இந்த குட்டி பைக்கை வாங்க கடும் போட்டி! ஏலத்துல எடுக்க புக்கிங் குவிந்தது!

ஹோண்டா நிறுவனம் தனது மங்கி என்ற மினி பைக்கை ஸ்டார் வார்ஸ் எடிசன் உடன் இணைத்து புதிய வடிவமைப்பில் பாங்காக் மோட்டார் ஷோ கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பைக்குகள் மட்டுமே தயாரிக்கப்படும் நிலையில் இந்த பைக்குகளை வாங்க ஏகப்பட்ட போட்டி இருக்கிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

தற்போது தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக்கில் பாங்காக் இன்டர்நேஷனல் மோட்டார் ஷோ என்ற ஆட்டோமொபைல் குறித்த கண்காட்சிகள் நடந்து வருகிறது. இதில் வாகனம் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் தயாரிப்புகளை காட்சி படுத்தி வருகின்றன. இதில் பல வித்தியாசமான வாகனங்கள் எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இது அங்குள்ள மக்களை மிகப்பெரிய அளவில் ஈர்த்துள்ளது.

honda monkey star wars

இப்படியாக ஹோண்டா நிறுவனம் தனது மினி பைக்கான மங்கி என்ற பைக்கை ஸ்டார் வார்ஸ் எடிசனில் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த பைக்கின் வெளிப்புறத் தோற்றத்தை ஸ்டார் வார்ஸ் எடிசன் போல வடிவமைத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மிக வித்தியாசமான தனித்துவம் நிறைந்த அம்சங்கள் கொண்ட பைக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பைக் மொத்தம் இரண்டு விதமான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. டார்க் சைடு மங்கி மற்றும் லைட் சைடு மங்கி என இரண்டு விதமான தோற்ற வடிவமைப்பில் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இதன் பெட்ரோல் டேங்கில் ஸ்டார் வார்ஸ் தீம் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்கில் கருப்பு நிறத்திலும் ஆங்காங்கே குரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட லுக்கில் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது.

honda monkey star wars

லைட் சைடு மங்கி பைக்கை பொறுத்தவரை போல்டாகவும் டூயல் டோன் கலரிலும் உருவாக்கப்பட்டுள்ளது. கிரே மற்றும் ஒயிட் ஆகிய நிறங்களில் இதன் பெட்ரோல் டேங்க் உருவாக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு பகுதியில் உள்ள கவர்களில் நீல நிறம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஹேண்டில் கிரிப்கள் நீல நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதன் பெட்ரோல் டேங்கிலும் ஸ்டார் வார்ஸ் பிராண்ட் செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பைக்கிலும் ஸ்டார் வார்ஸ் குறித்த பல்வேறு பேக்கேஜ்கள் இணைக்கப்பட்டுள்ளன. முக்கியமான எல்இடி லைட் பாக்ஸ், லைட் சாபருடன் கூடிய எல்இடி லைட்கள், ஸ்டார் வார்ஸ் பைலட் ஜாக்கெட் மற்றும் கீ செயின் ஆகியன இந்த பைக் உடன் சேர்ந்து விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்கை ஹோண்டா நிறுவனத்துடன் சேர்ந்து எச்2சி டிசைன் என்ற நிறுவனமும் சேர்ந்து இந்த பைக்கை வடிவமைத்துள்ளது.

இந்த பைக் ஒரு லிமிடெட் எடிஷன் பைக்காக உருவாக்கப்பட்டுள்ளதால் டார்க் சைடு மங்கி மற்றும் லைட் சைடு மங்கி ஆகிய இரண்டு பைக்குகளும் தலா 150 பைக்குகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. அதற்கு மேல் இந்த பைக்கில் தயாரிக்கப்படுவதில்லை. மொத்தம் உள்ள 300 பைக்குகளையும் ஏலத்தில் விடுவதற்காக ஹோண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த பைக்குகளுக்கான ஏலம் பாங்காக் இன்டர்நேஷனல் மோட்டார் ஷோ கண்காட்சியிலேயே நடக்கிறது. வரும் 7ம் தேதி இந்த பைக்கிற்கான ஏலம் என்பது நடக்கிறது. இந்த பைக்கில் பங்கேற்பதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்டது. கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி முதல் முன்பதிவு நடந்து வருகிறது. இந்த பைக் எவ்வளவு தொகைக்கு ஏலம் போகும் என்று ஆவல் தற்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டில் சிறிய ரக பைக் இருப்பதால் இந்த பைக்கை ஏராளமான மக்கள் ஏலத்திற்கு எடுக்க முன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மிக அதிக தொகைக்கு இந்த பைக்குகள் ஏலம் போக வாய்ப்புகள் உள்ளன. இந்த பைக் ஒரு ஸ்பெஷாலிட்டி பைக்காக இருப்பதால் அந்நாட்டில் உள்ள பைக் விரும்பிகள் பலர் இந்த பைக்கை வாங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தாய்லாந்து போலவே இந்தியாவிலும் சிறிய ரக பைக்குகளுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்த மங்கி பைக்கை இந்தியாவிற்கு கொண்டு வந்தால் இந்தியாவிலும் இந்த பைக் நல்லா விற்பனையை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஹோண்டா நிறுவனம் முடிவு செய்தால் விரைவில் இப்படியான ஒரு செக்மென்ட்டே இந்தியாவில் உருவாகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 4, 2024, 14:27 [IST]
English summary
Honda monkey star wars edition bangkok motor show
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+