஓர் மிகப் பெரிய பிளானையே வகுத்து இருக்கின்றது. இதேபோல், இந்தியாவிற்காக இந்தியாவுக்கென்றே தயாரிக்கப்பட்ட ஓர் மாடலையே விற்பனைக்குக் களமிறக்கவும் அது திட்டமிட்டு இருக்கின்றது.

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது ஆகும். இந்த தகவலை ஹோண்டா மோட்டார் கார்பரேஷன் (Honda Motor Corporation)-ம் உறுதி செய்திருக்கின்றது. ஹோண்டா 110 சிசி திறன் கொண்ட ஐசிஇ (ICE) டூ-வீலர்களுக்கு இணையான திறன் கொண்ட எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனத்தை உற்பத்தி செய்யவே தற்போது திட்டமிட்டு இருக்கின்றது.
அதேநேரத்தில், முதன்முதலில் ஹோண்டா நிறுவனம் தன்னுடைய எலெக்ட்ரிக் டூ-வீலரை இந்தோனேசியாவிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதற்கு பின்னர் ஜப்பானிலும், ஐரோப்பாவிலும் விற்பனைக்குக் களமிறக்க ஹோண்டா திட்டமிட்டு இருக்கின்றது. இதற்கு பின்னர் இந்தியா போன்ற பிற சந்தைகளில் ஹோண்டா தன்னுடைய மின்சார வாகனத்தை விற்பனைக்குக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்தவகையில், 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஹோண்டாவின் மின்சார டூ-வீலர் விற்பனைக்குக் களமிறங்கிவிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு மிகப் பெரிய போட்டியாக அமையும். இந்தியாவில் ஹோண்டாவின் இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக, நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டருக்கு மிக அமோகமான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் டூ-வீலர் என சொல்லும் அளவிற்கு அதற்கு வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதேமாதிரியான வரவேற்பே நிறுவனத்தின் எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்க்பபடுகின்றது. இதற்கேற்பவே தற்போது ஹோண்டாவின் மின்சார வாகனத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துக் காட்சியளிக்கின்றது.
ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனம் மிக அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், விலை குறைவாகவும் அது விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த யுக்திகளைக் கடைப்பிடிப்பதாலேயே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்தியாவில் தற்போது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு பல்வேறு சிறப்பு சலுகைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், தற்போது தீபாவளியை முன்னிட்டு 72 ஹவர்ஸ் ரஷ் எனும் திட்டத்தையே அது அறிமுகம் செய்திருக்கின்றது. ரூ. 25 ஆயிரம் வரை சிறப்பு தள்ளுபடியையும், ரூ. 30 ஆயிரம் சிறப்பு பலன்களையும் வழங்க இருப்பதாகவே அறிவித்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலைக் கருத்தில் கொண்டே இந்தியாவிற்கான பிரத்யேக மின்சார டூ-வீலர்களை விற்பனைக்குக் களமிறக்க ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. ஆகையால், அந்த வாகனம் இந்தியர்களின் மனதைக் கவரக் கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








