ஹோண்டா ஃபேக்ட்ரி ரெஸ்ட் இல்லாம ஓடுது!! மாதத்திற்கு 5 லட்சம் 2-வீலர் சேல்ஸ் ஆகினால் பின்ன என்ன பண்றது...
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle & Scooter India) நிறுவனம் சந்தையில் கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்த 2-வீலர்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்கு அடுத்து, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனமாக 2வது இடத்தில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் உள்ளது. ஹோண்டா இந்த அளவிற்கு இந்தியன் மார்க்கெட்டில் வளர்ந்திருப்பதற்கு முக்கிய காரணம், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் ஆகும்.

ஏனெனில், இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்கூட்டராக ஹோண்டா ஆக்டிவா விளங்குகிறது. ஆக்டிவா ஸ்கூட்டர் மட்டுமின்றி, ஷைன் உள்ளிட்ட விலை குறைவான பைக்குகளும் ஹோண்டா பிராண்டில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படுகின்றன. இப்படிப்பட்ட ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 5 லட்சத்து 41,946 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இது கடந்த ஆண்டு ஏப்ரல் உடன் ஒப்பிடுகையில், 45% அதிகமாகும். அதாவது, 2023 ஏப்ரலில் விற்பனையான 2-வீலர்களில் பாதிக்கு மேல் அதிகமாக நடந்து முடிந்த ஏப்ரலில் ஹோண்டா விற்பனை செய்துள்ளது. இந்த 5 லட்சத்து 41,946 வாகனங்களில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை 4 லட்சத்து 81,046 ஆகும். அதாவது, ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் வணிகம் கிட்டத்தட்ட 90% உள்நாட்டு விற்பனையை சார்ந்துள்ளது.

2023 ஏப்ரலை காட்டிலும் கடந்த ஏப்ரலில் சுமார் 42% அதிக ஹோண்டா 2-வீலர்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேபோல், இந்தியாவில் ஹோண்டா 2-வீலர்ஸின் ஏற்றுமதியும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 60,900 இரு சக்கர வாகனங்களை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
ஹோண்டா 2-வீலர்ஸ் ஏற்றுமதி கடந்த ஆண்டு ஏப்ரலை காட்டிலும் 67% அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சில முக்கியமான நடவடிக்கைகளையும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஹரியானாவில் உள்ள ஹோண்டாவின் தொழிற்சாலையில் புதிய அசெம்பிளி லைன் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஏப்ரலில் கிழக்கு இந்திய பகுதியில் ஒட்டுமொத்த 2-வீலர்கள் விற்பனையில் 80 இலட்சத்தை ஹோண்டா கடந்தது. இதற்கிடையில் டீலர்ஷிப் ஷோரூம்களின் எண்ணிக்கையையும் தொடர்ந்து அதிகரித்துவரும் ஹோண்டா நிறுவனம் உத்தர பிரதேசத்தின் அயோத்தி, மஹாராஷ்டிராவின் தானே மற்றும் புது டெல்லியில் புதியதாக பிக்விங் டீலர்ஷிப் ஷோரூமை திறந்துள்ளது. அதேபோல், உத்தர பிரதேசத்தில் டெயோரியா என்கிற நகரத்தில் புதியதாக ரெட் விங் டீலர்ஷிப் மையத்தையும் திறந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா, உலகின் மிக பெரிய 2-வீலர் சந்தை. அதேபோல், இந்தியாவில் வாகனங்களை உற்பத்தி செய்வதும் மற்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் செலவு குறைந்ததாக உள்ளது. இதன் காரணமாகவே, ஹோண்டா போன்ற நிறுவனங்கள் இந்தியாவை வாகன உற்பத்தி மையமாக கருதுகின்றன.


Click it and Unblock the Notifications









