படத்துல பாக்குறது பேங்க் லாக்கர் கிடையாது.. ஆக்டிவா எலெக்ட்ரிக் இ: ஸ்கூட்டருக்கு உயிர் கொடுக்க போகும் பேங்க்!
மின்சார வாகன பயன்பாட்டில் காணப்படும் மிகப் பெரிய பிரச்னைகளில் ஒன்றாக சார்ஜிங் நேரம் இருக்கின்றது. சாதாரணமாக ஓர் மின்சார வாகனத்தைச் சார்ஜ் செய்ய 4 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை தேவைப்படுகின்றது. சில வாகனங்களுக்கு இதைவிடவும் அதிகமான நேரம் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தைப் பயன்படுத்தினால் விரைவாக சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். அப்போதும் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது முழுமையாக சார்ஜ் செய்ய தேவைப்படும். இதன் விளைவாகவே பலர் மின்சார வாகனங்களை வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.
பெட்ரோல் வாகனங்களில் உடனடியாக எரிபொருளை நிரப்பிக் கொண்டு பயணிப்பதைப் போலவே மின்சார வாகனத்தையும் நொடிப் பொழுதில் சார்ஜேற்றி புறப்படும் வசதி கொண்டு வரப்பட வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஆனால், சாத்தியமற்ற ஒன்றாகும். அதேவேளையில், பேட்டரி ஸ்வாப்பிங் மையங்கள் (Battery Swapping Terminal) வாயிலாக இதைச் சாத்தியமாக்க முடியும்.

முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை வழங்கும் நிலையங்களே இந்த ஸ்வாப்பிங் பேட்டரி மையங்கள் ஆகும். இத்தகைய மையத்தையே சமீபத்தில் ஹோண்டா நிறுவனம் வெளியீடு செய்தது. அதன் படங்களையே இந்த பதிவில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா, நீண்ட கால எதிர்பார்ப்பிற்கு விருந்தளிக்கும் விதமாக நேற்றைய (நவம்பர் 27) இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்தது.
ஆக்டிவா இ: (Activa e:) மற்றும் யுசி1 (QC1) ஆகியவையே அவை ஆகும். இந்த வாகனங்களுக்கு பயன்படும் விதமாகவே ஹோண்டா நிறுவனம் பேட்டரி ஸ்வாப்பிங் மையங்களை நாடு முழுவதும் அமைக்க இருக்கின்றது. இதையே சமீபத்தில் வெளியீடு செய்தது. ஆக்டிவா இ: மற்றும் யுசி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அறிமுகம் நிகழ்வின் வாயிலாகவே தன்னுடைய பேட்டரி ஸ்வாப்பிங் மையத்தையும் அது பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருப்பதாக அறிவித்தது.
முதல் கட்டமாக நாட்டின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே இந்த பேட்டரி ஸ்வாப்பிங் மையம் திறக்கப்பட இருக்கின்றது. அதேவேளையில், விரைவில் நாடு முழுவதும் இது பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பெங்களூரு, டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களிலேயே இந்த வசதி முதலில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
எனவே இந்த நகர வாசிகளால் தங்களின் ஹோண்டா எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் சார்ஜ் இல்லாமல் செயலிழந்துப் போகும் எனில் உடனடியாக பேட்டரி ஸ்வாப்பிங் மையங்கள் வாயிலாக உயிர் கொடுத்துக் கொள்ள முடியும். நீண்ட நேரம் சார்ஜாகும் வரை காத்திருக்க வேண்டும் என்கிற நிலை இதன் வாயிலாக தவிர்க்கப்படும்.
இந்த காரணத்திற்காகவே இந்த ஸ்வாப்பிங் மையத்தை நாடு முழுவதும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் தற்போது ஹோண்டா களமிறங்கி இருக்கின்றது. இதன் வாயிலாக மின்சார இரண்டு சக்கர வாகனங்களை வாங்கும் எண்ணம் இல்லாதவர்களையும் கவர்ந்திழுக்க முடியும் என நிறுவனம் நம்புகின்றது. மிக முக்கியாக தன்னுடைய போட்டியாளர்களுக்கு கூடுதல் கடுமையான போட்டிச் சூழலை ஏற்படுத்தும் விதாக இந்த தொழில்நுட்பத்தை அது தத்தெடுத்து இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த பிரிவில் ஓலா எலெக்ட்ரிக் பிராண்டே மிகப் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றது. இதற்கு டஃப் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களையும், அதைத் தொடர்ந்து பேட்டரி ஸ்வாப்பிங் மையத்தையும் அது நாட்டில் அறிமுகம் செய்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








