இந்த ஹோண்டா பைக் இந்தியாவில் யார்கிட்டயும் இல்ல!! இவர்தான் முதல் கஸ்டமர்... அப்படி என்ன இருக்கு இந்த பைக்கில்?

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம் அதன் என்.எக்ஸ்500 (NX500) பைக்கின் டெலிவிரிகளை அதிகாரப்பூர்வமாக துவங்கி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இணையத்தில் வெளியாகி உள்ள படங்களையும், இந்த புதிய ஹோண்டா மோட்டார்சைக்கிளை பற்றியும் விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் சமீபத்தில் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்திய மோட்டார்சைக்கிள்களுள் ஒன்று என்.எக்ஸ்500 ஆகும். பிரீமியம் மல்டி-சிலிண்டர் அட்வென்ச்சர் பைக்கான இது ரூ.5.90 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

honda nx500

முன்பு விற்பனையில் இருந்த ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கின் இடத்தை நிரப்பும் பொருட்டு இந்த பைக்கை கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவில் ஹோண்டா அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், என்.எக்ஸ்500 பைக்கின் டெலிவிரிகள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. ஹோண்டாவின் இவ்வாறான விலையுயர்ந்த பைக்குகள் ஹோண்டா பிக் விங் டீலர்ஷிப் ஷோரூம்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

ஹரியானாவின் குருக்ராமில் உள்ள ஹோண்டா பிக் விங் ஷோரூம் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் தனது என்.எக்ஸ்500 பைக்கை டெலிவிரி பெறும் படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஹோண்டா என்.எக்ஸ்500 பைக்கின் இந்த முதல் உரிமையாளரின் பெயர் அபிஷேக் மிஷ்ரா ஆகும். பைக்கை கேக் வெட்டி கொண்டாட்டத்தோடு அபிஷேக் மிஷ்ரா டெலிவிரி எடுத்துள்ளார்.

honda nx500 delivery starts

இந்த ஹோண்டா அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. அதாவது, முற்றிலுமாக வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட உள்ளது. இதனாலேயே இந்த பைக்கின் விலை சற்று அதிகமாக உள்ளது என்று கூட சொல்லலாம். ஆனால், இதற்குமுன் இதன் இடத்தில் விற்பனையில் இருந்த சிபி500எக்ஸ் பைக் சுமார் ரூ.6.87 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இத்தனைக்கும், சிபி500எக்ஸ் பைக் சிகேடி முறையில், அதாவது பாகங்களாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பொதுவாக, முற்றிலும் வெளிநாட்டில் தயாரிக்கப்படுவதை காட்டிலும், இவ்வாறு சிகேடி முறையில் தயாரிக்கப்படுவதால் வாகனத்தின் விலை கொஞ்சம் குறைவாக இருக்கும். ஆனால், அப்போதும் சிபி500எக்ஸ் பைக்கின் விலை அதிகமாக இருந்தது.

honda nx500 delivery starts

மேலும், சிபி500எக்ஸ் பைக்கை காட்டிலும் புதிய என்.எக்ஸ்500 பைக் நிறைய மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், யுஎஸ்டி டெலெஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன், முன் சக்கரத்தில் டபுள் டிஸ்க் பிரேக் செட்-அப் உள்ளிட்டவற்றை புதிய என்.எக்ஸ்500 பைக் பெற்றுள்ளது. ஆனால், இந்த அம்சங்கள் பழைய சிபி500எக்ஸ் பைக்கில் கிடைக்கவில்லை.

அத்துடன், 5-இன்ச்சில் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் ஸ்க்ரீன் இந்த புதிய பைக்கில் இடம்பெற்றுள்ளது. ஆனால், சிபி500எக்ஸ் பைக்கில் எல்சிடி ஸ்க்ரீன் மட்டுமே கொடுக்கப்பட்டது. கிராண்ட் பிரிக்ஸ் சிவப்பு, மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் மற்றும் பேர்ல் ஹோரிசோன் வெள்ளை என 3 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் இந்த பைக்கை வாங்கலாம். முதல் கஸ்டமரான அபிஷேக் மிஷ்ரா கிராண்ட் பிரிக்ஸ் சிவப்பு நிறத்தில் என்.எக்ஸ்500 பைக்கை வாங்கி உள்ளார்.

honda nx500 delivery starts

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தானும் முன்னணி பைக் நிறுவனம் தான் என்பதை காட்ட ஹோண்டா அவ்வப்போது இவ்வாறான புது, புது மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்துகிறது. இருப்பினும், எதுவும் ஒர்க்-அவுட் ஆனது போல் தெரியவில்லை. ஏனெனில், சிபி500எக்ஸ் அட்வென்ச்சர் பைக் சில வருடங்களுக்கு முன்னர் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது அதற்கு மாற்றாக என்.எக்ஸ்500 வந்துவிட்டது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 10, 2024, 0:56 [IST]
English summary
Honda nx500 deliveries starts in india pictures out check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X