இனி ரோடு ஃபுல்லா இந்த வண்டி தான் ஓடப்போகுது! ஹோண்டாவின் இவி ஸ்கூட்டர் இது தான்!

ஹோண்டா நிறுவனம் எலெக்ட்ரிக் டூவீலர் சந்தையில் தற்போது தனது காலடி தடத்தை எடுத்து வைப்பதற்காக முதல் படிக்கட்டை எட்டியுள்ளது. அதன்படி நிறுவனம் இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இன்று காட்சிப்படுத்தியுள்ளது. ஹோண்டா ஆக்டிவா இ மற்றும் ஹோண்டா QC1 என்ற பெயரில் இந்த ஸ்கூட்டர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஹோண்டா QC1 என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காண போகிறோம்.

ஹோண்டா நிறுவனம் தனது QC1 என்ற எலvக்ட்ரிக் ஸ்கூட்டரை சிம்பிளாகவும், மினிமாலாகவும் வடிவமைத்துள்ளது. இதன் வடிவமைப்பு பாடி பேனல்கள் எல்லாம் சிறப்பாக உள்ளன. எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. அதிக ஸ்டோரேஜ் வசதி இருக்கும் வகையில் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐந்து விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது.

Honda QC1 unveiled

ஹோண்டா QC1 ஸ்கூட்டரை பொறுத்தவரை மொத்தம் பியர்ல் ஷேலோ ப்ளூ, பியர்ல் செரினிட்டி ப்ளூ, பியர்ல் மிஸ்டி ஒயிட், பியர்ல் நைட் ஸ்டார் பிளாக், மேட் ஃபாகி சில்டவர் மெட்டாலிக் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த நிறங்கள் எல்லாம் மக்கள் அதிகம் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது நிறங்களுக்காகவே மக்கள் பலர் இந்த ஸ்கூட்டரை விரும்பி வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை 1.5 கிலோ வாட் ஹவர் பிக்ஸட் பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முழு சார்ஜில் இந்த ஸ்கூட்டர் 80 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்த ஸ்கூட்டர் 50 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Honda QC1 unveiled

இது ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏற 4 மணி நேரம் 30 நிமிடம் வரை எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் இரண்டு விதமான ரைடு மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. எக்கோ மற்றும் ஸ்டாண்டர்ட் ஆகிய மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. ரைடு மோடுக்கு தகுந்தார் போல ரேஞ்ச் மாறுபடும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஸ்கூட்டரில் உள்ள அம்சங்களை பொருத்தவரை அனைத்து லைட்டுகளும் எல்இடி லைட்டுக்களாக வழங்கப்பட்டுள்ளன. இதுபோக 5 இன்ச் கொண்ட எல்இடி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. யூஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்டுகளும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரில் உள்ள ஸ்டோரேஜ் வசதி தான் மிக முக்கியமான வசதியாக பார்க்கப்படுகிறது.

Honda QC1 unveiled

இந்த ஸ்கூட்டரில் மொத்தம் 26 லிட்டர் கொண்ட ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் டெலஸ்கோபிக் போர்க்கும் பின்பக்கம் டூயல் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கை பொருத்தவரை இரண்டு வீல்களிலும் டிரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்கம் 12 இன்ச் கொண்ட வீலும் பின்பக்கம் பத்து இன்ச் கொண்ட வீலும் அலாய் வீல்களாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரின் விலை குறித்த விபரங்களை நிறுவனம் வெளியிடவில்லை. வரும் ஜனவரி மாதம் இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங் துவங்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது. புக்கிங் துவங்கும் போது இந்த ஸ்கூட்டருக்கான விலைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்கூட்டரின் டெலிவரி வரும் பிப்ரவரி மாதம் முதல் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

ஏற்கனவே இந்திய மார்க்கெட்டில் டூவீலர் சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகமாகி வரும் நிலையில், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த QC1 என்ற ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக அளவில் விற்பனையாகி வரும் நிலையில், ஹோண்டா நிறுவனமும் இதில் இறங்கியுள்ளது. மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஓலா நிறுவனத்திற்கு போட்டியாக ஹோண்டா நிறுவனமும் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்ய வாய்ப்பு இருப்பதாக மக்கள் மத்தியில் பேச்சு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 27, 2024, 13:41 [IST]
English summary
Honda qc1 unveiled range features bookings details
மேலும்... #honda motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X