எல்லாருமே ஆச்சரியத்துல இருக்காங்க.. 7ஆண்டுகள் வாரண்டியை எந்த கட்டணமும் இல்லாமல் வழங்குவதாக அறிவித்த ஹோண்டா!

முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda), வழக்கமான 3 ஆண்டுகள் வாரண்டி திட்டத்துடன் சேர்த்து, கூடுதலாக 7 ஆண்டுகள் வாரண்டி திட்டத்தையும் தன்னுடைய இரண்டு சக்கர வாகனங்களுக்கு வழங்க இருப்பதாக இந்தியாவில் அறிவித்து இருக்கின்றது. கூடுதலாக எந்தவொரு கட்டணமும் இல்லாமலேயே இந்த கூட்டப்பட்ட வாரண்டி திட்டத்தை நிறுவனம் வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. தன்னுடைய தயாரிப்புகளின் பக்கம் இந்திய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டே இந்த சிறப்பு திட்டத்தை ஹோண்டா அறிவித்திருக்கின்றது. ஆனால், நிறுவனத்தின் குறிப்பிட்ட சில தயாரிப்புகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

சிபி350, ஹைனெஸ் சிபி350, சிபி 350ஆர்எஸ், சிபி 300எஃப் மற்றும் சிபி 300ஆர் ஆகிய மாடல்களுக்கே இந்த திட்டம் பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாடல்கள் அனைத்தும் நிறுவனத்தின் பிக்-விங் ஷோரூம் வாயிலாக விற்கப்படும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த டூ-வீலர் மாடல்கள் ஆகும். இவற்றிற்கே இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

Honda s 7-year warranty

ஹோண்டா நிறுவனம் பிரீமியம் தர இரண்டு சக்கர வாகனங்களை விற்பனைச் செய்வதற்கு என்று செயல்படுத்தி வரும் ஓர் ஷோரூமே பிக்-விங் ஆகும். வழக்கமான மூன்று ஆண்டுகள் வாரண்டியுடன் சேர்த்தே இந்த 7 ஆண்டுகள் கூட்டப்பட்ட வாரண்டியையும் வழங்க இருப்பதால் ஒட்டுமொத்தமாக 10 ஆண்டுகள் வாரண்டியுடன் மேலே பார்த்த பைக் மாடல்களை இந்தியர்களால் வாங்கிக் கொள்ள முடியும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

இதில் கூடுதல் சுவாரஷ்யம் என்னவென்றால் இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்பட இருக்கின்றது. அதுவும், முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட இருக்கின்றது. இதுதவிர, முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களால் வருகிறார்களோ, இல்லையோ இந்த சலுகை 30 செப்டம்பர் உடன் காலாவதியாகிவிடும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

முன்னதாக, இதே ஹோண்டா நிறுவனம் பிக்-விங் ஷோரூம்களில் விற்பனைக்குக் கிடைக்கும் முன்னணி இரண்டு சக்கர வாகன மாடல்களுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடியை அறிவித்தது. இது முதல் 5 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த சலுகையும் வருகின்ற செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையிலேயே கூடுதலாக வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு கூட்டப்பட்ட வாரண்டி திட்டத்தையும் இலவசமாக வழங்க இருப்பதாக ஹோண்டா அறிவித்து இருக்கின்றது. ஹோண்டா நிறுவனம் இந்தியர்களின் ஃபேவரிட் நிறுவனங்களில் ஒன்று ஆகும். இந்த நிறுவனத்தின் ஆக்டிவாவிற்கு இப்போதும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

ஆகையால், இந்த மாடலிலேயே நிறுவனம் முதலில் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இது விற்பனைக்கு வரும் எனில் ஓலா எலெக்ட்ரிக், டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு கடுமையான போட்டியாளனாக அது மாறும்.

தொடர்ந்து, இதே ஹோண்டா நிறுவனம் கார்களில் மட்டுமே ஆட்டோமேட்டிக் கிளட்ச் அம்சத்தை, தன்னுடைய மோட்டார்சைக்கிள்களில் வழங்கும் முயற்சியில் ஹோண்டா களமிறங்கி இருக்கின்றது. அந்த அம்சத்திற்கு அது இ-கிளட்ச் எனும் பெயரை சூட்டி இருக்கின்றது. இதுபோன்று புது விதமான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதற்கான பணியிலும் ஹோண்டாய களமிறங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே, சிறப்பு சலுகைகள் வாயிலாகவும் வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் ஹோண்டா களமிறங்கி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரீமியம் தரம் அம்சங்கள் நிறைந்த டூ-வீலர்களின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டே கூட்டப்பட்ட வாரண்டி திட்டத்தை ஹோண்டா இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Sunday, July 28, 2024, 5:00 [IST]
English summary
Honda offers 7 year extended warranty on select bike models
மேலும்... #honda motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+