இந்தியர்களுக்கு இப்படி ஒரு ஹோண்டா பைக்கா! ரோட்டுல ஓட்டிட்டு போனா ஒருத்தர் விடாம திரும்பி பார்ப்பாங்க!
உலக புகழ் பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா இந்தியாவில் மிகவும் அசத்தலான பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த பைக்கின் சிறப்புகள் என்ன? அதன் விலை எவ்வளவு? என்ன மாதிரியான திறன் கொண்ட எஞ்சின் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது? இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
பிரபல இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda), இந்தியாவில் ஓர் அசத்தலான பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. என்எக்ஸ்500 (NX500) எனும் புதுமுக பைக்கையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் 471 சிசி திறன் கொண்ட பைக் ஆகும்.

இந்த பைக்கில் லிக்யூடு கூல்டு 471சிசி பாரல்லல் ட்வின் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 47.5 எச்பி மற்றும் 43 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த எஞ்சினைக் கட்டுப்படுத்த வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த கியர்பாக்ஸ் உடன் ஸ்லிப் மற்றும் கிளட்ச் அசிஸ்ட்டும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இத்தகைய சூப்பரான வசதிக் கொண்ட பைக்கிற்கு அதிகபட்ச விலையாக ரூ. 5.90 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது ஓர் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த பைக்கில் மிக சிறந்த இயக்க அனுபவத்தை அதன் பயனர்கள் பெற வேண்டும் என்பதற்காக அசத்தலான சஸ்பென்ஷன் செட்-அப் வழங்கப்பட்டு இருக்கின்றது.

டைமண்ட் ஃப்ரேம் கொண்ட யுஎஸ்டி ஃபோர்க் முன் பக்கத்திலும், ப்ரீலோடு அட்ஜஸ்டபிள் மோனோஷாக் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இவை ஷோவா பிராண்டுடையதாகும். இந்த பைக்கில் உள்ள ஃப்யூவல் டேங்கில் முழுமையாக 17.5 லிட்டர் வரை பெட்ரோலை நிரப்பிக் கொள்ள முடியும்.
இவ்வாறு முழுமையாக பெட்ரோலை இந்த பைக்கில் நிரப்பிக் கொள்ளும்பட்சத்தில் சுமார் 480 கிமீ தூரம் வரை பயணித்துக் கொள்ள முடியும். இந்த பைக் ஒரு லிட்டருக்கு 27.78 கிமீ வரை மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த பைக் அதிகபட்சமாக மணிக்கு 182 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.

இதுதவிர, இதனால் வெறும் 5.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும். இத்தகைய மிக சிறந்த திறனைக் கொண்ட ஓர் மோட்டார்சைக்கிளே ஹோண்டா என்எக்ஸ்500 ஆகும். இந்த பைக்கின் அதீத வேகத்தக் கன்ட்ரோல் செய்ய ஏதுவாக மிக சிறந்த பிரேக்கிங் சிஸ்டம் ஹோண்டா என்எக்ஸ்500 பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
நிஸின் பிராண்டுடைய ஆக்ஸியல் காலிபர்கள் கொண்ட 296 மிமி டிஸ்க் முன் பக்கத்திலும், 240 மிமீ டிஸ்க் பிரேக் பின் பக்க வீலிலும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் வழங்கப்பட்டு இருக்கின்றன. பைக்கின் கவர்ச்சியான தோற்றத்திற்கு எடுப்பாக அமைகின்ற வகையில் 19 அங்குல முன் வீலிலும், 17 அங்குல பின் வீலிலும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
மேலும், இளம் தலைமுறையினரைக் கவரும் பொருட்டு இந்த பைக்கில் 5 அங்குல டிஎஃப்டி திரை வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் வண்ண திரை ஆகும். அதிக வெயில் நேரத்திலும் இதை பயன்படுத்திக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இந்த திரையின் பின்பக்க லைட்டை மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது.
வெள்ளை, பிளாக் மற்றும் ஆட்டோ ஆகிய மோட்களே வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த திரையைக் கொண்டு ஆப்பிள் அல்லது ஆன்ட்ராய்டு போன்களையும் இணைத்துக் கொள்ள முடியும். இதுதவிர இந்த திரை வாயிலாக திருப்பத்திற்கு திருப்பம் வழி தடம் பற்றிய தகவலை வழங்கும் வசதியையும் கொண்டிருக்கின்றது. இதுதவிர, செல்போனுக்கு வரும் அழைப்புகளை ஏற்றல் மற்றும் மியூசிக் கன்ட்ரோல் உள்ளிட்டவற்றைச் செய்துக் கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு டஃப் கொடுக்க முடியாமல் போட்டி நிறுவனங்கள் பல திணறிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான ஓர் பிராண்டே தற்போது அட்டகாசமான பைக்கை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு பிரீமியம் தர மோட்டார்சைக்கிள் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









