2025 ஹோண்டா யுனிகார்ன் 160 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்.. இந்த விலைக்கா கொண்டாந்திருக்காங்க!
2025 ஆம் ஆண்டு தொடங்க இன்னும் சில தினங்கள் உள்ளன. இந்த நிலையிலேயே ஹோண்டா (Honda) நிறுவனம், தனது முக்கிய தயாரிப்புகளின் 2025 மாடலை வரிசையாக விற்பனைக்குக் கொண்டு வர தொடங்கி இருக்கின்றது. அந்தவகையில், சமீபத்தில் அது 2025 ஆக்டிவா (2025 Activa) ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து, எஸ்பி 160 (SP 160) மாடலையும் அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையிலேயே தற்போது அதன் மற்றுமொரு முக்கிய தயாரிப்பான யுனிகார்ன் 160 பைக்கின் 2025 (2025 Unicorn) மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
ரூ. 1.19 லட்சம் என்கிற விலையிலேயே அது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இது முந்தைய மாடலைக் காட்டிலும் ரூ. 8 ஆயிரம் அதிகம் ஆகும். தினசரி பயன்பாட்டிற்கு உகந்த ஓர் பைக் மாடலே ஹோண்டா யுனிகார்ன் 160 ஆகும்.

இந்த விலை உயர்விற்கு சில அப்டேட்டுகள் பைக்கில் மேற்கொள்ளப்பட்டு இருப்பது முக்கிய காரணமாக இருக்கின்றது. அந்தவகையில், இந்த பைக்கின் முன்பக்க தோற்றம் லேசாக மாற்றப்பட்டு இருக்கின்றது. புதிய எல்இடி ஹெட்லேம்ப், குரோம் அலங்கார அணிகலன் உடன் 2025 யுனிகார்ன்-இல் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இத்துடன், ஓபிடி2பி (OBD2B) தரத்திற்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட எஞ்சினே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. குறைவான மாசு, அதிக மைலேஜ்-க்கு வழி வகுக்கக் கூடிய ஓர் அப்கிரேடே இது ஆகும். இதுபோன்ற மிக மிக கணிசமான மாற்றங்களையே புதிய யுனிகார்ன் பெற்றிருக்கின்றது.
தொடர்ந்து, ஓர் நிற தேர்வை இந்த பைக்கில் இருந்து ஹோண்டா வெளியேற்றியிருக்கின்றது. பியர்ல் சைரன் ப்ளூ (Pearl Siren Blue), இந்த நிற தேர்வே விற்பனையில் இருந்து அகற்றப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், யுனிகார்ன் 160 தற்போது புதிதாக மூன்று நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.
பியர்ல் இக்னீயஸ் பிளாக் (Pearl Igneous Black), மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் (Matte Axis Gray Metallic) மற்றும் ரேடியன்ட் ரெட் மெட்டாலிக் (Radiant Red Metallic) ஆகியவையே அவை ஆகும். எஞ்சினைப் பொருத்த வரை இந்த பைக்கில் 162.7 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
முன்னதாக கூறியதைப் போல இது ஓர் ஓபிடி2பி தரத்திற்கு இணங்க அப்டேட் செய்யப்பட்ட மோட்டார் ஆகும். இது அதிகபட்சமாக 13 பிஎச்பி மற்றும் 14.58 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த எஞ்சின் உடன் பொருத்தப்பட்டு இருக்கின்றது.
ஹோண்டா நிறுவனம் இந்த பைக்கில் தற்போது மிக சிறந்த ரைடு அனுபவத்தை தன்னுடைய வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு முக்கிய அம்சங்களை வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட், முழு டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட அம்சங்களை வழங்கி இருக்கின்றது. இந்த அம்சங்கள் வேற லெவல் ரைடு அனுபவத்தை வழங்கும். குறிப்பாக, இந்த திரை சர்வீஸ் ரிமைண்டர் முக்கிய தகவல்களை எல்லாம் வழங்கக் கூடிய என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் 2025 வெர்ஷனை முந்திக் கொண்டு விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றது. மற்ற நிறுவனங்கள் இன்னும் இந்த விஷயத்தில் மந்த நிலையிலேயே பணி புரிந்துக் கொண்டிருக்கின்றன. எனவே ஆண்டின் தொடக்கத்திலேயே ஹோண்டா நிறுவனம் நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








