ஆக்டிவாவையே தூக்கி சாப்பிட போகும் ஸ்கூட்டரை களமிறக்கும் ஹோண்டா! டிவிஎஸ் நிறுவனத்திற்கு செக் வைக்க போறாங்க!

இந்திய சந்தையில் ஹோண்டா (Honda) நிறுவனத்தின் டூவீலர்களுக்கு மிகப்பெரிய அளவிலான வரவேற்பு உள்ளது. குறிப்பாக ஹோண்டா நிறுவனத்தின் ஸ்கூட்டர்களுக்கு என தனியாக மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹோண்டா நிறுவனத்தின் பைக்குகளை காட்டிலும், ஸ்கூட்டர்கள்தான் அதிகளவில் விற்பனையாகி கொண்டுள்ளன. ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) மற்றும் ஹோண்டா டியோ (Honda Dio) ஆகிய ஸ்கூட்டர்கள்தான் இதற்கு மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுகின்றன. இந்த சூழலில் இந்தியாவின் ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் தன்னுடைய ஆதிக்கத்தை மேலும் அதிகரித்து கொள்ள ஹோண்டா நிறுவனம் விரும்புகிறது.

இதன் ஒரு பகுதியாக இந்திய சந்தையில் புத்தம் புதிய ஸ்கூட்டர் ஒன்றை ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக அது ஹோண்டா என்எக்ஸ் 125 (Honda NX 125) ஸ்கூட்டராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Honda NX 125

இதை கிட்டத்தட்ட உறுதி செய்யும் வகையில், இந்திய சந்தையில் என்எக்ஸ் 125 ஸ்கூட்டருக்கான டிசைன் காப்புரிமைக்கு ஹோண்டா நிறுவனம் தற்போது பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக ஹோண்டா என்எக்ஸ் 125 ஸ்கூட்டர் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு வெகுவாக எழுந்துள்ளது.

ஹோண்டா என்எக்ஸ் 125 ஸ்கூட்டர், வெளிநாடுகளில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், 125 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8.7 பிஹெச்பி பவர், 9.7 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம்.

Honda Activa 125

இந்த இன்ஜின் உடன், சிவிடி கியர் பாக்ஸ் வழங்கப்படலாம். இந்த ஸ்கூட்டரின் முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பகுதியில் சிங்கிள் ஷாக் அப்சார்பரும் வழங்கப்படலாம். அத்துடன் முன் பகுதியில் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் அலாய் வீல்கள் ஆகிய அம்சங்களையும் நாம் எதிர்பார்க்க முடியும்.

இதுதவிர முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், 6 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிபொருள் டேங்க் ஆகிய அம்சங்களும் ஹோண்டா என்எக்ஸ் 125 ஸ்கூட்டரில் இடம்பெறலாம். இந்த ஸ்கூட்டரின் எடை அனேகமாக 106 கிலோ என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், டிவிஎஸ் என்டார்க் 125 (TVS NTORQ 125) உள்ளிட்ட ஸ்கூட்டர்களுடன், ஹோண்டா என்எக்ஸ் 125 ஸ்கூட்டர் போட்டியிடும். டிவிஎஸ் என்டார்க் 125 விற்பனை செய்யப்படும் அதே விலையில்தான், ஹோண்டா என்எக்ஸ் 125 ஸ்கூட்டரும் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமா? என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. காப்புரிமை பணிகளை மட்டும் வைத்து, ஒரு வாகனம் விற்பனைக்கு வரும் என உறுதியாக சொல்லி விட முடியாது. எனவே ஹோண்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை காத்திருப்பது நல்லது.

More from DriveSpark

Article Published On: Monday, September 16, 2024, 15:18 [IST]
English summary
Honda nx 125 patented in india tvs ntorq scooter rival
மேலும்... #honda motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+